•  

நல்ல 'அனுபவம்' கிடைக்க நாலு யோசனை!

Sex
 
செக்ஸில் ஈடுபடும்போது அதைக் கடமையாகச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இன்பம் மட்டுமே முதல் நோக்கமாக இருக்க வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கும் இன்பம் கூடுதலாகும்.



ஆண்களைப் பொறுத்தவரை சீக்கிரமே கிளைமேக்ஸுக்கு வந்து விடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படி இல்லை, சற்று நேரம் எடுக்கும். அதுவரையாவது ஆண்கள் தாக்குப் பிடிக்க வேண்டுமல்லவா... எனவே நீடித்த இன்பத்திற்கான வழிகளை யோசித்துப் பார்த்து அதைக் கடைப்பிடித்தால் நல்லது..



அதுகுறித்த சில யோசனைகள்...



'கண்ட்ரோல்' பண்ணுங்க



உறவின்போது சீக்கிரமே உயிரணுவை வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும், தவிர்க்க வேண்டும். அதற்கும் சில பயிற்சிகள் உள்ளன. சிலருக்கு உறுப்புகள் சந்தித்தவுடனேயே விந்தணு முந்திக் கொண்டு வந்து விடும். இதைத் தவிர்க்க வேண்டியது மிக மிக முக்கியம். உறவில் ஈடுபடும்போதும் சரி அல்லது சுய இன்பம் அனுபவிக்கும்போதும் சரி, வி்ந்தணுவை வெளியேற்றுவதை கட்டுப்படுத்துங்கள்.. அதாவது தாமதப்படுத்துங்கள். இதைச் செய்து வந்தாலே போதும், உங்களது உறுப்பு கட்டுக்குள் வந்து விடும்.



முன்விளையாட்டை நீடியுங்கள்



ஆணும், பெணும் முன்விளையாட்டில் ஈடுபடும்போது அதை நீண்ட நேரமாக நீட்டியுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விளையாடுங்கள். உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் வரை விளையாடுங்கள். குறிப்பாக பெண்கள் உணர்ச்சியில் கொந்தளித்துக் கொதிக்கும் வரை விளையாடுங்கள். இங்கு பெண்களின் உணர்ச்சிகளுக்குத்தான் ஆண்கள் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். இதுக்கு மேல தாங்காதுடா சாமி என்று பெண்கள் உங்களிடம் குமுறும் வரை விளையாடுங்கள். அதற்குப் பிறகு உள்ளே போங்க.



மெதுவாக ஆரம்பித்து வேகம் கூட்டுங்கள்



உறவில் ஈடுபட ஆரம்பித்த பின்னர் வேகத்தை முதலில் கட்டுப்படுத்துங்கள். முதலில் மெதுவாக இயங்குங்கள். மேலே இருந்து உறவில் ஈடுபடும் நபர்தான் டிரைவர் போல. எனவே அவர்தான் பார்த்துப் பதமாக, கவனமாக இயங்க வேண்டும். எப்போது வேகமாக போக வேண்டும், எங்கு ஸ்லோவாக வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்து இயங்க வேண்டும். நிதானமாக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக வேகமாக இயங்குங்கள். வேகம் அதிகமாவது போல தோன்றினால் உறுப்பை வெளியே எடுத்து விட்டு சில விநாடி தாமதத்திற்குப் பின்னர் மீண்டும் இயங்கலாம். இது உறவை நீட்டிக்க உதவும்.



மூடு அறிந்து முன்னேறுங்கள்



எப்போது உறவில் ஈடுபட்டாலும், துணையின் மூடையும் அறிந்து செயல்படுவது நல்லது. பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் முதலில் கிளைமேக்ஸ் வரும், பெண்களுக்குப் பின்னால்தான் வரும். சில சமயங்களில் பெண்கள் முந்திக் கொள்வார்கள், ஆண்கள் ஸ்லோவாக இருப்பார்கள். எனவே இருவரும் அவரவர் மூடை அறிந்து அதற்கேற்ப உறவில் ஈடுபடுவது நல்லது.



எல்லாம் தெரிந்ததுதானே என்று சொல்வது காதில் விழுகிறது. இருந்தாலும் இதுபோல மேலும் பல வழிகள் உள்ளன. அதையும் பார்த்துப் படித்து தெரிந்து தெளிந்து செயல்படுங்கள்...




English summary
When you are having sex, you enjoy it and always desire to make it last longer. But, after you reach climax, it becomes a tough job to get back in action! Most of the men find it hard to hold on their sexual drive for a longer duration. Well, you can easily control your foreplay, orgasm and sex and hold it without spoiling your mood. Here are few smart tips that can help you last longer whenever you have sex with your partner.
Story first published: Friday, October 12, 2012, 13:59 [IST]

Get Notifications from Tamil Indiansutras