•  

''எனக்கு 40 உனக்கு 20''... ஓ.கேவா..??

Benefits Of Age Gap In Relationship
 
காதலுக்கு கண் இல்லை என்பது ரொம்ப பழைய மொழி. அதேபோல காதலிப்பவர்கள் வயது வித்தியாசத்தையும் பார்ப்பதில்லை. இதனால் அதிக வயது வித்தியாசம் உடைய காதலும் பல நேரங்களில் அமைந்து விடுவதுண்டு.சரி இப்படி அதிக வித்தியாசம் கொண்ட காதல்நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் பல நேரங்களில் எழும். ஆனால் இப்படிப்பட்ட வித்தியாச காதலில் நிறைய பலன்கள்தான் இருப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.பல ஆண்கள் தங்களை விட மிகவும் வயது குறைந்த பெண்களை மணக்கிறார்கள் அல்லது காதலிக்கிறார்கள். அதேபோல பல பெண்கள் தங்களை விட வயது அதிகமான அல்லது குறைந்த ஆண்களை திருமணம் செய்கிறார்கள் அல்லது காதலிக்கிறார்கள்.இப்படிப்பட்ட வயது வித்தியாசத்தால் அவர்களின் காதலும், உறவும் எந்தப் பாதிப்பையும் சந்திப்பதில்லையாம். மாறாக சிறப்பாகவே இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.இதனால் பலன்கள் நிறைய இருக்கிறதாம்... எப்படி..வயது குறைந்த ஆண்கள் பெண்களுக்கு நல்லதுபெண்களைப் பொறுத்தவரை குறிப்பாக அடக்குமுறையை விரும்பாதவர்களுக்கு வயது குறைந்த ஆண்கள்தான் சரிப்பட்டு வருமாம். எனவே இப்படிப்பட்ட பெண்கள், தங்களை விட வயது குறைந்த ஆண்களை மணப்பதே நல்லதாம்.வயதானவர்கள் இன்னும் சூப்பர்அதேசமயம், தங்களை விட வயது அதிகமான ஆண்களை மணக்கும் பெண்கள் இன்னும் கொடுத்து வைத்தவர்கள். காரணம், இப்படிப்பட்ட ஆண்கள் எல்லா விஷயத்திலும் நிபுணர்களாக இருப்பார்களாம். எந்த சூழ்நிலையையும் லாவகமாக சமாளிப்பார்களாம்.அனுபவம் கை கொடுக்கும்வயது அதிகமானவர்களை மணக்கும்போது அவர்களது அனுபவம் பெண்களுக்கு நிறையவே கை கொடுக்குமாம். எனவே வயது அதிகமானவர்களை மணக்கும் பெண்கள் பெரிய அளவில் கவலைப்பட தேவையில்லை.படுக்கை அறையில் பஞ்சாயத்து வராதுவயது அதிகமான ஆணை மணக்கும் பெண்களுக்கு செக்ஸ் விஷயத்தில் பிரச்சினை வராதாம். காரணம், அந்த ஆணுக்கு செக்ஸ் குறித்த நல்ல ஞானம் இருப்பதோடு, எப்படிக் கையாளவேண்டும் என்ற லாவகமும் தெரியும் என்பதால் படுக்கை அறையில் தினந்தோறும் கொண்டாட்டம்தான் என்பது நிபுணர்கள் கருத்து.அதேபோல வயது அதிகமான பெண்களை மணக்கும் ஆண்களும் கொடுத்து வைத்தவர்கள்தான்.. காரணம், தெரியாததை அவர்கள் சொல்லிக் கொடுப்பார்களே...எதிலுமே நல்லது, கெட்டது இரண்டுமே இருக்கத்தான் செய்யும். எனவே இதிலும் கூட சில பாதகங்கள் இருக்கலாம். ஆனால் அதையும் லாவகமாக சமாளித்து விட்டால் சந்தோஷம்தான்...
English summary
Age difference in a relationship is nothing new. There are many couples who opt for older or younger partners intentionally. And trust me there are many examples of a happy relationship even after having age gaps. It all depends on the way you perceive and treat your relationship.
Story first published: Monday, February 25, 2013, 14:18 [IST]

Get Notifications from Tamil Indiansutras