•  

4 கோடி பேர் அலுவலகங்களில் போர்ன் படங்களை பார்க்கிறார்கள்: ஆய்வில் தகவல்

Porn Movies
 
அலுவலகத்தில் வேலை செய்யும் போது தினசரி 4 கோடி பேர் இணையதளத்தில் போர்னோ படங்களைப் பார்ப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலக அளவில் 6 கோடி பேர் இலவச போர்னே சைட்டுகளை லாக் ஆன் செய்கின்றனராம்.என்னதான் வீட்டில் சந்தோச சமாச்சாரங்கள் நடந்தாலும் அந்த மாதிரி படங்களையோ, போட்டோக்களையோ, செய்திகளையோ ரகசியமாக படிப்பதில் பலருக்கும் தனி சுகம்தான். இன்றைக்கும் உலக அளவில் பலகோடி மக்கள் தினசரி ரகசியமாக போர்னோ படங்களை இணையதளங்களில் பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.இது தொடர்பாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செக்ஸ் தெரபிஸ்ட் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.உலகம் முழுவதும் 6 கோடி மக்கள் இலவச போர்ன் வெப்சைட்களை லாக்ஆன் செய்கின்றனராம். இதில் மூன்றில் இருவர் அதாவது 4 கோடி பேர் தங்கள் அலுவலகத்தில் உள்ள வெப்சைட்களில் அந்த மாதிரியான படங்களைப் பார்க்க ஆர்வம் காட்டுவதாக ஆய்வில் தெரியவந்தது.ஆஸ்திரியா நாட்டின் சல்ஸ்பெர்க் நகரில் நடைபெற்ற கான்பரென்ஸ் ஒன்றில் பேசிய பெர்லினைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், போர்னோ படங்களைப் பார்ப்பது செக்ஸ்சுவல் நடத்தையோடு தொடர்புடையது என்று கூறினார். இன்றைய மாடர்ன் உலகில் போர்னோ படங்களை தனியாகவோ, நண்பர்களுடன் இணைந்தோ பார்ப்பது அதிகமாகிவிட்டது என்று தெரபிஸ்ட்கள் கூறியுள்ளனர். இதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இளையதலைமுறையினரை பார்க்கத்தூண்டும், படிக்கத்தூண்டும் எக்ஸ் தரமுடைய இணையதளங்கள் இன்றைக்கு மலிவாகிவிட்டதே இதற்குக் காரணம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.English summary
Millions of people are secretly viewing porn on their computers while they are at work, an expert has claimedAround 60 million people log on to the world's largest free porn website every day - and two thirds of those are doing so from their desks, according to German sex therapist Dr Christoph Ahlers.
 
Story first published: Thursday, November 22, 2012, 8:39 [IST]

Get Notifications from Tamil Indiansutras