•  

செல்லப் பூனைக்குட்டிக்கு என்ன கோபம்?

ஊடல் இல்லாத தாம்பத்யம்... உப்புச்சப்பில்லாத உணவு போல என்பார்கள் பெரியவர்கள்...



அதற்காக எப்போது பார்த்தாலும் எலியும் பூனையுமாக எப்போது பார்த்தாலும் சண்டை போட்டாலும் தாம்பத்யம் ருசிக்காது. அப்புறம் வீட்டுச்சாப்பாட்டை மறந்துவிட்டு ஹோட்டல் சாப்பாட்டின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.



கொஞ்சம் கோபம்... நிறைய காதல் என இருந்தால்தான் இல்லறத்தில் இனிமை என்கின்றனர் நிபுணர்கள்.



வெளியில் அலுவலக சூழலில் டென்சனோடும், பணிச்சூழலில் மன அழுத்தத்தோடும் வீட்டிற்கு வரும் கணவரை மனைவியும் எரிச்சலூட்டி டென்சன் செய்தால் குடும்பத்தில் கூடுதலாக குழப்பம் கும்மியடிக்க ஆரம்பித்துவிடும். எனவே ஈகோ பார்க்காமல் கோபத்தை சமாளிக்கவும், கணவரை குட்டிப் போட்ட பூனையாக சுத்தவைக்கவும் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.



செல்லமாய் ஒரு முத்தம்

செல்லமாய் ஒரு முத்தம்

கணவர் வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறாரா சரியான நேரம் பார்த்து கிசுகிசுப்பாய் காதில் ஐ லவ் யூ சொல்லுங்கள். முடிந்தால் சின்னதாய் ஒரு முத்தம் தப்பில்லை. அலுவலகத்தில் டென்சன் இல்லாமல் வேலை பார்க்க அது போதுமானது. சொல்லப்போனால் மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்கு திரும்பி வரும் வரைக்கும் அது கணவரின் நினைவில் நிற்கும்.

 

 

நம்பிக்கை அதானே எல்லாம்…

நம்பிக்கை அதானே எல்லாம்…

இது விளம்பர வாசகம் மட்டுமல்ல... தாம்பத்யத்தின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான வாசகம் இது. உங்களவரை, துணையை முழுவதுமாக நம்புவது அவசியம்.

 

 

ஈகோ வேண்டாம்

ஈகோ வேண்டாம்

கணவன், மனைவிக்கு சிறு சண்டை என்றால் ஈகோ பார்க்காமல் சரணடையுடங்கள். உங்கள் பிரச்சனைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் இருவருக்கு இடையே யாரையும் நுழைய விடாதீர்கள். இல்லையென்றால் சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு.

 

 

நட்போடு அணுகுங்கள்

நட்போடு அணுகுங்கள்

கணவர் ஒரு முடிவு எடுத்தால் அது சரியாக இருக்கும். அவர் ஏதாவது சொன்னால் அதில் ஒரு காரணம் இருக்கும் என்று நம்புங்கள்.கணவரை நல்ல நண்பராக்கிக் கொள்ளுங்கள். நண்பர்கள் போன்று மனம் விட்டுப் பேசுங்கள்.

 

 

அடிக்கடி கட்டிப்பிடிங்க

அடிக்கடி கட்டிப்பிடிங்க

கணவர் கோபமாக பேசும்போது அதற்கு எதிராக குரலை உயர்த்திப் பேசாமல் டக் என்று கட்டிப்பிடிங்களேன். முடிந்தால் உதட்டோடு முத்தமிட்டு வாயை அடைத்துவிடுங்கள். அப்புறம் சண்டையாவது ஒன்றாவது.

சந்தோச விளையாட்டு

சந்தோச விளையாட்டு

கணவர் டென்சனாகிறார் என்றால் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அதிகம் டென்சனாக்க வேண்டாம். அவ்வப்போது கட்டிப்பிடியுங்கள் அவருக்கு டென்சன் பறந்து விடும். கணவருடன் குழந்தைத் தனமாக பேசுங்கள், விளையாடுங்கள். இது மன இறுக்கத்தைப் போக்கும்.

விட்டுக் கொடுங்கள்

விட்டுக் கொடுங்கள்

கணவரை அடக்கி ஒடுக்கித்தான் உங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதில்லை. அன்பாலும் உங்கள் பக்கம் சாய வைக்கலாம். வீட்டில் சண்டை என்றால் ஈகோ பார்க்காமல் நீங்கள் முதலில் விட்டுக் கொடுங்கள். அடுத்த முறை அவர் விட்டுக்கொடுப்பார்.

 

 

ஆசையோடு காத்திருங்கள்

ஆசையோடு காத்திருங்கள்

வீட்டிலிருந்து சண்டை போட்டு கிளம்பினால் நீங்களும் உடனே முகத்தை திருப்பிக் கொள்ள வேண்டாம். எஸ்.எம்.எஸ், ஈ மெயில் என பலவகையிலும் அட்டாக் செய்யுங்கள். அப்புறம் அவர் உங்கள் வசம் வருவார். மாலையில் அழகாய் உடுத்தி அவருக்காக காத்திருங்களேன். இதுவும் ஒரு டெக்னிக்தான்.

 

 

காதலுடன் பரிசு

காதலுடன் பரிசு

காதலிக்கும் போதுதான் பரிசு கொடுக்க வேண்டும் என்பதில்லை. திருமணத்திற்குப் பின்னரும் அவ்வபோது சர்ப்ரைசான பரிசுகளைக் கொடுத்து அசத்துங்களேன். முக்கியமாக ஊடல் சமயங்களில் கொடுக்கப்படும் பரிசுகளுக்கு எபெக்ட் அதிகம்.

 

 

கட்டில் போர்க்களம்

கட்டில் போர்க்களம்

படுக்கை அறையில் தோல்விகூட வெற்றியாகத்தான் பார்க்கப்படும். படுக்கையறை போர்க்களத்தில் வெற்றிக்காக போராடுவதை விட கணவரிடம் தோற்றுப்போங்களேன். இது கூட வின் வின் ஃபார்முலாதான். கணவரின் இதயத்தை கவர இது சிறந்த வழி எல்லாம் தெரியும் என்பதைப் போல காட்டிக்கொள்வதை விட சொல்லிக் கொடுங்களேன். கற்றுக்கொள்கிறேன் என்று கூறுவது கணவரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இதையெல்லாம் செய்து பாருங்கள், உங்களின் இல்லற வாழ்க்கையில் அருமையான மாற்றங்களை உணர்வீர்கள்.

 

English summary
The relationship of husband and wife is the most important and of delicate nature. To make it strong and enjoyable the role of wife can not be ruled out. In most communities men are dominant having decision powers in daily life and are very much touchy about their ego and don’t like contradiction. Although both partners are equally responsible if their relation breaks or becoming weak and boring.
Story first published: Thursday, January 30, 2014, 12:36 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras