சக்தி அதிகரிக்குமாம்
தாம்பத்ய உறவின் மூலம் ஆண்களுக்கு சக்தி விரயம் ஏற்படுகிறது. அதேசமயம் பெண்களுக்கு கிடைக்கும் ஆர்கஸத்தின் மூலம் சக்தி கிடைப்பதோடு உற்சாகம் ஏற்படுகிறதாம். இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 28 சதவிகித பெண்கள் அரிதாகத்தான் முழு உச்சக்கட்டத்தை அடைகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பெரும்பாலான பெண்கள் பொய்யான ஆர்கஸத்தை உணர்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சிந்தனை ஒருமுகப்படும்
உண்மையான, முழுமையான ஆர்கஸத்தை எட்டும் பெண்கள் உற்சாகமான மனநிலையை அடைகின்றனர். பெண்களின் சிந்தனை ஒருமுகப்படுவதோடு அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சிறப்பாக கவனம் செலுத்த முடியும் என்றும் கூறியுள்ளனர்.
மனதோடு தொடர்புடைது
ஆர்கஸம் பற்றி பல செய்திகள் எழுதப்படுகின்றன. சிறப்பான ஆர்கஸத்திற்காக எத்தனையோ அட்வைஸ்கள் சொல்லப்படுகின்றன. உணவில் தொடங்கி உறவிற்கான பொஷிசன்கள்வரை மாய்ந்து மாய்ந்து எழுதுகின்றனர். இந்த ஆர்கஸம் என்பது மனதோடு தொடர்புடையது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சிறப்பான ஆர்கஸம்
செக்ஸ் உறவில் உச்ச நிலையை இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் இருக்கிறது. உடற்பயிற்சி செய்யும் பெண்களுக்கு சிறப்பான ஆர்கஸம் ஏற்படும் என்று கூறப்படுவதுண்டு.
உற்சாகமடையும் மூளை
இந்த ஆர்கஸம் என்பதே உடலோடு தொடர்புடையது மட்டுமல்ல மனதோடும் தொடர்புடையது. உறவின் போது மூளை வெகுவாக உற்சாகமடைகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். ஆர்கஸத்தின்போது மூளையை ஸ்கேன் செய்து பார்த்ததில் இது தெரியவந்ததாம். உறவின் போது மூளையில் சில பாகங்கள் உற்சாகமடைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.