•  

மீண்டும் மீண்டும் வேண்டுமா...?

Sex
 
ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே.எப்படிப் பார்த்தாலும் காமம் இன்பமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவையை நாடும்போது அந்த இன்பத்திற்கு அளவு இன்னும் பல மடங்காக வெயிட் கூடும் என்பது உண்மை. எனவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையில் புகுந்து இன்பத்தை நுகர முயற்சிப்பது நல்லது.வழக்கமான உறவு நிலைகளை விட மாறுபட்ட உறவு நிலைகளுக்கு எப்போதுமே திரில் சற்று அதிகம். வழக்கமாக ஆண்கள் மேலே, பெண்கள் கீழே என்பதை மாற்றி நின்றவாறும், பக்கவாட்டில் படுத்தவாறும், பெண் மேலே ஆண் கீழே என்றுமாக மாறி புணர்ச்சி கொள்வது புதிய அனுபவத்தை இருவருக்குமே கொடுக்கும்.ஆண்கள் மீது பெண்கள் ஏறி அமர்ந்து கொண்டு உறவு கொள்ளும்போது அந்தப் பெண்களுக்கு கர்வம் கூடுகிறதாம், பெருமை கூடுகிறதாம், நாம்தான் இப்போது ராணி என்ற பெருமிதம் வந்து சேருகிறதாம். இதனால் மேலும் உற்சாகமுற்று அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ள ஏதுவாகிறதாம்.சிலருக்கு நின்று கொண்டு புணருவது ரொம்பப் பிடிக்கும். இதில் பல நிலைகள் உள்ளன. வெறுமனே சுவர் மீது சாய்ந்தபடி பெண் நின்று கொண்டு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வது பொதுவான நிலை. அப்படி இல்லாமல் சாய்ந்தபடி நிற்கும்போது பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கி அதை ஆண் மீது வளைத்துப் பிடித்தபடி நின்று கொண்டு புணருவது இருவருக்கும் பெரும் திரில்லான அனுபவத்தைக் கொடுக்குமாம்.அதை விட திரில்லான விஷயம், பெண்ணை ஆண் தூக்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இதில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி நல்ல எனர்ஜி இருக்க வேண்டியது அவசியம். உடல் பருமன் இல்லாதவர்களாக இருத்தலும் அவசியம். ஒருவேளை இதையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால் உயரமான ஸ்டூலில் பெண் அமர்ந்து, நன்றாக முனை வரை வந்து உட்கார்ந்து கொண்டு பின்னர் ஆணின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டு அதன் பிறகு இன்பத்தில் ஈடுபடலாம்.இப்படி விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடும்போது உறவு வேகமாகவும், கூடுதல் இன்பத்துடனும் இருக்குமாம்.அதேசமயம், இப்படிப்பட்ட மாறுபட்ட உறவுகளில் ஈடுபடும்போது சில கட்டுப்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது சில குறிப்பிட்ட சமயங்களில் இந்த முறை புணர்ச்சியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக மாதவிலக்கு வந்த சமயத்தில் மாறுபட்ட புணர்ச்சி நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பருமனான உடல் அமைப்பு கொண்ட பெண்களும் இதைத் தவிர்க்க வேண்டு்ம். குழந்தை பெற்ற பெண்களும் கொஞ்ச காலத்திற்கு இதிலிருந்து விலகியிருத்தல் நலம்.
English summary
Change your sex positions frequently is a must in sex. During sex each and everybody should try for new methods to get more pleasure.
Story first published: Monday, December 17, 2012, 17:06 [IST]

Get Notifications from Tamil Indiansutras