•  

'லிப் லாக்' மூலம் என்ன ஃபீலிங் கிடைக்கும்?

அன்பின் முதல் மொழி முத்தம். காதலன் காதலிக்கு தரும் முத்தத்திற்கும், கணவன் மனைவிக்கு தரும் முத்தத்திற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் வரை எங்கு வேண்டுமானாலும் முத்தமிடலாம் என்றாலும் உதட்டோடு உதடு பொருத்தி முத்தமிடுவதைத்தான் தம்பதியரோ, காதலர்களோ விரும்புகின்றனர். ப்ரெஞ்ச் கிஸ் கொடுப்பதன் மூலம் என்ன நிகழ்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.பாசத்தோடு காமம் கலந்தது

பாசத்தோடு காமம் கலந்தது

முத்தத்தின் வெளிப்பாடு என்பது அன்பின் பரிமாற்றம் தான் என்றாலும், அதை கொடுக்கிறவர்களைப் பொறுத்தும், வாங்கிக் கொள்கிறவர்களைப் பொறுத்தும் மாறுபடுகிறது.. கணவன் மனைவிக்கு கொடுக்கும் முத்தத்தில் பாசத்துடன், காமமும் சேர்ந்தே இருக்கும்.

இனம் புரியாத ஈர்ப்பு

இனம் புரியாத ஈர்ப்பு

காதலர்களுக்குள் இந்த முத்தம் பரிமாறிக்கொள்ளப்படும் போது இந்த அன்பு, காமத்துடன் இன்னொன்றும் வந்து சேர்கிறது. அதுதான் எதிர்பார்ப்பு. துணை அடுத்து என்ன செய்யப் போகிறான் அல்லது என்ன செய்யப் போகிறாள் என்ற எதிர்பார்ப்பு காதலர்களுக்குள் இருப்பதால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் முத்தத்தில் இனம் புரியாத ஈர்ப்பு இருக்கிறது.

வாத்சாயனாரின் முத்த விளக்கம்

வாத்சாயனாரின் முத்த விளக்கம்

முத்தத்தை பற்றி அழகாக வர்ணிக்கிறார் வாத்சாயனார். "உணர்ச்சிகளின் எல்லையைத் தாண்டிய அவள், சண்டை இட்டுக்கொள்வது போல் அவனது தலை முடியை பற்றி இழுத்து, முகத்தோடு முகம் வைத்து, அவனது கீழ் உதட்டில் முத்தமிடுகிறாள். சித்தப்பிரமை கொண்டவள் போல் அவனது உடம்பெங்கும் கடித்துக் கொள்கிறாள். இந்த நேரத்தில் அவளது கண்கள் மூடியிருக்கும்..." என்று, காதல் பாடம் சொல்லிக்கொப்டே போகிறார் வாத்சாயனார்.

‘லிப் லாக்’சூடான ஆய்வுகள்

‘லிப் லாக்’சூடான ஆய்வுகள்

இப்போதெல்லாம் முத்தத்தை எப்படி கொடுத்தால் `கிக்` அதிகமாக இருக்கும் என்று ஆராய்ச்சிகளே நடத்தப்படுகின்றன. உதட்டோடு உதடு கவ்வும் `பிரெஞ்சு கிஸ்'. இந்த முத்தத்தின் போது என்னென்ன மாற்றங்கள் இருவரது உடலுக்குள்ளும் நிகழ்கின்றன என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உச்சக்கட்ட உணர்வு கிடைக்குமாம்!

உச்சக்கட்ட உணர்வு கிடைக்குமாம்!

தாம்பத்ய உறவின்போது ஆண், பெண் இருவரும் அடையும் உச்சக்கட்டத்தை, இந்த முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் போதும் அடையலாம் என்பதை நிரூபித்தது, அமெரிக்காவில் நடத்தப்பட்ட அந்த ஆய்வு. ஆழமான முத்தத்தை பரிமாறும் போது, அதை பரிமாறும் ஆண்பெண் இருவரது பால் சுரப்பிகளும் தூண்டப்படுவது அப்போது தெரிய வந்தது.

முத்தத்திற்கு மரியாதை தரும் பிலிப்பைன்ஸ்

முத்தத்திற்கு மரியாதை தரும் பிலிப்பைன்ஸ்

பிரெஞ்சு கிஸ் இதழ்களோடு நின்று விடுவதில்லை முத்தம் மூலம் உருவாகும் நெருப்பில் இருவரது உடல்களும் பிணைந்து விடுகின்றன. இன்றைய இளசுகள் இந்த முத்தத்தைத்தான் துணையிடம் விரும்புகிறார்களாம். பிற நாட்டினரைக் காட்டிலும் பிலிப்பைன்ஸ் காதலர்கள், நம்மவர்கள் காதலுக்கு மரியாதை செய்வதுபோல் முத்தத்திற்கு தனி மரியாதை கொடுக்கிறார்கள்.

காதல் தோல்விக்காக அங்கீகாரம்

காதல் தோல்விக்காக அங்கீகாரம்

காதலர்களுக்கு தோல்வி ஏற்படும்போதும் கூட, அந்த முத்தத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுக்கிறார்கள். அதாவது, காதலியானவள் தனது உள்ளாடையையும், காதலன் அவனது உள்ளாடையையும் அவர்களுக்குள் பரிமாறிக்கொண்டு பிரிந்து விடுகிறார்கள். அதன்பின்னர், இருவரும் சந்தித்துக் கொள்வதே இல்லை. அதேநேரம், காதலி அல்லது காதலன் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம், அவர்களின் உள்ளாடையை முத்தமிட்டு, தங்களது மனப்பாரத்தை இறக்கிக் கொள்கிறார்களாம்.

முத்தம் மூலம் கிடைக்கும் பரவச நிலை

முத்தம் மூலம் கிடைக்கும் பரவச நிலை

ஒவ்வொரு நாட்டினர் இடையேயும் முத்தம் வெவ்வேறு வழிகளில் கையாளப்படுகிறது. பயன்படுத்தும் வழிகள் பலவாக இருந்தாலும், அந்த முத்தத்தால் கிடைக்கும் பரவசம் ஒன்றுதான் என்கின்றனர் நிபுணர்கள்.

 

English summary
There's a feeling people get from a good kiss that's just just hard to explain.Feelings of passionate love, often but not always a contributing factor to a really good kiss, are believed to stimulate the same type of brain activity as parachuting, bungee jumping, distance running or other sports activities, says Marta Miana, a UNLV psychology professor specializing in sexuality and health psychology.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras