முத்தம் கொடுப்பதில் எல்லோரும் வல்லுநர்கள் ஆகிவிட முடியாது. சில விசயங்களை கற்றுக்கொண்டுதான் எக்ஸ்பர்ட் ஆகமுடியும். எனவே எப்படி முத்தம் கொடுப்பது? அதேபோல் முத்தத்தினை எப்படி அனுபவித்து பெறுவது என்றும் கூட ஆலோசனைகளை கூறியுள்ளனர் படியுங்களேன்.
பார்த்த உடனே பச்சக் என்று ஒட்டிக்கொள்வதற்கு முத்தம் ஒன்றும் ‘கம்' அல்ல அது ரசனைக்குரிய ஒன்று. முத்தம் எங்கு கொடுக்கிறோம் என்பதைப்போல... எப்படிக் கொடுக்கிறோம் என்பதும் முக்கியம். முத்தத்திற்கான முக்கிய அம்சமான உதடுகளை குவிப்பதும் அதை திறப்பதிலும் கூட கலை நுணுக்கம் இருக்கிறதாம்.
கொஞ்சம் கற்பனையும் தேவை
சிலர் கடமைக்காக முத்தம் கொடுப்பார்கள். சிலர் கடித்து துப்பிவிடுவார்கள். இரண்டுமே வேண்டாம் முத்தம் கொடுக்கும் போது கொஞ்சம் கற்பனையை புகுத்துங்கள். முத்தம் கொடுக்கும் போது உங்களின் செயல்பாடுகளும், கண்களும் கூட முக்கிய பங்கு வகிக்கிறதாம்.
ரசிக்கும் படியான முத்தம்
முத்தம் கொடுக்கும் போது உங்கள் துணை எப்படி அதனை ரசிக்கிறார். உங்களின் முத்தத்தை ருசிக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். முத்தத்தின் மூலம் உங்கள் துணையை திருப்திப் படுத்துவதன் மூலம் மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியடைய முடியும்.
உதடுகள் மட்டுமல்ல
சிலருக்கு முத்தம் கண்ணங்களில் கொடுக்க பிடிக்கும். சிலருக்கு கண்களில் கொடுத்தால் பிடிக்கும். சிலருக்கு உதடுகளில் கொடுக்க பிடிக்கும். சிலருக்கு சில இடங்கள் முத்தம் பெறவும், கொடுக்கவும் ரசனையான விசயங்கள். எனவே முத்தம் கொடுக்கும் போது அழகுணர்ச்சியோடு இருக்கவேண்டும். எந்த சூழ்நிலையிலும் வலி ஏற்படுத்திவிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.
ஓவியனின் தூரிகை
முத்தம் என்பது ரசனைக்குரிய விசயம். கொடுப்பவர்க்கும் சரி அதை பெற்றுக்கொள்பவர்க்கும் சரி உணர்ச்சிகள் பிரவாகமாய் பொங்கும். சிலருக்கு கண்களில் கண்ணீர் கூட எட்டிப்பார்க்கும். எனவே ஓவியனின் தூரிகைப் போல உங்களின் உதடுகளினால் மென்மையாக கொடுங்கள். நாவால் வருடுவதும் கூட ரசனையாய் செய்தால் நீங்கள் கொடுக்கும் முத்தம் உங்கள் துணையின் நினைவை விட்டு நீங்காது.
முத்தத்தின் ருசி
முத்தம் ருசிக்குமா? இது சிலரின் கேள்வியாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ருசியை தருமாம். காதலியின் உதட்டினை சுவைத்த உடன் காதலன் சொன்ன வார்த்தை. உன் உதட்டின் சுவை அல்வா சாப்பிட்டது மாதிரி இருக்கே என்பதுதான். சிலருக்கு எச்சில் அமிர்தமாகும். இன்னொருமுறை குடுங்க... என்று கூட ஆசையாய் கேட்டு வாங்கிய முத்தம் கூட இருக்கலாம்.
அன்பின் பிரவாகம்
முத்தம் என்பது உறவிற்கான திறவுகோல். அதற்காக படுக்கை அறையை மட்டுமே நினைத்துக்கொண்டு முத்தம் கொடுக்கக் கூடாது. ஏனெனில் முத்தம் என்பது அன்பின் மொழி. நம் காதலை புரியவைக்கும் உச்ச பாஷை... கடைசி ஆயுதமும் அதுதான். எனவே ஒவ்வொரு முறையும் முத்தமிட உங்கள் துணையை நெருங்கும் போதும் அன்புமழை பொழியுங்கள்.
முத்தம் பற்றி இன்னும் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. அவை தோண்ட தோண்ட வெளிப்படும் புதையலைப் போன்றது. எனவே உங்களின் துணைக்கு அன்பின் மொழியை முத்தத்தின் உணர்த்துங்கள்