•  

உதடுகளுக்கு அப்பாலும் போங்களேன்...!

Kiss
 
உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்...
என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்..
தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவட்டும்..முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலும் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை... அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு.ஒவ்வொரு சூடான உறவுக்கும் முத்தம்தான் முதல் படியாக அமைகிறது. முத்தமிடும் இடம், முத்தம் தரும் விதம், முத்தம் பெறும் முகம் என அத்தனை அம்சங்களும் அட்டகாசமாக அமைந்தால் போதும் முத்தங்களுக்கு முடிவே இருக்காது.. காம யுத்தங்களுக்கும் முடிவே காண முடியாது.சரி முத்தமிடுவது என்பது உதடுகளின் 'சண்டை' மட்டும்தானா?... இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். உதடுகளையும் தாண்டிய உணர்வுத் தூண்டலுக்கு முத்தங்களைப் பயன்படுத்தலாம். எப்படி?... படியுங்களேன்...!முத்தம் என்றதுமே முதலில் உதடுகள்தான் பரபரக்கும். தீயைக் கண்ட காய்ந்த சறுகு போல உதடுகள் வேகமெடுத்து விரைந்து வரும்... ஆனால் உதடுகளையும் தாண்டி பல இடங்களுக்கு முத்தம் ரொம்பப் பிடித்த விஷயமாக இருக்கிறது. ஒரு பெண்ணின் முகத்தை மென்மையாக அணைத்து, இதழில் இதழ் குவித்து, சின்னதாக ஒரு முத்தம்.. ஜில்லென்று இன்னொரு முத்தம்.. சிலிர்ப்பூட்டும் பெரிய முத்தம் கொடுக்கும்போது கிடைக்கும் இன்பம்... அடிவயிற்றில் ஒரு ஆனந்த யுத்தத்தை ஏற்படுத்தும்.அதேசமயம், அந்த இடத்தையும் தாண்டி இன்னும் சில இடங்களுக்குப் 'போய் வரும்'போது இதை விட இன்னும் ஒரு புதிய உலகை நாம் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.பெண்களின் கழுத்தில் தரும் முத்தம் அந்தப் பெண்ணை ஆனந்தத்தின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என்கிறார்கள் உளவியாளர்கள். கழுத்தின் பின்பக்கம் குட்டி குட்டியாக பச்செக் பச்செக் என்று ஒரு ஆண் ஒத்தி எடுக்கும்போது உசுருக்குள் உணர்வு உலை கொதித்து வெளிக் கிளம்புமாம். மயக்கத்தின் கிறக்கத்தில் அப்பெண்ணை மூழ்கடிக்குமாம்...உதடுகளில் முத்தமிடும்போது ஒப்புக்குக் கொடுக்காமல் உயிரை உருக்கும் வகையில் அந்த முத்தத்திற்கு உயிர்ப்பு இருக்குமாறு இருந்தால் நல்லதாம். வெறுமனே முத்தமிடாமல் சின்னதாக ஒரு கவிதை சொல்லி ஒவ்வொரு முத்தமாக கொடுத்துப் பாருங்களேன்.. எத்தனை சிலிர்ப்பைக் காட்டுவார் தெரியுமா உங்கள் பெண் துணை...!என் செல்ல தேவதையே.. இது உன் கண்ணுக்காக என்று கூறி கண்களில் முத்தமிடுங்கள்...
என் வெல்லக் கட்டியே என்று கூறி மென்மையாக அவரது காதுகளில் முத்தமிடுங்கள்...
என் தாமரையே என்று கூறி நெற்றியில் ஒரு 'இச்' வையுங்கள்...!இப்படி ஒவ்வொரு இடமாக, ஒவ்வொரு துளியாக உங்களது முத்தத்தை கொட்டும்போது உங்கள் பட்டுச் செல்லத்திற்கு உயிரின் ஒவ்வொரு நரம்பும் துடித்துத் தவிக்கும்.. உணர்வுகளின் வெள்ளத்தில் மூழ்கிப் போவார்.முத்தமிடுவது ஒரு கலை என்பார்கள்... அந்த முத்தத்தையே கலைநயத்தோடு கொடுக்கும்போது உயிரோடு ஒன்றிப் போய் விடுவார்கள். உதடுகளோடு நில்லாமல் கன்னம், கண், வாய், காது, கழுத்து, பின்பக்கம், மார்புகள் ... என்று ஒவ்வொரு அங்கமாக செல்லுங்கள்... உங்கள் காமத்தை வெல்லுங்கள்...!

English summary
Kissing is one of the most magical and powerful lust tools to turning a person on. Below are several types of kisses for you to take note of the next time you are out with that hot date.

Get Notifications from Tamil Indiansutras