•  

சில்லென்று ஒரு முத்தம்... தொடங்கட்டும் யுத்தம்!

எல்லாம் ரெடி... ஆனால் மூட் இல்லை. இது பலருக்கும் வரும் குழப்பமான சூழ்நிலை. ஆனால் எப்படி மேகங்கள் திரண்டு சட்டென மழைத் துளிகள் மண்ணை நனைக்கின்றனவோ அதேபோல உணர்வு மழையில் நீங்கள் இன்ஸ்டன்ட் ஆக புக உதவுகிறது முத்தம்...முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங்கள் சோர்வு.முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா...படித்துப் பாருங்கள். படித்த பின் இதழ் கடித்துப் பாருங்கள்...சப்த நாடியும் ஒடுங்க வேண்டும்

சப்த நாடியும் ஒடுங்க வேண்டும்

சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இதழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்தமானது, உங்களது சப்தநாடியும் ஒடுங்கிப் போகும் வகையில் அழுத்தமானதாக, ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் பெர்பெக்ட் முத்தமாம்.

மனசெல்லாம் கரைந்து போக வேண்டும்

மனசெல்லாம் கரைந்து போக வேண்டும்

கொடுக்கும் முத்தமானது தித்திப்பாக இருக்கிறதோ, இல்லையோ அந்த முத்தம் கொடுக்கும்போதும் சரி, கொடுத்த பின்னரும் சரி, கொடுத்தவரும், வாங்கியவரும் அப்படியெ மனசெல்லாம் கரைந்து போய் மயக்க நிலைக்குப் போய் விட வேண்டுமாம். அதுதான் நல்ல முத்தமாம்.

கண்ணெல்லாம் சொக்கி...

கண்ணெல்லாம் சொக்கி...

இதழ்கள் இரண்டும் சேர்ந்து பின் பிரியும்போது உயிரின் அடி ஆழம் வரைக்கும் அதன் பாதிப்பு தெரிய வேண்டும். பிரிந்த உதடுகள் மீண்டும் இணையத் துடிக்க வேண்டும்.. உயிரின் தவிப்பு அந்த முத்தத்தி்ல தெறிக்க வேண்டும்... அதுதான் அருமையான முத்தமாம்.

உறவுக்கு திறவுகோல்

உறவுக்கு திறவுகோல்

ஒவ்வொரு உறவுக்கும் திறவுகோலாக முத்தம்தான் திகழ்கிறதாம். இறுக்கி அணைத்து, இடை பிடித்து, ஒரு கையால் கீழுதட்டை தடவி, மேலுதட்டில் உங்கள் இதழ் பதித்து, செல்லமாக ஒரு கடி கடித்து, திமிரிப் பாயும் காதல் உணர்வுகளை அப்படியே இதழ்களுக்குப் பாஸ் செய்து இரு இதழ்களையும் சேர்த்துக் கவ்விப் பிடித்து அழுத்தமாக நீண்டதொரு முத்தம் கொடுத்து.. இதழ் விலக்கி நிற்கும்போது உறவுக்கான அருமையான சூழலை நீங்கள் ஏற்படுத்துகிறீர்களாம்....

எங்கே கொடுத்தால் என்ன...?

எங்கே கொடுத்தால் என்ன...?

உடலின் எந்தப் பகுதியில் கொடுக்கப்படும் முத்தத்தை விடவும் இதழில் தரும் முத்தம்தான் இதயத்தை தடதடக்க வைக்குமாம்... இதழோடு இதழ் சேர்த்து முத்தம் தரும்போது பெண்கள் கிட்டத்தட்ட மயக்க நிலைக்குப் போய் விடுவார்களாம். மேலும் அந்த ஆண் மீதான அவர்களது விருப்பமும், ஆசையும் பல மடங்கு அதிகரிக்குமாம்.

கிடைக்கும்போதெல்லாம்...

கிடைக்கும்போதெல்லாம்...

முத்தத்திற்கு கணக்கே கிடையாது. எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கொடுங்க.. மனசெல்லாம் லேசாகும்.. மேலுதட்டில், கீழுதட்டில், இரண்டையும் சேர்த்து, செல்லமாக கடித்து, மென்மையாக இழுத்து, சுவைத்து ... என்று டிசைன் டிசைனாக கொடுக்கலாம்.

