•  

புதுமைப் பித்தனாக இருக்கலாமே...!

Sex
 
எப்படிப் பார்த்தாலும் எல்லாம் ஒன்றுதான், எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனால் பார்க்கும் விதம் என்று ஒன்று இருக்கிறதல்லவா...அதில்தான் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறார்கள்.செக்ஸ் வாழ்க்கையில், எல்லாமே பழசுதான். எதுவுமே புதிதில்லைதான். ஆனாலும் புதுசு புதுசா பார்த்தால்தான் அல்லது பார்க்கப் பழகிக் கொண்டால்தான் வாழ்க்கை போரடிக்காமல் போகும்.ஒவ்வொருவருக்கும் உள்ள ஸ்டைல், அணுகும் விதம், கையாளும் திறம் எல்லாமே நிச்சயம் வேறுபடும். இதில் மட்டும் யாரும், யாரையும் காப்பியடிக்க முடியாது, அதேசமயம் மேலும் காப்பிரைட்டும் கேட்க முடியாது -உலகளாவிய விஷயமாச்சே...உங்களது மனைவிக்கும், உங்களுக்கும் இன்று வித்தியாசமாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வு வருகிறதா, உடனே அதை செயல்படுத்த முடிவெடுங்கள். இன்றே செய், அதையும் நன்றே செய் என்ற முதுமொழிக்கேற்ப இன்றைய இரவை உங்களுடைய முதல் இரவாக மாற்றுங்கள்...வழக்கமான அணுகுமுறைகளை அப்படியே மறந்து விடுங்கள். தொடர்ந்து என்ன செய்து வந்தீர்களோ அதை இந்த ஒரு நாளில் மட்டும் மறந்து விடுங்கள். புதிதாக திட்டமிடுங்கள். இருவருக்கும் உடன்பாடான விஷயத்தை தீர்மானியுங்கள் - ஏகப்பட்ட ஐடியாக்கள் வரும், கிடைக்கும். அதை டிஸ்கஸ் செய்து ஒரு விஷயத்தை முடிவு செய்யுங்கள்.புதிய விஷயத்தை செய்து பார்க்கப் போவதால், மனதுக்குள் லேசான படபடப்பு, ஒரு சலசலப்பு, ஒரு விதமான கதகதப்பு, சிலுசிலுப்பு இருக்கத்தான் செய்யும். இருந்தாலும் கன்ட்ரோல் செய்யுங்கள், அமைதியாக இருங்கள்.இரவு சீக்கிரமே படுக்கைக்குப் போய் விடுவது நல்லது. உள்ளே போவதற்கு முன்பே டென்ஷன், கவலைகள், தேவையில்லாத குழப்பங்களை தூக்கி வெளியே போட்டு மேலே கல்லைப் போட்டு மூடி விடுங்கள், உள்ளே நீங்க மட்டும் போங்க.செல்போனை தூக்கி கடாசிடுங்க, டிவி இருந்தா - உடைச்சுடாதீங்க, ஆப் பண்ணிடுங்க. லேப்டாப்பை தூக்கி எங்காவது வச்சுருங்க. இப்படி முன்னேற்பாடுகளையெல்லாம் செஞ்சுட்டு படுக்கைக்குப் போங்க.வழக்கமாக செய்யும் எதையும் அன்று செய்யாதீர்கள். வித்தியாசமாக அணுகுங்கள், அமைதியாக நிதானமாக தொடங்கி தொடருங்கள்.நி்ச்சயம் இந்த இரவு உங்களுக்கு முதலிரவை விட படு சுவாரஸ்யமானதாக, மறக்க முடியாததாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

English summary
Everything in sex is new. If ypur approach is something different then you will get new experiance. Try it out today itself.

Get Notifications from Tamil Indiansutras