•  

கருப்புதான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்...!

Men are more attracted to women in black dresses
 
ஒவ்வொருவருக்கும் ஒரு பீலிங், ஒவ்வொருவருக்கும் ஒரு டேஸ்ட்... பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆண்களும், ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்களும் தனிப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி சில விஷயங்களில் பெரும்பாலானவர்களிடம் பொதுவான கருத்துக்கள் இருப்பது வழக்கம். அந்த வகையில் ஆண்களும் சரி, பெண்களும் சரி கருப்பு நிறத்தில் ஒருவிதமான ஈடுபாடு காட்டுகிறார்கள்.ஆண்களைப் பொறுத்தவரை பெண்கள் எப்படிப்பட்ட உடைகளை அணிந்தால் அவர்கள் அழகாக இருப்பார்கள் என்பதை கிட்டத்தட்ட சரியாக கணித்துக் கூறுவார்கள். உனக்கு இந்த நிறம்தான் எடுப்பாக இருக்கும். நீ இந்த சேலையில் வந்தால் தேவதை போல இருப்பாய். உனக்கு இந்த கலர் சூட்டாகும். இப்படி ஹேர்ஸ்டைலை மாற்றிக்கோ. இப்படி சிரித்தால் உன் முகத்திற்கு வசீகரமாக இருக்கும்.. இப்படி பல விஷயங்களை ஆண்கள் பெண்களுக்குப் பரிந்துரைப்பார்கள். கிட்டத்தட்ட இவை சரியாகவும் இருக்கும்.அந்த வகையில் பெண்களுக்கு ஏற்ற நிறமாக பெரும்பாலான ஆண்கள் கருதுவது கருப்பு நிறமாம். சிலர் சிவப்பு நிறம் கூட பொருத்தமாக இருக்கும் என்பார்கள். இன்னும் சிலருக்கு நீல நிறம் பிடிக்கும். இருப்பினும் கருப்புக்குத்தான் நிறைய ஆண்கள் ஓட்டுப் போடுகிறார்களாம்.ஏன் அப்படி... ஆண்களைப் பொறுத்தவரை கருப்பு நிறத்தில்தான் பெண்கள் ரொம்ப செக்ஸியாக தெரிகிறார்கள் என்று கருதுகிறார்களாம். அதிலும் சற்று உயரமான, உடல் வாகு கொண்ட பெண்களுக்கு கருப்பு நிறம்தான் ரொம்ப பொருத்தமாக இருக்கும் என்பது ஆண்களின் கருத்து. கூடவே சற்று நிறத்துடன் கூடிய பெண்களாக இருந்தால் கருப்பு உடைதான் அவர்களுக்குக் கவர்ச்சியோ கவர்ச்சி என்பது ஆண்களின் கருத்தாக உள்ளது.வெளியில் மட்டுமல்லாமல் உள்ளாடைகளிலும் கூட பெண்கள் கருப்பை அணிந்தால் செம கவர்ச்சி என்பது ஆண்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக கருப்பு நிற பிராவில் பெண்களின் கவர்ச்சி பல மடங்கு அதிகரிப்பதாக கூறுகிறார்கள் ஆண்கள்.அழகான டிசைன் வைத்த கருப்பு நிற புடவை அணிந்து அதற்கு மேட்ச்சாக பிளவுஸ் போட்டுக் கொண்டு நெற்றியில் சின்னதாக கருப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டு அப்படி டக் டக் என நடந்து வந்தால் அடடா, அடடா என்று ரசிக்கத் தோன்றும் என்று கூறுகிறார்கள் ஆண்கள். கருப்பு நிற உடை ஒரு விதமான அமானுஷ்ய உணர்வைத் தரும் என்றாலும் கூட கருப்பு நிற உடையில் பெண்களைப் பார்க்கும்போது ஒருவிதமான பரவசம் ஏற்படும் என்பதும் ஆண்களின் கருத்தாகும்.கருப்பாக இருக்கும் பெண்களை விட சற்று கலரான, மாநிறமான பெண்களுக்குத்தான் கருப்பு நிற உடை மகா பொருத்தமாக இருக்குமாம். கருப்பு நிற உடையோடு கூடவே தலையி்ல மல்லிகைப் பூவையும் சேர்த்துக் கொள்ளும்போது அதற்குக் கிடைக்கும் கவர்ச்சியே தனி என்று சிலாகித்துக் கூறுகிறார்கள் ஆண்கள்.ஆண்களின் இந்த கருப்பு மோகத்திற்கு பிரத்யேக காரணம் என்று எதுவும் இல்லை. கருப்பு நிறமே ஒருவிதமான ஈர்ப்புடன் கூடியது என்பதால், பெண்களின் உடலை அந்த கருப்பு நிற உடை அலங்கரிக்கும்போது கூடுதலாக ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான் பெண்களை கருப்பு நிற உடையில் பார்க்க ஆண்கள் விரும்புகிறார்கள் என்று மனநல நிபுணர்கள் கூறுகிறார்கள்.நம்ம ஊர் ஆண்களைப் பொறுத்தவை சுடிதார், மிடி, மினி என்று பெரும்பாலும் விரும்புவதில்லை. மாறாக, கருப்பு நிற புடவையில்தான் பெண்களை அதிகம் பார்கக விரும்புகிறார்களாம்.பிறகென்ன வீட்டில் கருப்பு நிற புடவை இருந்தால் ரெடி பண்ணிக்குங்க, மனசுக்குப் பிடிச்சவரைப் பார்க்கும்போது அந்தப் புடவையில் போய் அசத்துங்க...!
English summary
There are certain things that men and women alike should own at least one of within their wardrobe. All women need to have a little black dress hanging up in their closets, because it is something that you can literally wear in almost every single setting. In addition to that, regardless of your body type, most men are attracted to women in little black dresses.
Story first published: Wednesday, October 3, 2012, 15:55 [IST]

Get Notifications from Tamil Indiansutras