•  

'அந்த' இடத்தில் 8000 நரம்புகள் இருக்கிறதாம்.. தெரியுமா?

நமது உடலின் ஒவ்வொரு அம்சமும் அபாரமான ஆச்சரியங்கள் நிரம்பிய சுரங்கம் போல. அதிலும் பெண்களிடம் எத்தனையோ விசேஷங்கள் நிரம்பியிருக்கின்றன. அதுகுறித்த பார்வைதான் இது....பெண்களின் பிறப்புறுப்பு குறித்து நிறையப் பேருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது உறவுக்கானது, குழந்தை பிறப்பின்போது பயன்படுவது என்பது வரை மட்டுமே பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால் அதில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளன.வெளிப்புறம் வல்வா... லேபியா உதடுகள்

வெளிப்புறம் வல்வா... லேபியா உதடுகள்

வெஜைனா என்று அழைக்கப்படும் பெண்ணுறுப்பானது பல பகுதிகளுடன் கூடியது. வெளிப்புறப் பகுதிக்குப் பெயர் வல்வா. இந்தப் பகுதியானது, உள் மற்றும் வெளிப்புற லேபியா அதாவது உதடுகள், கிளிட்டோரிஸ், கிளிட்டோரல் முனை மற்றும் யூரித்ரா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். உண்மையான பெண்ணுப்பானது உள்ளே இருக்கும் பகுதியே. இதில்தான் கர்ப்பப் பை, சினைப் பை, பலோப்பியன் டியூப் ஆகியவை அடங்கியுள்ளன.

உணர்ச்சி எரிமலை கிளிட்டோரிஸ்

உணர்ச்சி எரிமலை கிளிட்டோரிஸ்

பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக உள்ள பகுதிதான் இந்த கிளிட்டோரிஸ். மிகவும உணர்ச்சிகரமான பகுதிதான் இந்த கிளிட்டோரிஸ். செக்ஸ் உறவின்போது கிளிட்டோரிஸ் தூண்டப்படும்போது உணர்வுகள் பெருக்கெடுத்து பெண்ணுக்கு சந்தோஷம் தரும்.

8000 நரம்பு முடிச்சுகள்

8000 நரம்பு முடிச்சுகள்

கிளிட்டோரிஸ் ஏன் இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு உள்ளது என்று ஆராய்ந்தால், அதில் உள்ள நரம்புகளே முக்கியக் காரணம் என்பது தெரிய வரும். அதாவது கிளிட்டோரிஸ் பகுதியில் மொத்தம் 8000 நரம்புகள் வந்து முடிகிறதாம். அதாவது உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும் நரம்பு மண்டலமாக இது திகழ்கிறது. இதனால்தான் கிளிட்டோரிஸைத் தொட்டாலே பெண்களுக்கு ஷாக் அடிக்குமாம்.

ஆணுறுப்பை விட ஸ்டிராங்கானது

ஆணுறுப்பை விட ஸ்டிராங்கானது

ஆணுறுப்பை விட பெண்களின் கிளிட்டோரிஸ்தான் ரொம்ப ஸ்டிராங்கானதாம். அதாவது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆணுறுப்பை விட கிளிட்டோரிஸ்தான் பெஸ்ட்டாம். ஆணுறுப்பில், அதாவது ஆண்குறியில் 3500 நரம்புகள்தான் இருக்கிறதாம். இருப்பினும் ஆணுறுப்பின் தோல் பகுதி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் உள்ள நரம்புகளைக் கணக்கிட்டால் இந்த நரம்புகளின் எண்ணிக்கை 24,000 ஆகும்.

சுறா மீனும் - பெண்ணுறுப்பும்

சுறா மீனும் - பெண்ணுறுப்பும்

சுறா மீனுக்கும், பெண்ணுறுப்புக்கும் ஒரு விஷயம் பொதுவானதாக இருக்கிறது. உடனே கண்டபடி கற்பனைக்குப் போக வேண்டியதில்லை. அதாவது ஸ்குவாலேன் என்ற ஒரு திரவம் பெண்ணுறுப்பில் சுரக்கிறது. இது லூப்ரிகன்ட் போல பயன்படுகிறது. இதுதான் உறவின்போது ஆண்குறியானது, உள்ளும், வெளியுமாக எளிதில் போய் வர உதவுகிறது. இந்த திரவம் சுரக்காவிட்டால், பெண்களுக்கு உறவின்போது வலி ஏற்படும். சுறா மீனின் ஈரல் பகுதியிலும் இதே ஸ்குவாலேன் சுரப்பு இருக்கிறதாம்.

உணர்ச்சித் தூண்டலின்போது...

உணர்ச்சித் தூண்டலின்போது...

உறவின்போது பெண்ணுக்கு உணர்ச்சித் தூண்டல் ஏற்படுகிறது. அப்போது பெண்ணின் கிளிட்டோரிஸும், லேபியா எனப்படும் உதட்டுப் பகுதிகளும் விரிவடைகின்றன, உப்புகின்றன. அந்த சமயத்தில்தான் இந்த ஸ்குவாலேன் சுரக்கிறது. இதன் மூலம் ஆணுறுப்பானது வெகு எளிதாக உள்ளே புகுந்து விளையாட வழி கிடைக்கிறதாம்.

200 சதவீதம் விரியுமாம்

200 சதவீதம் விரியுமாம்

இந்த வெஜைனாவானது உறவின்போது 200 சதவீத அளவுக்கு விரியும் தன்மை கொண்டதாம். எந்தப் பெண்ணுக்கும் இந்த சைஸில்தான் வெஜைனா இருக்கும் என்று கூற முடியாது. சராசரியாக அதன் அளவானது 3 இன்ச் அலம், 3.5 இன்ச் ஆழம் கொண்டதாக இருக்கும். இருப்பினும் இது நிரந்தரமான அளவல்ல, மாறாக 200 சதவீத அளவுக்கு இது விரிவடையுமாம். வயதாக ஆக ஆக பெண்ணுறுப்பானது தளர்ந்து தொங்கிப் போய் விடும்.

வெஜைனாவுக்கும் எக்ஸர்சைஸ் உண்டு

வெஜைனாவுக்கும் எக்ஸர்சைஸ் உண்டு

நாம் எப்படி உடற்பயிற்சி செய்கிறோமோ அதேபோல பெண்ணுறுப்புக்கும் பயிற்சிகள் உண்டு. இதன் மூலம் ஆர்கஸத்தை எளிதில் எட்ட அது உதவும். மேலும் சீக்கிரமே பெண்ணுறுப்பானது தளர்ந்து போவதைத் தடுக்கலாம்.

உள்ளே கழுவ வேண்டாமே...

உள்ளே கழுவ வேண்டாமே...

பெண்ணுறுப்பை அடிக்கடி கைகளை விட்டோ, விரல்களை விட்டோ அல்லது வேறு எதையும் பயன்படுத்தியோ சுத்தப்படுத்துவது கூடாதாம். காரணம், பெண்ணுறுப்பின் உள்ளே நிறைய பாக்டீரியாக்கள் உள்ளதால். இந்த பாக்டீரியாக்கள் நல்ல பாக்டீரியாக்கள். கெடுதல் செய்யாதவை, மாறாக, பெண்ணுறுப்பை இந்த பாக்டீரியாக்களே சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றனவாம். எனவே அதை கழுவி காலி செய்து விடக் கூடாதாம்.

ஷேவிங் செய்யனுமா, வேண்டாமா..?

ஷேவிங் செய்யனுமா, வேண்டாமா..?

பலருக்கு இந்த சந்தேகம் வரும். அதாவது பெண்ணுறுப்பைச் சுற்றி வெளியே வளர்ந்திருக்கும் முடியை ஷேவ் செய்து சுத்தமாக வைத்துக் கொள்வதா அல்லது அப்படியே விட்டு விடலாமா என்ற சந்தேகம் வரும். இந்த இடத்தில் ஒரு விஷயம்.. அதாவது உயிரினங்களிலேயே மர்ம உறுப்புப் பகுதியில் முடி வளர்வது மனிதர்களுக்கு மட்டும்தான். இருப்பினும் இதை ஷேவ் செய்வதா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் முடிவு செயய் வேண்டும். அதேசமயம், இந்த முடியால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம், பலனும் இல்லையாம்.

பெண்ணுறுப்பின் மீது குட்டிப் புதர் போல படர்ந்து வளர்ந்திருக்கும் முடி, பெரும்பாலான ஆண்களுக்கு சந்தோஷத்தையும், கிளர்ச்சியையும் தர உதவுகிறதாம். எனவே பல பெண்கள் அதை ஷேவ் செய்வதில்லை. இருப்பினும் சிலருக்கு ஷேவ் செய்வதுதான் பிடித்திருக்கிறதாம். இது அவரவர் மனதைப் பொறுத்தது.

பெண்ணின் உடம்பில் மிகவும் முக்கியமான பகுதி மட்டுமல்ல, ஆச்சரியமான பகுதியும் கூட இந்த பெண்ணுறுப்பு. காமப் பகுதியாக மட்டும் இதைப் பார்க்காமல் காதலுடன் பார்த்தால் செக்ஸ் உறவும் சிறக்கும்....

 

 English summary
What we commonly refer to as the vagina is actually made up of several parts. The outer area is called the vulva, made up of the inner and outer labia (“lips”), the clitoris, the clitoral hood, and the urethra. The true “vagina” is actually the interior area, which includes the cervix, uterus, ovaries, and fallopian tubes. The clitoris is the organ exclusively reserved for a woman's pleasure during sex – as so, it contains 8,000 nerve-endings.
Story first published: Saturday, March 30, 2013, 6:29 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras