பேச்சில் குஷிபடுத்துங்களேன்
வீட்டிற்குள் பெரியவர்கள், குழந்தைகள் முன்னிலையில் தம்பதியர்களால் எதுவும் விசேசமாக பேசிக்கொள்ளமுடியாது. அப்படியே ஏதாவது பேசினாலும் கோட் வேர்டில்தான் பேசமுடியும். ஆனால் படுக்கை அறை என்பது அந்தரங்கமானது. அங்கே தம்பதியர் மட்டுமே தனித்து இருக்கும் நேரத்தில் ஒருவரை ஒருவர் செல்லப்பெயர் வைத்து கொஞ்சிக்கொள்ளலாம், சற்று கிளர்ச்சி ஏற்படும் வகையில் கிளுகிளுப்பாக பேசலாம். அதைத்தான் உங்கள் துணையும் எதிர்பார்ப்பார்களாம்.
பிடிச்சிருக்கான்னு கேளுங்களேன்
உறவின் போது ஒருசார்புடன் தனக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்வதைவிட துணைக்கு என்ன பிடிக்கும். எப்படி செயல்படலாம் என்று ஆலோசனை கேளுங்களேன். இது பிடிச்சிருக்கா. வேற எந்தமாதிரி உனக்குப் பிடிக்கும் என்று கேட்பதன் மூலம் துணை மகிழ்ச்சி அடைவார்களாம். இதனால் உறவின் போது அதிக உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
அற்புதமாக இருக்கே
அதேபோல துணையை செயல்பட விட்டு அவரின் ஒவ்வொரு செயலையும் ரசிக்கவேண்டும். ‘இது நல்லா இருக்கு செல்லம்', ‘ரொம்ப அற்புதமா இருக்கே', ‘சான்ஸே இல்லை', ‘அழகான ராட்சஷா', ‘செல்ல ராஸ்கல்' போன்ற சில கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளை உபயோகிக்கவேண்டும் என்கின்றனர். வெறுமனே உணர்ச்சியற்று இருப்பதை விட இதுபோன்ற கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள் உறவின் உற்சாகத்தை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
புதுசா ஏதாவது ட்ரை பண்ணுங்களேன்
சமையலோ, தாம்பத்யமோ புதுசா ஏதாவது ட்ரை பண்ணாத்தான் சுவை கூடும். ஒரே இடம், ஒரே மாதிரியான செயல்பாடுகள் போரடித்துப்போனால் சுவாரஸ்யம் குறைந்து விடும். எனவே படுக்கையை இடம் மாற்றி, அறையின் அலங்காரத்தை கொஞ்சம் அப்படி இப்படி மாற்றி ட்ரை பண்ணுங்களேன். அன்றைக்கு ஏதோ புது இடத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். புதிதாக சில சமாச்சாரங்களை புகுத்தினால்தான் சமையலே ருசிக்கும் அப்புறம் மையலுக்கு கேட்கவா வேண்டும்.