•  

இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்தான்!

விடிந்தபின்னும் எழ மனமில்லாத அதிகாலைகள். சில்லென்று பெய்யும் மழை, யாராக இருந்தாலும் படுக்கையில் இருக்கவே மனம் விரும்பும். துணையும் அருகில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தை விட அதிகாலை நேரத்தில் விளையாட்டை விரும்ப அதுவே காரணமாகிவிடும். அதிகாலை உறவின் மூலம் நன்மைகள் அதிகம் இருக்காம் தெரிந்து கொள்ளுங்களேன்.அதிகாலையில் ரசியுங்கள்

அதிகாலையில் ரசியுங்கள்

காலையில் எழும்போதே மனம் அமைதியாக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமே, என்ன வேலை இருக்கோ, யாரிடம் திட்டு வாங்கணுமோ, பசங்களை கிளப்பணுமே இந்த சிந்தனைகள் எதுவும் இல்லாமல் அதிகாலையை ரசியுங்கள்.

கூடுதலாய் சுரக்கும் ஹார்மோன்

கூடுதலாய் சுரக்கும் ஹார்மோன்

ஜன்னலைத் திறந்தாலே ஜில்லென்று முகத்தில் அறையும் காற்று கூடுதல் சுகத்தைத் தரும். அந்த நேரத்தில் படுக்கையில் துணை இருந்தால் அழகாய் ரசியுங்கள். கலைந்த கேசம், இடம் மாறிய ஸ்டிக்கர் பொட்டு, லேசாய் விலகிய உடைகள் என ரசனை அதிகமாகும். அதுவே ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை கூடுதலாக சுரக்கச் செய்கிறதாம்.

மெதுவாய் முன்னேறுங்களேன்

மெதுவாய் முன்னேறுங்களேன்

சுறுசுறுப்பாய் பல்விளக்கிவிட்டு ஃப்ரெஸ் ஆக சென்று துணையின் அருகில் அமர்ந்து மெதுவாய் தலைகோதினால் போதும், அந்த இதமான ஸ்பரிசத்திற்கே இறுக்கமான அணைப்பு கிடைக்கும். அப்புறம் என்ன மெதுவாய் முன்னேற வேண்டியதுதான்.

கூடுதல் புத்துணர்ச்சி ஏற்படும்

கூடுதல் புத்துணர்ச்சி ஏற்படும்

இரவு நேர உறவை விட அதிகாலை நேரத்தில் ஏற்படும் உறவிற்குதான் கூடுதல் மகிழ்ச்சியும் கிடைக்கிறதாம். அதிகாலைநேர உறவு நம்மை புத்துணர்ச்சியோடு வைத்திருக்குமாம்.

இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்

இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்

சன்னமாய் ஊடுருவும் குளிர், ஒருபோர்வைக்குள் இருக்கமாய் அணைத்தபடி உறங்கும் சுகம் என இந்த மழைக்காலத்தில் தம்பதியரிடையே எத்தனையோ சந்தோசங்களை தருகிறது. அந்த நேரத்தில் ஏற்படும் ஆத்மார்த்தமான உறவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

காலை நேரத்தில் புதிது புதிதாக சில பொஸிசன்களை செய்து பார்க்கலாம். காலைநேரத்தில் உறவு கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். உறவின் உச்சக்கட்டத்தில் சுரக்கும் ஆக்ஸிடோசின் நாள் முழுவதும் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

சளி, காய்ச்சல் ஓடிப்போயிரும்

சளி, காய்ச்சல் ஓடிப்போயிரும்

நம்பினால் நம்புங்கள் அதிகாலையில் குளிருக்கு இதமாக இணையும் இந்த உறவின் மூலம் மழைக்கால சளி, காய்ச்சல் தொந்தரவு எதுவும் ஏற்படாதாம். கூந்தல் வளர்ச்சியும், நகங்களும், சருமமும் ஆரோக்கியமாக இருக்குமாம்.

மாரடைப்பு வராதுங்க!

மாரடைப்பு வராதுங்க!

அதிகாலையில்தான் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படுவது அதிகம். அதிகாலை நேரத்தில் உறவில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

அப்புறம் என்ன அதான் மழைக்காலம் ஆரம்பிச்சிருச்சே. இனி ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் தானே!

 

 

English summary
Having sex in the morning releases the feel-good chemical oxytocin, which makes couples feel bonded all day long. Apart from the fact that regular morning sex makes you feel upbeat for the rest of the day, it also helps in building a stronger immune system.
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more