•  

முன்னாடி மட்டுமில்ல பின்னாடியும் விளையாடனும்!

சின்னதாய் முத்தம், செல்லமாய் விளையாட்டு, காதுமடலில் கிசுகிசுப்பாய் பேச்சு போன்ற முன் விளையாட்டுக்கள் உறவு சிறப்பாக அமைய காரணமாகிறது. உறவு முடிந்த உடன் அப்படியே அடித்துப்போட்டதுபோல தூங்கிவிடுவது பலரது வழக்கம். ஆனால் முன்விளையாட்டுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதேபோல உறவுக்குப் பிந்தைய விளையாட்டிலும் கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான முத்தம், ஆறுதலான அணைப்பு என தாம்பத்ய உறவுக்குப்பின்னர் பல செயல்பாடுகளை ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கின்றனராம்.இது குறித்து பென்சில்வேனியாவைச் சேர்ந்த கல்லூரி குழுவினரும் மிக்சிகன் பல்கலைக்கழக உளவியல்துறையினரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். தாம்பத்ய உறவுக்குப் பின்னர் என்ன எதிர்பார்க்கின்றனர் என்றும் துணையுடனான அவர்களின் உறவு குறித்தும் 456 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறிய பதில்கள் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.கிளு கிளு பேச்சு

கிளு கிளு பேச்சு

தாம்பத்ய உறவுக்கு முன்பை விட உறவுக்குப் பின்னர் பேசும் பேச்சு கிளுகிளுப்பை அதிகரிக்குமாம். உறவின் போது நடந்த சுவாரஸ்யங்கள். எப்படி நடந்து கொண்டிருந்தால் கூடுதல் இன்பம் கிடைக்கும் போன்ற சில பேச்சுக்கள் பேசுவது அவசியம் என்று கூறியுள்ளனர். அதேபோல் உறவின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பது பற்றியும் கருத்து கேட்கவேண்டுமாம்.

சின்னதாய் மசாஜ் வேண்டுமே

சின்னதாய் மசாஜ் வேண்டுமே

உறவு முடிந்த உடன் இருவருக்குமே ஒருவித அயற்சி ஏற்படுவது இயல்புதான். எனவே ஒருவருக்கொருவர் ரிலாக்ஸ் செய்து கொள்ளும் வகையில் மென்மையாய் மசாஜ் செய்துவிட்டால் நன்றாக இருக்குமாம். தொடைப்பகுதி, முழங்கால் போன்ற இடங்களில் வலிக்காமல் பிடித்துவிட்டால் அன்றைய உறவு சூப்பராய் முற்றுப்பெரும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

சூடா குளிக்கலாமே!

சூடா குளிக்கலாமே!

உறவுக்குப் பின்னர் ஒரு சிலர் குளிப்பார்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் கை கால்களை கழுவிக்கொள்வார்கள். தனியாக குளிப்பதை விட இருவரும் சேர்ந்து சூடான ஷவரில் குளிப்பது சிலருக்கு பிடித்தமான விசயமாக இருக்கிறது. இதனால் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்து அன்றைய உறவு இனிதே முடிகிறதாம்.

வேடிக்கை விளையாட்டுக்கள்

வேடிக்கை விளையாட்டுக்கள்

உறவுக்குப்பின் சமூக வலைத்தளங்களை பார்வையிடுவதை சில விரும்புகின்றனராம். நண்பர்களின் ஸ்டேட்டஸ் பார்ப்பது. டிவி, ரியாலிட்டி ஷோக்களைப் பற்றி கமெண்ட் செய்வது என இறங்கிவிடுகின்றனராம். சிலர் இணையத்தில் போர்ன் நடிகைகள் படங்களையும் பார்க்கின்றனராம். உறவுக்குப் பிந்தைய இதுபோன்ற செயல்பாடுகளால் தம்பதியரிடையே இணக்கம் அதிகரிக்கும் என்கின்றனர்.

 English summary
To cuddle or sleep; what the hell are we supposed to do after sex?' It's a question on the mind of every sexually active conscientious man and woman, especially after a romp. Evolutionary psychologists at University of Michigan and Pennsylvania's Albright College tried to find out.
Story first published: Wednesday, October 31, 2012, 12:52 [IST]
Please Wait while comments are loading...

Get Notifications from Tamil Indiansutras