•  

அந்த விசயத்தில உங்க துணை எப்படி?

Sex
 
படுக்கைய அறையில் என்னுடைய துணை எனக்கு ஈடு கொடுக்கக் கூடிய பார்ட்னர்தானா... இருவரின் டேஸ்டும் ஒத்துப் போகுமா? இதுதான் பலருக்கும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியாக இருக்கிறது. இதை எப்படி தெரிந்து கொள்வது என்று யோசிக்கவேண்டாம். சில விசயங்களின் மூலம் ரொம்ப ஈசியாக தெரிந்து கொள்ளலாமாம்.அந்த விசயத்தில் இவர் நமக்குப் பொருத்தமானவர் என்பதை திட்டமிட்டுச் சொல்வது என்பது கஷ்டமான காரியம்தான். ஆனால் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்க முடியும், கணிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.எடை, உயரம், வயது, நடத்தை, விருப்பங்கள் இதை வைத்து ஒருவர் நமக்குப் பொருத்தமானவரா என்பதைச் சொல்ல முடியாது. மாறாக படுக்கையில் என்ன செய்தார், எப்படி செயல்படுகிறார்கள் என்பதை வைத்தே ஒரு முடிவுக்கு வர முடியும்.பொருத்தமான செக்ஸ் பார்ட்னர் என்பதை முடிவு செய்ய பல காரணிகள் இருக்கும். இருப்பினும் பொதுவாக, செக்ஸூவலாக நல்ல ஆக்டிவாக இருப்பது, படுக்கை அறையில் விதம் விதமான சோதனைகளில் ஈடுபடுவது, நல்ல உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை முக்கிய காரணிகளாக கூற முடியும் என்கிறார் பிரபல செக்ஸாலஜிஸ்ட் கீர்த்தி மிஸ்ரா.நல்ல உடல்மைப்பு, செக்ஸில் நல்ல விருப்பம், பல்வேறு விதமான புதிய முயற்சிகளைப் பரீட்சித்துப் பார்ப்பது போன்றவற்றில் எந்த ஒரு தம்பதிக்கு நல்ல ஆர்வமும், வேகமும் இருக்கிறதோ அவர்களை பொருத்தமான தம்பதியர் என்று கூறலாம்.உடல் சுத்தம் முக்கியம்தம்பதிகள் இருவருமே உடல் ஆரோக்கியத்தை முக்கியமாக நன்கு பேணி வர வேண்டும். இது செக்ஸ் உறவில் முக்கியமானது. பெண் துணை தனது உடலை சிறப்பாக வைத்திருத்தல் அவசியம். அதேபோல ஆணும் தனது உடலை ஆரோக்கியமாக பேணி வருதல் வேண்டும். அந்தரங்க உறுப்பு சுத்தம் அவசியம். இல்லையெனில் ரொமான்ஸ் மூடுக்கு இது இடையூராக அமைந்துவிடும். அதேபோல் உடல் துர்நாற்றத்தை அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இதுவும் மூடை ஸ்பாயில் செய்து விடும்.வாய்வழிப் புணர்ச்சி இன்பத்தைக் கூட்ட உதவும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. எனவே அதையும் செய்து பார்க்க முயலலாம். ஆனால் வாய் வழிப் புணர்ச்சி சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு அது பிடிக்காது. மூடு, வசதி, இடம், சூழல் ஆகியவற்றைப் பொறுத்தே வாய்வழிப் புணர்ச்சிக்கு முயலலாம். அதேசமயம் யாரும், யாரையும் கட்டாயப்படுத்தத் தேவையில்லை. அது கூடவும் கூடாது.அதேபோல நமது துணை என்ன விரும்புகிறார், எப்படிப்பட்டதை விரும்புகிறார் என்பது உள்ளிட்டவற்றை அறிந்து, உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வதும் கூட நல்ல செக்ஸ் பார்ட்னர்களுக்கு அழகு ஆகும்..
English summary
Make sure your better half bears all these qualities in bed, so that you can unquestionably boast of having a great sex partner.
Story first published: Wednesday, November 21, 2012, 10:26 [IST]

Get Notifications from Tamil Indiansutras