வெட்கப்படாதீர்கள்

வெட்கப்படாதீர்கள்

முத்தம் கொடுக்கும்போது வெட்கம் இருக்கக் கூடாது. மாறாக கலைஞனாக மாறி விட வேண்டும், ரசிகனாக மாறி விட வேண்டும். ரசித்து, சுவைத்து, லயித்துத் தரப்படும் முத்தம் இருக்கிறதே...வாவ், அதற்கு ஈடு இணையே கிடையாதாம். அனுபவித்தவர்கள் உதடுகளை ஈரமாக்கியபடி சொல்கிறார்கள்.

எத்தனை ஸ்டைல்கள்...!

எத்தனை ஸ்டைல்கள்...!

இப்படித்தான் முத்தமிட வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் உணர்வுகளைத் தூண்டும் வகையிலான முத்தத்தை பல ஸ்டைல்களில் கொடுக்கலாம். லிப் லாக், பிரெஞ்சு கிஸ் என்று ஏகப்பட்ட வகைகள். ஒவ்வொன்றையும் படித்துப் பார்த்து பரீட்சிக்காதீர்கள்.. மாறாக உதடுகளோடு விளையாடி விளையாடி ஒவ்வொன்றையும் அனுபவித்துப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.. அதுதான் பெஸ்ட்டாம்.

வெரைட்டி இல்லாட்டி வேலைக்கு ஆகாது

வெரைட்டி இல்லாட்டி வேலைக்கு ஆகாது

பெரும்பாலான ஆண்கள், தங்கள் துணைகளுக்கு முத்தமிடுவதை ஏதோ ஒரு சடங்கு போல செய்வார்கள். அது மகா தப்பு.. என்ன அவசரம், மனைவியையும், காதலியையும் திருப்திப்படுத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை.. நிதானமாக, அழகாக, அவருக்குப் பிடித்தாற் போல, அந்த செப்பு உதடுகளில் செப்படி வித்தை காட்டி விளையாடுவது எவ்வளவு சுகமானது.. அதை விட வேற என்ன வேண்டும்.. எனவே வெரைட்டியாக வெளுத்துக் கட்டுங்கள். உங்களது துணைக்கு உங்களை ரொம்பப் பிடிக்கும்.

கீழுதட்டைக் கடித்து .. அப்படியே காது மடலில்

கீழுதட்டைக் கடித்து .. அப்படியே காது மடலில்

கீழுதடுதான் பெண்களுக்கு உணர்வுகளைத் தூண்டும் ஏரியா. எனவே முத்தமிடும்போது கீழுதட்டில் நிறைய ஜாலம் காட்டுங்கள். செல்லமாக கடியுங்கள், சுவையுங்கள், பிடித்து இழுங்கள்.. அப்படியே அவரது காது மடலிலும் முத்தமிட்டு விளையாடுங்கள்..

இன்னும் என்ன வேண்டும் என் செல்லமே...!

இன்னும் என்ன வேண்டும் என் செல்லமே...!

முத்தமிடும்போது காதல் மொழி பேசுவது அவசியமோ அவசியம். இந்த நேரத்தில் என்ன பேச்சு வேண்டி கிடக்கு என்று சிலர் சொல்லலாம். ஆனால் இந்த சமயத்தி்ல காதுகளுக்கு கிட்டே போய் கிறக்கமாக, மயக்கமாக ஹஸ்க்கியான வாய்ஸில் பேசும்போது கிடைக்கும் சுகமே அலாதி தெரியுமா... செய்து பாருங்கள்.

முத்தமிடுவதும் ஒரு அழகிய கலை... அதற்கும் நிறைய நேரம் கொடுங்கள். உதடுகளுடன் விளையாடுங்கள், உறவுக்குள் புகுந்து உள்ளூர ஆன்ம திருப்தியைப் பெறுங்கள்.

 

 English summary
A kiss can spark your passion, says experts. Infact kiss is the key for every relationships.
Story first published: Sunday, March 17, 2013, 16:21 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras