•  

தூண்டி விடுங்கள் இன்பத் தீயை...!

Rekindle the flame
 
நாளாக ஆக எதுவுமே பழசாவது உலக இயல்பு. அதற்காக சில விஷயங்களை அப்படியே விட்டு விட முடியாது. எதையாவது செய்து அதை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அதில் செக்ஸ் உறவும் முக்கியமான ஒன்று.வாழ்வில் மறந்து போகக் கூடாத முக்கியமான அம்சம் செக்ஸ். போரடிச்சுப் போச்சுப்பா, எல்லாம் முடிஞ்சு போச்சு என்று சிலருக்கு புலம்பல் வெளிப்படலாம். ஆனால் அப்படியெல்லாம் இருக்கப்படாது. எதையாவது செய்து காமத் தீயை, இன்பமான உறவுத் தீயை உயிர்ப்புடனும், பிரகாசத்துடனும் வைத்திருக்க வேண்டியது அவசியம், முக்கியம். அதற்கு என்ன செய்யலாம்.. ஒரு பார்வை பார்ப்போமா...சொல்லித் தெரிவதில்லை காமக் கலை என்பார்கள். எனவே இதற்கும் கூட தனியாக டியூஷன் எல்லாம் போகத் தேவையில்லை. நம்மிடம் இருக்கும் உணர்வுகளை ஒருங்கிணைத்து புதுப்பித்தாலே போதும், தானாகவே உணர்வு என்ஜின் ரீஸ்டார்ட் ஆகி விடும்.படுக்கை அறையில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும், பழக்கம் இருக்கும், புதுமை இருக்கும். இதையெல்லாம் மீண்டும் மீண்டும் துடிப்போடும், உயி்ர்ப்போடும் செய்து பார்த்தாலே போதும். நிச்சயம் போதுமான எனர்ஜி மீண்டும் திரும்பும்.ஆரம்பத்தில் செய்த பல வித்தியாசமான முயற்சிகளை மீண்டும் ஒரு முறை அசை போட்டு திரும்பச் செய்ய முயற்சிக்கலாம். உங்களிடம் உங்களது துணைக்கு ரொம்பப் பிடித்தமான விஷயத்தை மீ்ண்டும் செய்து அவரை குஷிப்படுத்தலாம். சில பொசிஷன்களை நீங்கள் இடையில் விட்டிருக்கலாம். அதற்கு மீண்டும் திரும்பலாம்.சிலர் ஆரம்பத்தில் வாரத்தில் பலமுறை உடலுறவில் ஈடுபட்டிருப்பார்கள். அது போகப் போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாதத்தில் சில முறை என்று மாறியிருக்கலாம். அதை மாற்றி மீண்டும் வாரத்தில் பலமுறை இல்லாவிட்டாலும் கூட சில முறை என்ற அளவுக்கு மாற்றியமைக்கலாம். இதனால் புத்துணர்ச்சி கிடைக்கும். புது அனுபவம் கிடைக்கும். பழைய உற்சாகம் மீண்டும் திரும்பும்.முன் விளையாட்டுக்கு மீண்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். புதிது புதிதாக செய்து பார்க்கலாம். கிளுகிளுப்பைக் கூட்டும் வகையில் புதிய ஐட்டங்களைக் களம் இறக்கிப் பார்க்கலாம். சொல்லாத இடம் கூட குளிர்கின்றதே என்ற பாடல் வரியைப் போல இதுவரை போகாத இடத்திற்கெல்லாம் போய்ப் பார்க்கலாம். நீண்ட நேர முன்விளையாட்டுக்கு மாறிப் பார்க்கலாம். இது உச்சகட்ட இன்பத்தை துடிப்புடன் இருக்க உதவும்.இயந்திரத்தனமாக செயல்படுவதை மாற்றிக் கொண்டு கலை நயத்தோடு அதை அணுகலாம். அனுபவித்து செக்ஸ் உறவில் ஈடுபடலாம். செய்யும் ஒரு செயலிலும் சுவாரஸ்யத்தைக் கூட்டுங்கள், சிலிர்க்க வைக்கும் செயல்களில் ஈடுபடுங்கள், காதலுடன் காமத்தை அணுகுங்கள், காமத்திலும் கூட காதலை வெளிப்படுத்துங்கள்.வார இறுதி நாட்களை வீட்டில் வைத்துக் கொள்ளாமல் எங்காவது ரிசார்ட்டுக்கோ அல்லது மலைவாசஸ்தலத்துக்கோ, சுறறுலாத் தலத்துக்கோ போய் வாருங்கள். புது இடம், புது உறவு, புது உற்சாகத்துடன் சல்லாபத்தில் ஈடுபடுங்கள், செம ஜாலியாக இருக்கும்.உங்கள் துணையுடன் நிறையப் பேசுங்கள், காதலை வெளிப்படுத்துங்கள், இன்னும் நீ எனக்கு சலிக்கலைடா செல்லம் என்று கொஞ்சுங்கள், உன்னை விட்டு ஓடிப் போக முடியுமா என்று பாட்டுப் பாடுங்கள், சீண்டி விளையாடுங்கள், உங்களது பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும், செயல்பாடுகளாலும் அவரை சிலிர்க்க வையுங்கள்.ஆரம்பத்தில் இருந்த காதலை மீண்டும் வெளிக்கொணர்ந்து காமத்தீயை மேலும் பிரகாசமாக பற்றி எரிந்து, உங்கள் உடல் மீது பட்டுத் தொடர விடுங்கள்.. பிறகென்ன, இனியெல்லாம் சுகமே...

English summary
Given that the world's oldest guide on love, sex and spirituality is our home production, we Indians should be most adept at the subject. Not the case with you? Well, the book will never go out of fashion and relevance. Plus, its sex chapters have often been plucked out and circulated on the internet, books and on DVDs. tApart from positions, it has some useful advice on behaviour, kissing and touching as well. So, turn over a new leaf tonight!

Get Notifications from Tamil Indiansutras