•  

நீ அங்கிட்டு படு, நான் இங்கிட்டு படுக்கறேன்... சனிக்கிழமை பார்த்துக்கலாம்!

இதுக்கெல்லாமாப்பா கால நேரம் பார்ப்பாங்க.. இதைப் படிக்கும்போது உங்கள் மனதில் இப்படி ஒருகேள்வி வரலாம். ஆனால் நெஜமாத்தானாம், இதுக்கும் கூட நல்ல நாள் இருக்காம்.. தொடர்ந்து படிங்க...செக்ஸ் உறவுக்கேற்ற நாள் எது என்பது குறித்து நடத்தப்பட்ட சர்வேதான் இது. இதில்தான் சில சுவாரஸ்யமான தகவல்களைக் கூறியுள்ளனர்.ஒவ்வொரு நாளும் செக்ஸ் உறவுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்பதைச் சொல்கிறது இந்த சர்வே. அதன்படி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்குத்தான் தம்பதிகளிடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறதாம்.செவ்வாய்க்கிழமை வேணாம்

செவ்வாய்க்கிழமை வேணாம்

வார நாட்களிலேயே திங்கள், செவ்வாய்க்கிழமைகளுக்குத்தான் மிகவும் குறைந்த அளவிலான ஆதரவு இருக்கிறதாம். அதாவது இந்தநாட்களில் செக்ஸ் வைத்துக் கொள்வதில்லை என்று பலரும் கூறியுள்ளனர். குறிப்பாக செவ்வாய்க்கிழமை என்றாலே பெரும்பாலானோரும் முகம் சுளித்தனராம்.

4 சதவீதம் பேர் மட்டுமே

4 சதவீதம் பேர் மட்டுமே

செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பாக உறவு கொள்வோம் என்று கூறியவர்களின் எண்ணிக்கை வெறும் 4 சதவீதம் மட்டும்தானாம்.

திங்கள்கிழமைக்கு 8%

திங்கள்கிழமைக்கு 8%

திங்கள்கிழமைளில் உறவு கொள்வோம் என்று 8 சதவீதம் பேரும், புதன்கிழமைக்கு 7 சதவீதம் பேரின் ஆதரவும் கிடைத்துள்ளது.

தனித்தனியே..  தன்னந்தனியே...

தனித்தனியே.. தன்னந்தனியே...

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் பெரும்பாலான தம்பதிகள் தொட்டுக் கொள்வது கூட கிடையாதாம். மாறாக தனித் தனியேதான் படுப்பார்களாம். சேர்ந்து படுத்தாலும் கூட உறவு இருக்காதாம்.

வியாழக்கிழமை சற்று ஓ.கே.

வியாழக்கிழமை சற்று ஓ.கே.

வியாழக்கிழமை சற்று பரவாயில்லை.அந்தநாளில் உறவு வைத்துக் கொள்வோம் என்று 6 சதவீதம் பேர் சொல்லியுள்ளனர்.

வார இறுதி நாட்கள்தான் சூப்பர்

வார இறுதி நாட்கள்தான் சூப்பர்

பெரும்பாலான ஜோடிகளுக்கு வார இறுதி நாட்கள்தான் சவுகரியமாக இருக்கிறதாம். அதாவது சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களையும் முடிந்த அளவுக்குப் பயன்படுத்திக் கொள்வோம் என்று ஜோடிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமைக்கும் நல்ல வரவேற்பு

வெள்ளிக்கிழமைக்கும் நல்ல வரவேற்பு

அதேபோல வெள்ளிக்கிழமைக்கும் நல்ல வரவேற்பு உள்ளதாம். சிலர், வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை ஜமாய்த்து விடுவோம் என்று கண் சிமிட்டியபபடி கூறினராம்.

லைட் எரியட்டுமே ராசா...

லைட் எரியட்டுமே ராசா...

பெண்களுக்கு உறவின்போது வெளிச்சம் இருந்தால் பிடிக்காது என்பார்கள். ஆனால் இந்த சர்வேயில் உறவின்போது விளக்கை அணைக்க விரும்புவதில்லை என்ற பல பெண்கள் சொன்னார்களாம்.

66 சதவீதம் பெண்களுக்கு வெளிச்சம் வேண்டுமாம்

66 சதவீதம் பெண்களுக்கு வெளிச்சம் வேண்டுமாம்

66 சதவீதம் பெண்கள், வெளிச்சத்தில் உறவு கொள்ளப் பிடிக்கும் என்று கூறியுள்ளனர். அதேபோல 88 சதவீத ஆண்களுக்கும் வெளிச்சம் பிடிக்கிறதாம்.

முகம் பார்த்து ரசிக்கனும்ல...

முகம் பார்த்து ரசிக்கனும்ல...

ஏன் விளக்கொளி தேவைப்படுகிறது என்று கேட்டால், பார்ட்னரின் முகத்தை பார்த்து அவர் சந்தோஷப்படுவதைப் பார்த்து ரசிக்க விரும்புவதால்தான் வெளிச்சம் தேவைப்படுவதாக கூறியுள்ளனர் ஜோடிகள்.

36 சதவீத பெண்களுக்கு இருட்டுதான் பிடிக்குமாம்

36 சதவீத பெண்களுக்கு இருட்டுதான் பிடிக்குமாம்

36 சதவீத பெண்களுக்கு இருட்டில் உறவு கொள்ளவே பிடிக்கிறதாம். அதேபோல 19 சதவீதம் பேர் இந்த உறவை முடிந்தவரை கமுக்கமாக் வைத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

ராத்திரி 11 மணிக்கு முன்பு...

ராத்திரி 11 மணிக்கு முன்பு...

பெரும்பாலான ஆண்களும், பெண்களும் ராத்திரி 11 மணிக்கு முன்புதான் உறவில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். மேலும் வாரம் ஒரு முறை ஈடுபடுவதாக பெரும்பாலானவர்கள் கூறியுள்ளனர்.

23 நிமிஷம்தான்...

23 நிமிஷம்தான்...

மேலும் உறவில் ஈடுபடும் கால அளவாக பெரும்பாலானவர்கள் கூறியது சராசரியாக 23 நிமிடம் என்று.

மேலே பெண்கள்...

மேலே பெண்கள்...

நிறையப் பேர் விரும்பும் பொசிஷன் எது என்றும் இந்த சர்வேயில் கேட்டுள்ளனர். அதன்படி, ஆண்கள் மீது பெண்கள் அமர்ந்து உறவு கொள்ளும் பொசிஷனே பெருவாரியாக வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.

முத்தம்தான் என்ட்ரன்ஸ்...

முத்தம்தான் என்ட்ரன்ஸ்...

உறவுக்கான முதல் நுழைவாக முத்தம்தான் திகழ்கிறது. அதாவது முத்தத்தில்தான் ஆரம்பிப்போம். பின்னர் மொத்தமாக மூழ்கிப் போவோம் என்று 23 சதவீதம் பேர் கூறியுள்ளனர். கட்டித் தழுவுதலுக்கும் அதே அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது.

செக்ஸியான பார்வை

செக்ஸியான பார்வை

செக்ஸியான பார்வை மூலம் உறவைத் தொடங்குவோம் என்று 12 சதவீதம் பேரும். படுக்கையில் படுத்து பேசியபடியே உறவுக்குள் நுழைவோம் என்று 14 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

 

English summary
Tuesday is officially the least sexy day of the week, with couples more likely to roll over and go to sleep without touching each other than on any other day. Only four per cent of people are getting frisky on a Tuesday, with Thursday coming a close second in the sexless stakes at only six per cent.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more