இந்த உச்சக்கட்ட நிலையானது அவரவருக்குத் தோன்றும் விதத்தில் பலவாறு விரிவாக்கப்படும். இந்த உச்சக்கட்ட நிலையானது மூளை சுறுசுறுப்பாக்குவதோடு உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்கிறது என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் பட்டியலிட்டுள்ளதை படியுங்களேன்.
தன்னை மறந்த நிலை
இந்த உச்சக்கட்ட நிகழ்வை அலசிப் பார்த்தால் அது பால் உறுப்புக்களையும், நரம்பு மண்டலத்தையும் பொறுத்த ஓர் எதிர் அலை. மூளை தான் இந்தக் கிளர்ச்சி அத்தனைக்கும் மூல காரணமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்கின்றனர் நிபுணர்கள்.
மூளையில் இருந்து கிளம்பும் மின் உணர்வுகளும், ரசாயன சமிக்ஞைகளும் தண்டுவடத்தின் மூலமும், நரம்பு நுனிகள் மூலமும் உடலெங்கும் பரவுகின்றன. மூளையில் இருந்து இப்படி ஒரு செயல் நடந்து கொண்டிருக்க, தோல் மற்றும் செக்ஸ் உறுப்புகள், மார்பகங்களிலிருந்து கிளம்பும் சமிக்ஞைகளும் மூளையைச் சென்றடைகின்றன. இதற்குக் காரணம் பாலுணர்வு அடிப்படையான சிந்தனை, உணர்வு, படிமம் போன்றவை இன்றி பாலுணர்வுக் கிளர்ச்சி என்ற விஷயத்துக்கே துளியும் சாத்தியமில்லை. சில சமயங்களில் பால் உறுப்புக்களிலிருந்து தோன்றும் இனம் புரியாத உணர்வலைகள் மிக ஆழமாக உருவாகி அதனால் மூளை என்ன உணர்ந்தது என்றே உணர முடியாமலும் போகலாம். இந்த நிலை தான் தன்னை மறந்த நிலை எனப்படுகிறது.
உற்சாகம் தரும் இயற்கை ரசாயனங்கள்
உச்சக்கட்ட நிலையின் போது உடலில் சுரக்கம் இயற்கை ரசாயனங்கள் உடல்நலத்திற்கு நன்மை தருகின்றன. மனஅழுத்தத்தை நீக்குகிறது. வலிகளை போக்குகிறது. மார்பகப்புற்றுநோய், புரஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உடலை பொலிவாக்கும் ஆர்கஸம்
உச்சக்கட்ட நிலையின்போது உடல் முழுவதும் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் பாய்கிறது. இது அனைத்து நரம்புகளுக்கும் செல்வதால் சருமம் பொலிவடைகிறது என்கின்றனர் தோல்சிகிச்சை நிபுணர்கள். இதனால் இளமையுடன் திகழலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வாரத்திற்கு இரண்டுமுறை உறவின் மூலம் ஏற்படும் ஆர்கஸம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறதாம். இதனால் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிட்டு நோய் ஏற்படாமல் தடுக்கிறதாம்.
தூக்க மாத்திரை தேவையில்லை
இரவில் உறக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு ஆர்கஸம் மூலம் சுரக்கும் ஆக்ஸிடோசின் சிறந்த தூக்க மாத்திரை போல செயல்படுகிறதாம். இது இதயத்தையும் பாதுகாக்கிறதாம். இஸ்ரேலில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஆர்கஸம் மூலம் இதயநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
மனஅழுத்தம் குறையும்
ஆர்கஸத்தின் போது மூளை சுரக்கும் காக்டெயில் ஹார்மோன்களான என்டோர்பின், செரோடோனின் மற்றும் புரோலேக்டின் மனதிற்கு அமைதியை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதும் மன அழுத்தமும் தவிர்க்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
என்றென்றும் இளமை
உறவின் உச்சக்கட்டத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. இதனால் மனதும் மகிழ்ச்சியில் திளைக்கும். இது உடலின் இளமையை தக்கவைக்கிறது என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். நியூஜெர்சியில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பெண்களுக்கு ரெகுலராக ஏற்படும் ஆர்கஸம் மூலம் வலிகள் மறையும், எலும்பு நோய், மூட்டுவலி போன்ற பிரச்சினைகள் கூட ஏற்படாது என்கின்றனர் நிபுணர்கள்.