•  

‘லவ் ஜூலே’ ஸ்பெஷல் பார்! குதூகலிக்கும் ஜப்பான் பெண்கள்!!

Japan opens first masturbation bar for women
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் அருகில் உள்ள சிபுயா மாவட்டத்தில் ‘லவ் ஜூலே' என்ற பார் தொடங்கப்பட்டுள்ளது. இது காதலுக்கும், செக்ஸ்க்காகவும் பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ளது.இந்த பாரில் அப்படி என்னதான் சிறப்பு என்கிறீர்களா? பெண்களுக்கான மதுவோடு சிறப்பு செக்ஸ் டாய்ஸ்களும் இடம்பெற்றிருக்கிறதாம். கலர் கலராக டஜன் கணக்கில் குவிந்து கிடக்கும் செக்ஸ் பொம்மைகளுக்காகவே பெண்கள் இங்கு படையெடுக்கின்றனராம்.இந்த பாரின் உரிமையாளர் மிகுமி நககாவா, மதுவகைகளை அழகாக அடுக்கி வைத்திருப்பதை விட பெண்களை கவரும் வகையில் வைபிரேட்டர்கள், பொம்மைகளை அடுக்கி வைத்திருப்பது அவர்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடியதாக இருக்கிறது. என்கிறார்.இங்கு வரும் பெண்கள் ரிலாக்ஸ் ஆக அமர்ந்து தங்களுக்குத் தேவையானவைகளைப் பற்றியும், எந்த வகையில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்பது பற்றியும் வெளிப்படையாக பேசலாம் என்கின்றனர் நிபுணர்கள்.இங்கு பெண்களுக்காக பிரத்யேக திரைப்படங்களும் ஒளிபரப்புகின்றனராம். ஒரினச்சேர்க்கைப் பற்றியும், சுயஇன்பம் பற்றியும் இன்றைக்கு பெரும்பாலானவர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு அதைப்பற்றி பேசுவதற்கு பிரத்யேக இடம் வேண்டும் என்பதற்காகவே இந்த பார் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் பார் உரிமையாளர் நககாவா.
English summary
Love Joule, a colorful new bar in the Shibuya district of Tokyo, is the first "love and sex bar dedicated to women.
Story first published: Thursday, October 4, 2012, 11:19 [IST]

Get Notifications from Tamil Indiansutras