''செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே... ''
இந்த வரிகளின் அர்த்தம் தெரியாதவர்கள் இருக்க முடியாது. காதல் வாழ்க்கைக்கு இந்த வார்த்தை மிக மிகப் பொருத்தமானது. அதேபோல காம வாழ்க்கைக்கும் இது அற்புதமாக பொருந்தி வரும் சொற்றொடர் ஆகும்.
விண்ணிலிருந்து மழை பெய்கிறது...
கொட்டும் மழை பூப் பூவாக மண்ணில் வீழ்கிறது..
விழுந்த மழைத் துளிகள் மண்ணின் நிறத்தைப் பெற்று மண்ணின் தன்மைக்கு மாறுகின்றன...
இப்போது மழை பெய்ததால் மண் செம்மையானதா அல்லது செம்மை நிற மண் மழை நீரில் சேர்ந்ததா என்று சரியாகச் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இயல்புக்கு இரண்டும் ஒன்றோடு ஒன்றாக கலந்து போய் விடுவதைத்தான் இந்த செம்புலப் பெயல் நீர் போல என்ற வார்த்தையால் விவரித்தார் சங்கப் புலவர்.
இது காம வாழ்க்கைக்கும் பொருந்தி வரும். எப்படி மண்ணும், மழையும் ஒன்றென மாறி விடுகிறதோ, அதைப் போல ஆணும், பெண்ணும் அன்பில் திளைத்து அரவணைப்பில் கரைந்து போய் இன்ப வெள்ளத்தில் மூழ்கி, யார் யாராக இருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவுக்கு மூழ்கிப் போய் விட வேண்டும்.
காதல் கலைகளில் 'இதுதான்', 'இப்படித்தான்' என்று எதுவுமே திட்டமிடப்படவில்லை, தீர்மானிக்கப்படவும் இல்லை. 'எதுவும்', 'எப்படியும்' என்பதே காமக் கலையின் நிலைத்த இலக்கணம். சுகம் எங்கு வருகிறதோ, எங்கு கிடைக்கிறதோ அங்கு போவதுதான் காமக் கலையின் முக்கிய அம்சம். எதைச் செய்தால் என்ன கிடைக்கும் என்பதை அறிந்து அணுகுபவனே சாணக்கிய புத்தி கொண்ட காமக் கலைஞனாக முடியும்.
உதடுகளில் சிலருக்கு இன்பம் ஊற்றெடுக்கும்.. அப்படி இருந்தால் அங்கு குறி வையுங்கள். சிலருக்கு காது மடல்களில் காம உணர்வு பெருக்கெடுக்கும். அப்படியானால் அங்கு போய் வாருங்கள். வயிறுகள், மார்புகள், அக்குள், இடை, பின்புறம் என ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு இடம், உணர்வுகளின் கூடமாக இருக்கும். அதை உணர்ந்து பக்குவத்துடன் பதமாக அணுகி உணர்வுகளை வெளிக்கொணர வேண்டியது ஆண்மகனின் கடமையாகும்.
கண்களின் இமை இருக்கிறதல்லவா... அதில் கூட காமத்தை கொண்டு வர முடியும். அழகான கவிதையை முனுமுனுத்தபடி உங்களவரின் மூடிய கண்களில் சின்னச் சின்னதாக செப்பு முத்தம் வைத்துப் பாருங்கள், எப்படி சிலிர்க்கிறார் என்பதை பிறகு பாருங்கள்.
சங்குக் கழுத்தில் ஒற்றை விரலால் சின்னதாக நர்த்தனம் ஆட விடுங்கள். பின்னர் அன்பாக ஒன்று, ஆசையாக ஒன்று, அழுத்தமாக ஒன்று, காதலோடு ஒன்று, காமத்தோடு ஒன்று என்று க்யூட்டாக முத்தம் வைத்து வாருங்கள்.. எப்படி சிலிர்க்கிறார் என்று பாருங்கள்.
பருத்த கொங்கைகள் திமிறி நின்றன காண் என்று சங்கக் கவிதையில் வரும். சரியான ஆண் மகனின் கையில் பூமாலையாக விழுந்து கிடக்கும்போது பெண்களுக்கு இப்படி ஒரு எழுச்சி நிலை ஏற்படுமாம். இப்படிப்பட்ட எழுச்சியை ஏற்படுத்தும் வித்தை அந்த ஆண் மகனின் கையில்தான் இருக்கிறது.
பெண்கள் பொறுமையின் தேவியர் ஆவர். எப்படி வீழும் மழையை, எந்த வேகத்தில் இருந்தாலும் தாங்கும் திடத்துடன் நில மகள் இருக்கிறாளோ அதேபோலத்தான் ஆண் மகனின் எத்தகைய வேகத்தையும் தாங்கும் உடலுடன், மன உறுதியுடன் பெண்களும் உள்ளனர். அதற்காக அதி வேகம் கூடவே கூடாது. அன்பு, காதல், பாசம், நேசம், காமம் என எல்லாம் கலந்து வாகாக எடுத்து வகை வகையாக கொடுக்கும்போது பெண்ணுக்குக் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே கிடையாது.
எனவே உறவுகளில் கலைநயத்தைப் புகுத்துங்கள், காமக் கலையில் தேர்ந்து வாருங்கள், மோக உறவுகளில் மூழ்கிப் போங்கள்...!