•  

என்னை அவருக்குப் பிடிக்காம போய்ட்டா...?

ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் விஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு செக்ஸ் என்று வரும்போது பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை தொகுத்திருக்கின்றனர் ஆய்வாளர்கள்.அது என்ன 10 கவலை... என்னன்னு பார்க்கலாம் வாங்க...!என்னோட உடம்பு பொலிவிழக்கிறதே...!

என்னோட உடம்பு பொலிவிழக்கிறதே...!

இதுதான் பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கவலயாக இருக்கிறது. திருமணத்திற்குப் பின்னர்தான் பெண்களுக்கு இந்தக் கவலை அதிகரிக்கிறது. அதிலும் குழந்தை, குட்டி என்று ஆன பின்னர் பல பெண்களும் நமது உடல் வடிவிழந்து வருவதாக மனதை வருத்திக் கொள்கின்றனர்.

ஒரு வேளை கர்ப்பமாயிட்டா...?

ஒரு வேளை கர்ப்பமாயிட்டா...?

இது குழந்தைப் பேறை தள்ளிப் போட விரும்பும் பெண்களுக்கு வரும் கவலை. கொஞ்ச நாளைக்கு ஜாலியாக இருந்து விட்டு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாமே என்று கருதும் பெண்கள் உறவில் ஈடுபடும்போது ஒரு வேளை கர்ப்பமாயிடுவோமோ என்ற பயத்திலேயே உறவின் இனிமையை அனுபவிக்கத் தவறி விடுகிறார்களாம்.

ஆர்கஸம் வரலையே...!

ஆர்கஸம் வரலையே...!

இதுவும் பல பெண்களுக்கு வரும் ஒரு கவலை. உறவில் மும்முரமாக ஈடுபடும்போது மனம் முழுக்க இன்னிக்காவது நமக்கு சரியா ஆர்கஸம் வருமா, கணவருக்கு இன்பம் கிடைக்குமா, நமக்கும் சந்தோஷம் ஏற்படுமா என்ற பதட்டத்தில் இருக்கும் பெண்கள் பலர் உள்ளனராம். இப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்கள் கிளிட்டோரிஸை தூண்டுவித்தும், முன் விளையாட்டுக்களை அதிகப்படுத்தியும் இன்பத்தை கூட்டி ஆர்கஸத்தை வர வைக்க முயற்சிக்கலாம் என்று கூறுகிறார்கள் டாக்டர்கள்.

உறவு வர வர கசக்கிறதே...!

உறவு வர வர கசக்கிறதே...!

இதுவும் பல பெண்களுக்கு ஏற்படும் பொதுவான கவலைதான். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்த நிலையி்ல பல பெண்களுக்கு உறவில் ஒருவித ஈடுபாடு குறைந்து போய் விடும். சம்பிரதாயத்திற்காக உறவு வைத்துக் கொள்பவர்கள் பலர் உள்ளனர். புருஷன் கோபித்துக் கொள்வாரே என்பதற்காக உறவு வைத்துக் கொள்பவர்களும் பலர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு உறவு கசந்து வருவதாக ஒரு கவலை தலை தூக்கும்.

கடமைக்காக உறவு...!

கடமைக்காக உறவு...!

சில பெண்களுக்கு அன்று மூடு இருக்காது. இருந்தாலும் கணவர் கூப்பிடுகிறாரே என்பதற்காகவும், அல்லது வேறு காரணங்களுக்காகவும் கடமைக்காக படுத்துக் கிடப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மனதில் தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதாம்.

பிறப்புறுப்பு வறட்சியா இருக்கே...!

பிறப்புறுப்பு வறட்சியா இருக்கே...!

சில பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி பிரச்சினை இருக்கும். லூப்ரிகண்ட் தன்மை இல்லாமல் இருக்கும்போது உறவு கொள்ளும்போது வலிக்குமே, கஷ்டமாக இருக்குமே என்று இவர்கள் பயப்படுவார்கள், கவலை கொள்வார்கள். உரிய லூப்ரிகண்ட் வசதிகளைச் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் பல உள்ளன. அவர்கள் இதைக் கடைப்பிடிக்கலாம்.

ரொம்பப் படுத்துராருப்பா!

ரொம்பப் படுத்துராருப்பா!

சில பெண்களுக்கு தங்களது துணைகள் செய்யும் முரட்டுத்தனமான முன்விளையாட்டுக்கள் பிடிக்காது. குறிப்பாக கடிப்பது, அழுத்துவது, கிள்ளுவது, பிறாண்டுவது, பிடித்து முரட்டுத்தனமாக அணைப்பது, சத்தம் போட்டு உறவு கொள்வது போன்றவை எரிச்சலைக் கொடுக்கும். அதேபோல பிறப்புறுப்பு வறட்சி இருக்கும்போது கூட அதைப் பற்றி கவலையே படாமல் தன் காரியத்தில் மட்டும் துணைகள் மும்முரமாக இறங்குவதையும் பல பெண்கள் விரும்புவதில்லையாம்.

சுய இன்பம் நல்லதா, கெட்டதா?

சுய இன்பம் நல்லதா, கெட்டதா?

சில பெண்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருக்கும். திருமணமான பெண்களும் கூட இதில் விதி விலக்கு இல்லை. இப்படிப்பட்டவர்களுக்கு நாம் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் ஏற்படும். ஆனால் இது பெரிய தவறல்ல என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் தேவையான இன்பம் இயற்கையாகவே கிடைக்கும் நிலை இருந்தால் சுய இன்பப் பழக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.

நான் லெஸ்பியனா??

நான் லெஸ்பியனா??

சில பெண்களுக்கு தங்களை விட அழகான பெண்கள் மீது ஆசை வரும். அழகா இருக்காளே, அவளுக்கு என்னை விட ஜோரா இருக்கே என்று பொறாமைப் பார்வையோடு பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் நாம் ஒரு வேளை லெஸ்பியனாக இருப்போமோ என்ற சந்தேகமும், கவலையும் வருமாம்.

ஆணுறையை வெறுக்கிறாரே அவர்...!

ஆணுறையை வெறுக்கிறாரே அவர்...!

சில ஆண்களுக்கு ஆணுறையைப் பயன்படுத்துவது அறவே பிடிக்காது. அப்படிப்பட்டவர்களால் அவர்களது மனைவியர் பெரிதும் பயப்படுவார்களாம். ஒருவேளை கர்ப்பமாகி விடுவோமா என்று அவர்கள் அஞ்சுவார்களாம்.

 

English summary
Everyone worries about sex. Are you doing it right? What if your body's not supermodel-standard? Why doesn't sex feel as good as it should? We go under the covers to try and solve the top ten sex worries for women.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras