•  

குழந்தைகளிடம் அது பற்றி பக்குவமா பேசுங்களேன்!

வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு குளிர் வாட்டி எடுக்கும் சீசனில் வேலையை முடித்துவிட்டு எப்படா போர்வைக்குள் முடங்குவோம் என்று எண்ணத்தூண்டும். ஒருவழியாக எல்லாவற்றையும் ஒழித்துவிட்டு குழந்தைகளையும் தூங்கவைத்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழையும் போதுதான் குட்டீஸ்கள் திடீரென்று கண்விழித்து எதையாவது கேட்டு தொந்தரவு செய்வார்கள். ஒருவழியாக நல்ல மூடுடன் இணையும் போது திடீரென்று குழந்தைகள் அறைக்குள் வந்து விடுவார்கள். அந்த நேரத்தில் இருவருக்குமே அவஸ்தைதான். இதுபோன்ற சம்பவங்கள் பலரது வாழ்வில் நிகழ்ந்திருக்கும் இதனை கவனமாக கையாளவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.எதிர்பாராத அவஸ்தைகள்

எதிர்பாராத அவஸ்தைகள்

நல்ல மூடு வந்தலும் கூட்டுக்குடும்பத்தில் வசிக்கும் தம்பதியர் உடனே படுக்கை அறைக்குள் புகுந்து கொள்ளமுடியாது... எல்லாப் பேரும் தூங்கிட்டாங்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பின்னர் படுக்கை அறைக்குள் நுழைந்து போர்வைக்குள் பதுங்கிக் கொள்வார்கள்... அந்த நேரம் பார்த்து பிள்ளைகளில் ஏதாவது ஒன்று எழுந்து உட்கார்ந்திருக்கும்... அப்பொழுது தம்பதிகளுக்கு ஏற்படும் அவஸ்தையை விளக்கிச் சொல்ல முடியாது.

குழந்தைகளின் குறுக்கீடு

குழந்தைகளின் குறுக்கீடு

பணிக்கு செல்லும் தம்பதியருக்கு சேருவதற்கு நேரமே கிடைக்காது. அத்திப்பூத்தார் போல இரண்டு பேருக்கும் ஒன்றாக நேரம் கிடைத்தால் சந்தோஷப் பூரிப்புடன் பெட்ரூமுக்குள் புகுந்து மும்முரமாக ஆரம்பிப்பார்கள். ஆனால் கதவை பூட்ட மறந்திருப்பார்கள். அந்த நேரம் பார்த்து குட்டீஸ்கள் உள்ளே புகுந்து விடலாம்... அப்போது ஏற்படும் மன நிலையும் மகா சங்கடமாகத்தான் இருக்கும்.

தெளிவாக பேசுங்களேன்

தெளிவாக பேசுங்களேன்

இதுபோன்ற நேரத்தில் குழந்தைகளிடம் எப்படி ரியாக்ட் செய்வது என்று கூடத் தெரியாமல் பெற்றோர்கள் விழிக்கும் நிலை ஏற்படும். ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குழந்தைகள் தவறான மன நிலைக்குப் போய் விடாத வகையில் அவர்களிடம் தெளிவாகப் பேசி விடுவது நல்லது என்று கூறுகிறார்கள் உளவியாளர்கள்.

தவறான காரணங்கள்

தவறான காரணங்கள்

அம்மாவை பூச்சி கடிச்சிடுச்சு, நான் தட்டி விட்டுக் கொண்டிருந்தேன் என்றோ அல்லது அப்பாவுக்கு வயிறு வலிச்சுதா, நான் எண்ணெய் தேச்சு விட்டுட்டிருந்தேன் என்றோ அல்லது இப்படியெல்லாம் திடீர்னு வரக் கூடாது பூச்சாண்டி கடிச்சுடும் என்பது போன்ற தவறான காரணங்களை குழந்தைகளிடம் சொல்லக் கூடாதாம்.

பயமுறுத்த வேண்டாமே

பயமுறுத்த வேண்டாமே

சில நேரங்களில் உறவின்போது ஏற்படும் சத்தம் மற்றும் முணகலை குழந்தைகள் கேட்கும் நிலை ஏற்பட்டு விடலாம். அப்போதும் புத்திசாலித்தனமாகவே குழந்தைகளை சமாளிக்க வேண்டுமாம். மாறாக பயமுறுத்தும்படியான காரணத்தைச் சொல்லி வைத்தால் அதுவும் குழந்தைகள் மனதில் நிரந்தரமான பயத்தை உருவாக்கி விடும் என்று கூறுகிறார்கள்.

பக்குவமாக பேசுங்களேன்

பக்குவமாக பேசுங்களேன்

நமது சமுதாயத்தில் செக்ஸ் என்பது மிகவும் ரகசியமான ஒன்றாக பேசப்பட்டு வருகிறது. அப்படித்தான் நாம் சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்தப்படுகிறோம். ஆனால் கணவனும், மனைவியும் தனிமையில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து குழந்தைகளுக்கு பக்குவமாக எடுத்துக் கூறி விடுவதுதான் நல்லது என்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் ராஜன் போன்ஸ்லே. இதனால் குழந்தைகளும் நம்மைப் புரிந்து கொண்டு நமது சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கப் பழகிக் கொள்வார்கள் என்கிறார்.

திட்டவேண்டாமே

திட்டவேண்டாமே

சில நேரங்களில் தம்பதியர் தனிமையில் இருக்கும் நேரத்தில் குழந்தைகள் குறுக்கிட்டு விடலாம். அதுபோன்ற நேரத்தில் பலர் குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டுவார்கள், சத்தம் போடுவார்கள், திட்டுவார்கள். அது மிக மிகத் தவறு. அப்படி இல்லாமல் குழந்தைகளை வெளியே போகுமாறு கணிவுடன் முதலில் கூற வேண்டும் என்கிறார் உளவியல் நிபுணர்.

அம்மாவும், அப்பாவும் இதுபோல அவ்வப்போது தனிமையில் சந்தித்துப் பேசும்போது யாரும் டிஸ்டர்ப் செய்யக் கூடாது என்பதை தெளிவாகவும், அதேசமயம், பக்குவமாகவும் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

 

குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்

குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்

மேலும் குழந்தைகள் வளர வளர் அதற்கேற்றார் போல அவர்களுக்கு இதுபோன்ற அறிவுரைகளைக் கூறி வளர்ப்பது இன்னும் நல்லது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நேரம் உண்டு. அதில் யாரும் தலையிடக் கூடாது. உனது நேரத்தில் நான் தலையிட மாட்டேன். அதேபோல எங்களது நேரத்தில் நீ தலையிடக் கூடாது என்று கூறும்போது நிச்சயம் குழந்தைகள் அதைக் கேட்டு மதிப்பார்கள் என்கிறார் போன்ஸ்லே.

அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... அடுத்தவாட்டி உள்ளே போகும்போது மறக்காம கதவைப் பூட்டிக்குங்க...!!

 

 

Read more about: kamasutra, sex, செக்ஸ்
English summary
What to Do When Kids Catch You in The Act. This is the biggest problem everybody facing during sexual activities. Here are some tips.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras