•  

'அதுக்கு' ஏற்ற இடம் சமையலறைதானாம்…

Sex
 
செக்ஸ் உறவுக்கு ஏற்ற அருமையான இடம் சமையலறைதான் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. சமைக்கிற இடத்தில போயா என்று சிலர் சங்கடப்படலாம். ஆனால் சமையலறை மேடைதான் மையலுக்கு ஏற்ற இடம் என்று பெரும்பாலோனோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலியாவில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம்ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் 53 சதவிகிதம் பேர் ரொமான்ஸ் செய்வதற்கு ஏற்ற இடம் சமையலறைதான் என்று கூறியுள்ளனர். இதை விட ஒரு படி மேலாக 44 சதவிகிதம் உறவில் ஈடுபட சமையலறைதான் சிறந்த இடம் என்று கூறியுள்ளனர்.வாரம் ஒருமுறை வேண்டும்வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சமையலறையில் உறவு கொள்வதாகவும் ஏராளமானோர் வாக்களித்துள்ளனர். சமையலில் ஈடுபடும் போது தங்கள் கணவர்கள் தங்களை சில்மிஷம் செய்யவேண்டும் 10ல் 6 பெண்கள் விரும்புவதாக கூறியுள்ளனர்.புதுமணத் தம்பதிகள் அதிகம்கூட்டுக்குடும்பமோ, தனிக்குடும்பமோ புதிதாய் திருமணமானவர்கள் அதிகம் ரொமான்ஸ் செய்வது சமையலறையின்தானாம். மனைவி சமைக்கும் போது அதை சாக்காக வைத்து சமையலறைக்குள் சென்று மனைவியை செல்லமாக சீண்டி சிலிர்க்க வைப்பது கணவர்களின் பழக்கம்.வயசானாலும் சமையலறைதானாம்...புதிதாக திருமணமானவர்கள் மட்டுமல்ல திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த ஜோடிகளும் கூட சமையலறையில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். பதின் பருவப் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நைசாக சமையல் அறையில் புகுந்து கொள்கின்றனர். எனவே சமையல் அறைதான் தங்களின் சாய்ஸ் என்று பெரும்பாலோர் கூறியுள்ளனர்.உணவின் ருசி கூடும்சமையலறையில் சமையலோடு ரொமான்ஸ்சும் நடந்தால் உணவு ருசி கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.அதுவும் மீன் உணவு, சாக்லேட் புட்டிங் போன்ற உணவுகள் சமைக்கும் போது மையலில் ஈடுபட்டால் அந்த உணவு சிறப்பாக அமையுமாம்.இந்தியர்கள் என்ன சொல்றாங்க...இது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றி கணக்கெடுப்பு எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
English summary
A new survey has found that couples like to romance in the kitchen. According to the poll, 44 per cent of people admitted to sharing "intimate moments" with partners in the kitchen, with almost one in 10 saying it happens at least once a week.
Story first published: Friday, November 9, 2012, 15:50 [IST]

Get Notifications from Tamil Indiansutras