•  

அச்சச்சோ, தப்பா பண்ணிட்டீங்களா.. கவலைப்படாதீங்க!

Kamasutra
 
பதறிய காரியம் சிதறும் என்பார்கள். அது போலத்தான் செக்ஸிலும் கூட அவ்வப்போது சிலர் ஏதாவது தப்பாக செய்து விடுவார்கள். அதனால் இருவருக்கும் இடையே கடும் டென்ஷனாகி விடும். இதுபோன்ற செக்ஸ் தவறுகள் சகஜம்தான், இருந்தாலும் இதையும் ஈசியாக சமாளிக்கலாம், சரி செய்யலாம்.



உறுப்பு வறட்சியை உணராமல்...



சிலர் முன்விளையாட்டு உள்ளிட்டவற்றில் கன கச்சிதமாக ஈடுபடுவார்கள். ஆனால் உடல் உறவைத் தொடங்கும்போது சில நேரங்களில் உறுப்பு வறட்சி இருப்பதை உணராமல் விட்டு விடுவார்கள். அதாவது பெண்ணுறுப்பானது நன்கு ஈரமடைந்து, வழவழப்பு அதிகமாகிய பின்னர்தான் ஆண் தனது உறுப்பை உள்ளே விட வேண்டும். அப்போதுதான் உறவு சுமூகமாக இருக்கும். ஆனால் பல ஆண்கள் அவசரக் குடுக்கைகளாக வறட்சியான நிலையில் உள்ளே போய் விடுவார்கள். இதனால் ஆண்களுக்கும் சரிவராது, பெண்களுக்கும் வலிக்கும். எனவே அப்படிப்பட்ட நிலையை சந்திக்கும்போது உறுப்பை வெளியே எடுத்து விட்டு சிறிது நேரம் விளையாடுங்கள். பிறகு எல்லாம் கூடி வந்த பின்னர் உள்ளே போங்கள்.



'காட்டுத்தனம்' வேண்டாமே...



சில ஆண்கள் உறவின்போது காட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். அதாவது கடிப்பது, அடிப்பது, கத்துவது, முரட்டுத்தனமாக பிடித்து இழுப்பது என்று படு வேகமாக இயங்குவார்கள். அதற்குக் காரணம் அவர்கள் அதிக உற்சாகத்துடன் இருப்பதே. ஆனால் இதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு உறவில்தான் வேகம் இருக்க வேண்டும், மாறாக பார்ட்னர்கள் படு வேகமாக இயங்குவதாலோ அல்லது முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாலோ சந்தோஷம் அடைவதில்லை.



பெண்களைப் பூவுக்கு ஒப்பிடுவது இதற்குத்தான். வலிக்காமல், அலுங்காமல், குலுங்காமல், அதேசமயம், உறவில் வேகம் இருக்கும்போதுதான் பெண்களுக்கு உணமையிலேயே சுகம் கூடுதலாகும், அவர்களும் அனுபவிப்பார்கள், நமக்கும் அந்த சுகானுபவம் கிடைக்க முழுமையாக ஒத்துழைப்பார்கள்.



எனவே உறவில் வேகமும், உங்களது இயக்கத்தில் மென்மையும் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்...தமிழுக்குச் சிறப்பு வல்லினம் மட்டுமல்ல, மெல்லினமும்தான் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன...!



தவறான முயற்சிகள்...



சிலர் புதிய பொசிஷன்களைச் செய்து பார்க்கப் போவதாக கூறி விட்டு அது சரிப்பட்டு வராமல் டென்ஷனாகி நிற்பார்கள். இதற்காக டென்ஷன் ஆகத் தேவையே இல்லை. யாருமே செக்ஸில் நிபுணர்கள் என்று கிடையாது. சில நேரங்களில் பரிசோதனைகள் தோல்வியில் முடியலாம். இதற்காக டென்ஷனாகி நிற்காமல், தெரிந்த பொசிஷனுக்கு உறவைத் தொடருவதே புத்திசாலித்தனம்.



சிலர் இப்போது பார் உன்னை எப்படி உணர்ச்சிவசப்பட வைக்கிறேன் என்று கூறி விட்டு எதையாவது செய்து பார்ப்பார்கள். ஆனால் அம்மணியிடமிருந்து எந்தவிதமான ரியாக்ஷனும் இல்லாமல் போய் விடும். இதனால் ஆண்கள் சோர்வடைந்து முகத்தை தூக்கி வைத்துக் கொள்வார்கள். இந்த விசனமும் கூடத் தேவையில்லாததுதான். உங்களது டிரிக்குகள் உங்களது துணையைக் கவரத் தவறி விட்டதற்காக வருத்தப்படாமல், அவருக்கு என்ன பிடிக்கும் என்பதைக் கண்டறிந்து, புரிந்து அந்த ரூட்டில் போனால் வழி பிறக்கும், சொர்க்க வாசலும் சீக்கிரமே திறக்கும்...!



உடனே போயிராதீங்க..



இந்தத் தவறைத்தான் நிறையப் பேர் அடிக்கடி செய்கிறார்கள். அதாவது உறவு முடிந்த பின்னர் விசுக்கென்று எழுந்து பொசுக்கென்று போய் விடுவது. இதைப் பெண்கள் எப்போதுமே விரும்புதவில்லை. உறவு முடிந்ததும் ஆசுவாசமாக இருவரும் இணைந்தே படுத்திருக்க வேண்டும். மனைவியின் மார்பில் தலை வைத்து எப்படிடா இருந்துச்சு செல்லம் என்று கேட்டுக் கொஞ்ச வேண்டும். மெதுவாகமுத்தமிட வேண்டும். தேங்ஸ் சொல்ல வேண்டும். செல்லமாக கொஞ்ச வேண்டும். அவரும் ஏதாவது சொல்லிக் கொஞ்சுவார். அவரிடம் உங்களுக்குப் பிடித்ததைச் சொல்லி அவர் வெட்கப்படுவதைக் கண்டு நீங்கள் சந்தோஷிக்க வேண்டும். இப்படி மாறி மாறி இருவரும் சில நிமிடங்கள் செல்லமான சீண்டல்களில் ஈடுபட்டு விட்டு பிறகே எழுந்திருக்க வேண்டும்.



இப்படிச் சின்னச் சின்ன தப்புகள் நிறைய இருக்கலாம். அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்து கொண்டால் உறவுகள் தொடர்கதைதான்....!




English summary
Many a times you tend to commit few mistakes while having sex. This is not intentional but you feel awkward and most of the partners get turned off. It is not under the control of an individual. You can make mistakes but, the trick to continue the sex is, you have to make up for the mistake instantly. Here are few simple tricks to help you fix sex mistakes.
Story first published: Sunday, September 30, 2012, 15:38 [IST]

Get Notifications from Tamil Indiansutras