•  

அதிகமா மேக் அப் போட்டா ஆண்களுக்குப் பிடிக்காதாம்!!

Poonam Jhawer
 
அமைதியான பேச்சும், இயற்கையான அழகும் கொண்ட பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்குமாம். அதேசமயம் அதிகமாக பேசினாலோ, பிறரை கவர வேண்டும் என்று அதீத மேக் அப் போட்டுக்கொண்டிருக்கும் பெண்களையோ ஆண்களுக்கு பிடிக்காதாம். எந்த மாதிரியான பெண்களை ஆண்கள் வெறுக்கின்றனர். எந்த மாதிரியான பெண்களை ஆண்களுக்குப் பிடிக்கும் என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.அதிக மேக் அப் வேண்டாமேவிளக்கி வைத்த விளக்குப் போல பிரகாசமாக இருக்கும் பெண்களைத்தான் ஆண்களுக்கு பிடிக்குமாம். கருப்போ, மாநிறமோ யாராக இருந்தாலும் இயற்கை நிறத்தை மாற்றுவதற்காக அதீத மேக் அப் போடுவது சரியானதல்ல என்கின்றனர் நிபுணர்கள். பேசியல் செய்வது ஒன்றும் பிரச்சினையில்லை. ஆனால் நிறத்தை மாற்றும் வகையில் செயற்கையாக மேக் போடுவதுதான் சிக்கலை ஏற்படுத்தும். இதுபோன்ற பெண்களை ஆண்கள் விரும்புவதில்லையாம்.பேச்சை குறைக்கணும்ஒருத்தர் மட்டுமே பேசிக்கொண்டிருப்பதை எவ்வளவு நேரம்தான் கேட்டுக்கொண்டிருப்பது. ஆண்களை பேச விடாமல் ஒரேடியாக பேசி போரடிக்கும் பெண்களை பிடிக்காதாம். எது தேவையோ அதை விடுத்து தேவையற்ற சம்பவங்களை பேசும் பெண்களை ஆண்கள் வெறுக்கின்றனராம்.பிரச்சினையை பத்தி மட்டுமே பேசாதீங்கஎப்ப பார்த்தாலும் அது சரியில்லை, இது சரியில்லை. ஒரே பிரச்சினைதான் என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களா? இது மாதிரியான பேச்சு ஆண்களுக்கு பிடிக்காதாம். அது போரடித்து ஆளைவிட்டால் போதும் என்று அப்பீட் ஆகிவிடுகின்றனராம் ஆண்கள்.இடையில் குறுக்கிடாதீர்கள்நண்பரோ, காதலரோ பேசும் போது அடிக்கடி குறுக்கிடாதீர்கள். இது எரிச்சரை ஏற்படுத்தும். அதேபோல் தொலைக்காட்சியோ, கணினியோ ஆண்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியைப் பார்க்கும் போது இடையில் குறுக்கிட்டு சேனலை மாற்றாதீர்கள் இதுபோன்ற செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காதாம்.எனவே பெண்களே இதுநாள் வரை உங்களுக்குத் தெரியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் இனிமேல் கவனமாக இருங்கள். ஆண்களின் மனதை கவரலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
English summary
Men (well, most men) are fond of women. That the opposite sex both attracts and distracts has been true since the beginning of time. But men (again, most men) would find the world an infinitely better place to look at if women (that is, some women) stop indulging in some assumptions.
Story first published: Wednesday, September 5, 2012, 15:56 [IST]

Get Notifications from Tamil Indiansutras