•  

காதோடு பேசுங்கள்...!

How to make your girlfriend happier
 
காதோடுதான் நான் பாடுவேன்... மனதோடுதான் நான் பேசுவேன்... எல்.ஆர். ஈஸ்வரியின் ஹஸ்கி வாய்ஸ் பாட்டான இதைப் பார்க்காதவர்கள், கேட்காதவர்கள் இருக்க முடியாது. அருமையான பாடல் என்பதை விட அட்டகாசமான காட்சியமைப்பு என்று சொல்ல வேண்டும். ஒரு பெண்ணின் தவிப்பை, கணவனுக்கும், பிள்ளைக்கும் நடுவே சிக்கிக் கொண்டு அவள் தவிப்பதை அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் கே.பாலச்சந்தர்.நிச்சயம் எல்லோருக்குமே இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்யும். பிள்ளை ஒருபக்கம், பெரும் தவிப்புடன் 'பெரிய' பிள்ளை இன்னொரு பக்கம் என ஆளாளுக்கு இழுக்கத்தான் செய்வார்கள். சாமர்த்தியாக செயல்பட்டு இருவரையும் சமாதானப்படுத்துவதற்கு அந்தப் பெண்கள் படும் பாடு இருக்கிறதே... உண்மையிலேயே 'கிரேட்'தான் பெண்கள்.சரி அதை விடுங்க, நம்ம மேட்டரே வேற.. அதுக்கு வருவோம். எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடலில் உள்ள விஷயத்தை விட அவரது குரல்தான் இங்கு நமக்கு கதை சொல்லப் போகிறது. அதாவது 'ஹஸ்கி'... இந்த ஹஸ்கி வாய்ஸ் எத்தனை மாயாஜாலங்களைத் தரும் தெரியுமா... அனுபவித்துப் பார்த்திருக்கிறீர்களா... இல்லாவிட்டால் 'ஜஸ்ட்' ஆரம்பியுங்கள்.ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, கிசுகிசுப்பாக பேசும்போது அது ஒரு விதமான கிறக்கத்தையும், மயக்கத்தையும் தரும். சிலருக்கு குரல் இயல்பாகவே ஹஸ்கியாக இருக்கும். சிலருக்கு ஹஸ்கியாக மாறக் கூடிய லாவகம் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் காதல் கலையில் மன்னர்களாக இருப்பார்களாம் - எகிப்து பக்கம் ஒரு பழமொழியில் சொல்லியுள்ளனர்.என்னடா செல்லம்... சாப்ட்டியா, என்ன பண்ணிட்டிருக்கே... போரடிக்குதே.. கொஞ்ச நேரம் பேசேன் என்று மென்மையாக, ஹஸ்கியாக உங்களவருக்கு ஒரு போனைப் போட்டு கேட்டுப் பாருங்களேன்... அந்தப் பக்கம் பேச்சுக்குப் பதில் வெறும் 'ம் ம்' என்று முனகல்தான் வரும். அந்த வாய்ஸுக்கு அப்படி ஒரு மயக்கம் இருக்கிறது.தனிமையில் சந்திக்கும்போது கூட நெருக்கமாக அமர்ந்து ஹஸ்கியான வாய்ஸில் பேசிப் பாருங்கள். உங்கள் மீது அவருக்குப் பாசம் கூடும். செல்லமான வார்த்தைகளுடன், அவரது தலைமுடியைக் கோதியபடி, வந்து விழும் முடியை மெதுவாக தள்ளி விட்டு, முகத்தில் விரல்களால் சின்னதாக விளையாடியடி, காதோடு உதடு பொருத்தி மென்மையாக, சத்தமே வராம்ல பேசும்போது மனசுக்குள் ஜில்லடித்துப் போகும் கேட்பவருக்கு - உடம்பெல்லாம் புல்லரித்துப் போகும்.உன் முகம் என்ன தாமரையா
முத்தாரமே இது என்ன போதையோ..!
நினைத்ததும் நெஞ்சுக்குள் பூத்ததே ஒரு பூ
உன் முகம் மட்டும் ஏனடி இப்படி செய்கிறது அவஸ்தை..?
செல்லமே..என் கண்ணே..
இத்தனை இம்சைகள் ஏனடி...?
என் இதயத் தாமரையே...
