•  

பெண்களை பெண்கள் விரும்ப காரணம் தெரியுமா?

Sex
 
ஆணும் பெண்ணும் காதல் வயப்படுவதும், காமசுகம் அனுபவிப்பதும் இயல்பு. ஆனால் பெண்களைப் பெண்களே விரும்பி உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.போய்சே மாகாண பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 60 சதவிகிதப் பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம். 50 சதவிகித பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். போய்சே பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.பெண்களைப் பெண்கள் விரும்ப என்ன காரணம்?ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. ஆணும், ஆணும் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணைவதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. ஆண்கள் 30 சதவிகிதம் வரை ஓரினச்சேர்க்கையாளராக இருக்கின்றனராம். அதேபோல் பெண்கள் பிற பெண்களிடம் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் வரை உணர்ச்சி பெற்றிருக்கின்றனராம்.பெண்ணிடம் பெண் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தரும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண் பெண் இணைவின் போது பெண்ணை சரியான அளவில் தயார் படுத்துவதில்லையாம். மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை பயன்படுத்திக்கொள்கின்றனராம். அதேசமயம் பெண்களுக்கு இடையேயான உறவில் இருவருமே சரி சமமான சுகத்தை பெருகின்றனராம்.ஆண் ஒரு பெண்ணை கையாளும் போது முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால் ஒரு பெண் மற்றொரு பெண்ணை கையாளும் போது மென்மையானதாக இருக்கும் என்கின்றனர். இதுவும் கூட பெண்ணை பெண் விரும்ப காரணமாகிவிடுகிறது.ஆண் ஓரினச்சேர்க்கையில் எய்ட்ஸ் நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று கூறும் நிபுணர்கள். பெண் ஓரினச் சேர்க்கையில் எய்ட்ஸ் வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.வெளிநாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லெஸ்பியன் உறவு பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவருவதில்லை. இருப்பினும் இயற்கைக்கு மாறான இத்தகைய உறவுமுறைகளில் சிக்கிக்கொள்ளலாம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
English summary
A new study suggests that more than half of the women population are attracted to other women. According to a latest research, it claims that it is perfectly normal that most women are naturally bi-curious when it comes to sex, and it becomes more pronounced the older they get.
Story first published: Sunday, September 9, 2012, 14:31 [IST]

Get Notifications from Tamil Indiansutras