•  

முத்தமிட்டுப் பற்ற வையுங்கள்!

Kiss
 
ஒவ்வொரு நொடியும் உன்னுடன் முடிய வேண்டும்...ஒவ்வொரு நிமிடமும் உன்னுடன் கழிய வேண்டும்..இப்படித்தானே ஒவ்வொரு உயிரும் ஏங்குகின்றன, அன்புக்கும், பாசத்துக்கும், காதலுக்கும். அது கிடைக்கும்போது, அதுவும் எதிர்பாராமல் கிடைக்கும்போது அடையும் சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்கும் அளவுண்டா... அளவிடா முடியாத ஆனந்தம் அது.சிலருக்கு தினசரி உறவுக்கு வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வாரம் சில முறை... இன்னும் சிலருக்கு மாதம் சில முறை... சிலருக்கோ எப்போதாவது, எதேச்சையாக.. ஆனால் இப்படி அரிதாக ஆடிக்கொரு முறை, அமாவாசைக்கு ஒருமுறை என்று வந்தாலும் கூட அதையும் கூட அபரிமிதமான உற்சாகத்துடன் கொண்டாடலாம் - வித்தை தெரிந்திருந்தால்.மனசெல்லாம் உற்சாகத்தை எப்போதும் நிரப்பி வைத்திருங்கள்.. மனசுக்குள் ஆசைகள் வற்றிப் போகாமல் எப்போதும் வரித்து வைத்திருங்கள்... அவர் பற்றிய கனவுகளுடன் வாழ்ந்து வாருங்கள்.. உடல்கள் உரசிக் கொள்ளாமல் போயிருந்தாலும் கூட உணர்வுகளில் இருவரும் பின்னிப் பிணைந்திருங்கள்.. அப்போது இது சாத்தியமாகும்.உறவுக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமை காத்திருப்பது இதுபோன்ற தருணங்களில் முக்கியமானது. காரணம், இது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டும் அல்லவே, உணர்வுப்பூர்வமானது. இங்கு சுரக்கும் காதல், அங்கும் சுரக்க வேண்டும். அங்கு காதல் சுரக்கும்போது, இங்கும் பிறக்க வேண்டும். இரண்டு நதிகள் ஒரு சேர உற்பத்தியாகி, அலைந்து திரிந்து சங்கமிக்கும்போது ஏற்படும் அந்தக் கூடல்... சந்தோஷத்தின் உச்சம்.உறவுக்கு இன்று புகலாம் என்ற நிலை வரும்போது காதலுடன் அணுகுங்கள். ரொம்ப நாளாகிப் போச்சே, கேப் விழுந்து போச்சே என்று படபடத்தபடி எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்குப் போய் விடாமல், மெல்லத் தொடங்குங்கள். பூவுக்கும் வலிக்காமல், கிளையையும் ஒடிக்காமல், லாவகமாக பூப்பறிப்பது போல அணுக வேண்டும்.நெருக்கமாக அமர்ந்து நேசமாக பேசுங்கள். இப்படிப் பட்டினி போட்டுட்டியே என் கண்ணே என்று உரிமையுடன் கோபித்து எல்லையில்லாமல் கொஞ்சுங்கள். முகம், இதழ், காது மடல், கன்னக் கதுப்பு, கழுத்து என முத்தமிட்டு அவரைப் பற்ற வையுங்கள். மார்புகளில் முகம் பதித்து கொஞ்சுங்கள், செல்லமாக ஏதாவது பேசுங்கள். அழ வேண்டும் என்று தோன்றினால் அதையும் செய்யுங்கள் - தாய் போல அரவணைக்கத்தான் அவர் இருக்கிறாரே.காது மடல்களில் காதல் மொழி பேசுங்கள்... காதுகளின் பின்புறம் நாவால் வருடுங்கள்.. காதுகளுக்குள் மெல்ல மூச்சு விட்டு அவரை உசுப்பேற்றுங்கள்... நெற்றியில் இச் இச் என்று இதழ் பதியுங்கள். கண்களில் காதல் முத்தம் குவியுங்கள்... கன்னக் கதுப்புகளை நாவால் வருடி இதழால் கோலமிடுங்கள்... இதழ்களில் இன்ப முத்தம் நூறு கொடுங்கள்.. மெல்ல சுவைத்து அவரை துள்ள வையுங்கள்... கழுத்து வழியாக கீழே இறங்கி மார்புகளில் மதன விளையாட்டை நிகழ்த்துங்கள்... இன்னும் போங்கள்.. இன்பத்தின் எல்லை வரை போய் வாருங்கள்.உணர்ச்சிப் பிழம்பில் இருவரும் இணைந்து மனம் முழுக்க மத்தாப்பு சந்தோஷத்துடன் தொடங்கும் இந்த உறவில் விளையாட்டு நீண்ட நேரம் நீடிக்க வேண்டும், தலை முதல் பாதம் வரை மகிழ்ச்சி கொந்தளித்து கூத்தாட வேண்டும். தகுந்த நேரம் வரும்போது உறவுக்குள் நுழையுங்கள்... சந்திரனின் அழகிய ரேகைகள் சன்னல் வழியே மெல்ல நுழைந்து உங்கள் துணையின் முகம் மீது பதிந்து நின்று காட்டும் அழகை ரசித்தபடி அவரை ருசியுங்கள்... எல்லாம் முடிந்து அலுத்துக் களைத்து சாயும்போது சூப்பர்டா என்று உங்கள் துணை சொல்லும்போது உங்களுக்குள் பெருக்கெடுக்குமே ஒரு கர்வம் கலந்த சந்தோஷம்... அதை விவரிக்க வார்த்தையே கிடையாது.சேர்ந்து நீண்ட நாளானாலும், உறவை நெகிழ்ச்சியுடனும், உயிர்ப்புடனும் வைத்திருக்க உங்களுக்கு உற்சாக மனதும், காதல் வித்தையும், காமசூத்திரமும் கைகூடி வந்தால் போதும்.. பிரமாதப்படுத்தலாம்!.

English summary
You can re-ignite your passion of love and kama by expressing your love towards your pair. Here are some tips.

Get Notifications from Tamil Indiansutras