•  

35 வயதுக்கு மேல்தான் பெண்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கிறதாம்!

இருபதுகளை விட முப்பதுகளில்தான் பெண்களின் செக்ஸ் ஆசை அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு 28 வயதிலும் ஆண்களுக்கு 31 வயதிலும் பாலுணர்வு கிளர்ச்சி உச்சத்தில் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

35 வயது முதல் 44 வயதுவரை உடைய பெண்கள் அதிக அளவில் கிளர்ச்சியுடன் இருப்பதாகவும், இந்த வயதுடைய 17 சதவிகிதம் பேர் தங்களின் கிளர்ச்சி 10க்கு10 சரியாக இருந்ததாக கூறியுள்ளனர்.

இதே வயதுடையை மூன்றுக்கும் மேற்பட்ட பெண்கள், அதாவது 36 சதவிகிதம் பேர் வாரத்திற்கு மூன்று முதல் 5 நாட்கள் வரை உறவில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். 20வது சதவிகித பெண்கள் வாரத்திற்கு நான்கு முதல் ஆறு நாட்கள் வரை உறவில் ஈடுபடுகின்றனராம்.

இந்த வயதை ஒத்த மூன்று பங்கு பெண்கள் தங்களின் செக்ஸ் வாழ்க்கையில் முழுவதும் திருப்தியாக இருப்பதாக கூறியுள்ளனர்.

‘ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே' என்ற கிளர்ச்சியூட்டும் நாவல் 47 சதவிகித பெண்களின் தாம்பத்ய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

35 முதல் 44 வயதுவரையிலும் அவர்கள் தங்களின் தாம்பத்ய வாழ்க்கையை கொண்டாடி மகிழ்கின்றனராம். இதற்கு காரணம் அந்த வயதில் டென்சன் குறைவு என்பதுதான்.

இருபதுகளில் திருமணமான புதிதில் கூச்சம் அதிகம் இருக்கும். குழந்தை பிறப்பு, அவர்களை வளர்ப்பது என பொழுது போய்விடும். ஆனால் 35 வயதில் அப்படி இல்லை. குழந்தைகள் வளர்ந்துவிடுவார்கள். எனவே கணவருடன் ஜாலியாக பொழுதை கழிக்க 35 முதல் 44 வயதுவரை ஏற்ற வயது என்கின்றனர் நிபுணர்கள்.

பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் காமீரான் டியாஷ் தன்னுடைய 40 வயதில்தான் உடல்ரீதியான தேவைகள் பூர்த்தியடைவதாக கூறியுள்ளார்.

செக்ஸ் ஆர்வம் தொடர்பாக பிரபல செக்ஸ் டாய்ஸ் விற்பனை நிறுவனம் 2100 பேரிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் 18 முதல் 65 வயதுவரை உடைய ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.

எந்த வயதுடைய நபர்கள் தங்களின் செக்ஸ் வாழ்க்கையில் ஆர்வத்துடனும் கிளர்ச்சியுடனும் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் பெரும்பாலான பெண்கள் தங்களின் 30 வயது முதல் 40 வயதில்தான் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக கூறியுள்ளனர். இதற்குக் காரணம் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் க்ரே செய்த மாயம்தான். இந்த நூல்தான் நடுத்தர வயதுடைய பெண்களின் ஆசைக்கு தீனி போட்டிருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

30 வயது முதல் 40 வயதில்தான் பெண்கள் தங்கள் கணவர்களுடன் சீரான உறவை பேணுகின்றனர். செக்ஸ் வாழ்க்கையில் அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர், தங்கள் துணைவருடன் அதிகமாக நெருக்கம் காட்டுகின்றனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

English summary
Thirty is the new twenty when it comes to having good sex, a new study has revealed. Previous research appeared to indicate that women peaked sexually at 28 and men at 31 but the study suggests that the true figure for women is at least seven years later.

Get Notifications from Tamil Indiansutras