•  

விந்து முந்துவதை தடுக்கும் வீட்டு மூலிகைகள்

ஆண்களின் மிகப்பெரிய பிரச்சினை விந்து முந்துதல். இது ஆண்களை மிக அதிகமாகப் பாதிக்கும் பாலியல் பிரச்சினையாகும்.உறவின் போது பெண் தனது உணர்வின் உச்ச கட்டத்தை அடைவதற்கு முன்னரே ஆணுக்கு உணர்வின் உச்ச கட்டம் எட்டி விந்து வெளியேறிவிடுவதைத்தான் விந்து முந்துதல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உலக அளவில் நூற்றுக்கு பத்து ஆண்களுக்கு இந்த பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். இதனைத் தவிர்க்க பல்வேறு இயற்கை மருந்துகளை நம் முன்னோர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர். அவற்றை படியுங்களேன்.ஆண்மை பெருக்கும் ஜாதிக்காய்

ஆண்மை பெருக்கும் ஜாதிக்காய்

விந்து முந்துதலை தவிர்க்க உதவும் முக்கியமான நாட்டு மருந்து ஜாதிக்காய்,ஜாதி பத்ரி. ஜாதிக்காய் சூரணத்தை கால் பங்கு எடுத்து அதனுடன் மற்றுமுள்ள ஆண்மை பெருக்கும் மூலிகைகளின் பொடியோடு இரவில் பாலில் கலந்து சாப்பிட விந்து முந்துதல் நிற்கும்.

முந்துதலை தடுக்கும் முருங்கை

முந்துதலை தடுக்கும் முருங்கை

முருங்கை இயற்கை வயாக்ரா எனப்படுகிறது. முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, இவ்விரண்டும் சம அளவில் சேர்த்து, சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வதக்கி, பொரித்து, அதில் வேர்க்கடலையை வறுத்துப் பொடி செய்து, தூவி உணவுடன் சேர்த்து உண்ணலாம் இதனால் ஆண்மை அதிகரிக்கும்.. விறைப்பு நீடிக்கும், வேகமும் பெருகும். கீரையும், பூவும் சம அளவில் சேர்த்து, வேகவைத்து கடைந்து குழம்பாகவும் உபயோகிக்கலாம்.

தாது விருத்திக்கு அரைக்கீரை

தாது விருத்திக்கு அரைக்கீரை

அரைக்கீரை இன்றைக்கு அனைத்து காலங்களிலும் எளிதாக கிடைக்கும். இந்த கீரை இரத்தத்தை உற்பத்தி செய்யும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதி தணிக்கும். நரம்பு வலி, பிடரிவலியை எளிதில் போக்கவல்லது. இது தாதுவை விருத்தி செய்யும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் இதை பருப்புடன் சேர்ந்து கடைந்து சாப்பிடலாம். சாப்பிடலாம்.

தரமான தக்காளி சூப்

தரமான தக்காளி சூப்

ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்களுக்கு தக்காளி சூப் நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்குக் காரணம் தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ஆண்மை அதிகரிக்கும் ஏலக்காய்

ஆண்மை அதிகரிக்கும் ஏலக்காய்

ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை குறைபாடு பிரச்சினை நீங்கும். ஆனால் ஏலக்காயை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மன்மதனாக மாற்றும் இஞ்சி

மன்மதனாக மாற்றும் இஞ்சி

இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கியங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று பண்டைய நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் படுக்கை அறையில் மனைவியை அணுகும் போது தன்னம்பிக்கையும் அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

 

 

English summary
Premature Ejaculation (PE) is the most common sexual problem among men. It is not very difficult to identify: It usually means that a man reaches the orgasm too soon. For most couples, premature ejaculation can be a really embarrassing condition. Men who suffer from premature ejaculation start dreading sex and eventually it may even affect their overall confidence level.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more