உள்ளம் உருகி வழிந்தோடுவது
தெரியவில்லையா..?
வேகமாக வந்து என்னை ஆட்கொள்ள மாட்டாயா...?என்று மென்மையாக அவரது காதுகளில் நீங்கள் முனுமுனுக்கும்போது அது செய்யும் மாயாஜாலம் அடுத்த சில விநாடிகளில் உங்களுக்குப் புரிய வரும்.காதல் கலையில் முக்கியமானதே மென்மைதான் - அடிப்படையும் அதுதான். தென்றலைப் போல உங்களது காதலியைத் தீண்டுங்கள். பூவைப் போல அவரைப் பூஜியுங்கள். மென்மையாக ஓடும் நீரோடை போல அவரைப் பாவியுங்கள். எதிலுமே வேகம் இருக்கக் கூடாது. அழகாக, மென்மையாக, பூபாளம் போடும் புதுப் புனல் போல அப்படி ஜிவ்வென்று ஆரம்பிக்க வேண்டும்.. அப்போதுதான் அது ஜிலீர் என்று உள்ளுக்குள் பாய்ந்து சிலிர்ப்புக்கு இட்டுச் செல்லும்.மடி மீது படுக்க வைத்து, அழகான தாலாட்டு பாடுங்கள். குழந்தைக்குத்தான் தாலாட்டு என்றில்லை, உங்கள் காதலிக்கும் கூட நீங்கள் தாலாட்டு பாடலாம்..சின்ன மணி தேவதையே
என் செல்ல மணி தேவதையே
கண்ணுறங்கு என் கண்ணே
கண் மூடி நீ உறங்கு
மன்னவன் என்றும் உன் பக்கத்தில்
வைத்திருப்பான் என்றும் சொர்க்கத்தில்
காதலோடு கண் மூடு
காலமெல்லாம் என்னோடுஇப்படி சின்னதாகப் பாடலாம் - ஆனால் சத்தமில்லாமல், அவர் காதுகளுக்கு வலிக்காமல், கண்களுக்குப் பக்கத்தில் உதடு வைத்து, சின்னதாக முத்தமிட்டு, அவரை அப்படியே மென்மையாக அள்ளி அணைத்து, அழகாக பாடிப்ப பாருங்கள்... ஆஹா.. ஆஹா.. என்று சொல்லத் தோன்றும்.பிறகு காதலியை உங்களது மடியில் குப்புறப்படுக்க வைத்துக் கொண்டு மெதுவாக முதுகை வருடிக் கொடுக்கலாம்.. கழுத்திலிருந்து இடுப்பு வரை மென்மையாக பிடித்து விடலாம், மெதுவாக நீவி விடலாம், சின்னதாக வலிக்காமல் அழுத்தி விடலாம். அவருக்கு இதமாகவும் இருக்கும், சுகமாகவும் இருக்கும். கூடவே குட்டி குட்டியாக முத்தம் கொடுங்கள்.பிறகு மறுபடியும் மல்லாக படுக்க வைத்துக் கொண்டு மறுபடியும் விரல்களால் தாலாட்டுங்கள், விழிகளில் ஆரம்பித்து நாசியில் நடந்து, உதடுகளில் கோலமிட்டு, கழுத்தில் ராகமிட்டு, மார்புகளில் விளையாடி, தொப்புளுக்குள் இறங்கி, சொர்க்கத்திற்குச் செல்லுங்கள். கை விரல்களை விட பெரிய வித்தைக்காரன் உலகத்தில் யாருமே கிடையாது, தெரியுமா...?பெண்களுக்கு ரொமான்ஸ் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஆனால் அதை வெளியே காட்ட மாட்டார்கள். நாமாகத்தான் போய் அப்படி இப்படி காரியத்தில் இறங்க வேண்டும். ஆனால் இறங்கி விட்டால் போதும், பிறகு கிறங்கிப் போய் விடுவார்கள்...ஹூம்.. இப்படியே சின்னச் சின்னதாக நிறையப் பண்ணலாம்.. டிரை பண்ணிப் பாருங்க..!
English summary
It doesn’t matter whether she’s your girlfriend, girl you’re after, or your wife.. Here are a few tips to make a girl (in general) happier.
Story first published: Tuesday, January 22, 2013, 15:26 [IST]

Get Notifications from Tamil Indiansutras