மனம் விட்டுப் பேசுங்கள்
வெளியில் ஏற்படும் சிக்கல்களை படுக்கை அறை வரைக்கும் கொண்டு சென்றாலே சிக்கல்தான். மனஅழுத்தம் இருந்தால் தம்பதியரிடையே ஏற்படும் உறவு சடங்குபோல மாறிவிடும். ஏனெனில் மனதில் மகிழ்ச்சி இருந்தால்தான் உறவில் இன்பம் இருக்கும். எனவே மனஅழுத்தத்திற்கான பிரச்சினையை கண்டறிந்து அதனை நீக்க முயலவேண்டும். எதனால் இந்த சிக்கல் என்பதை தம்பதியர் மனம் விட்டுப் பேசினாலே பாரம் குறைந்துவிடும்.
மசாஜ் செய்யுங்களேன்
மனஅழுத்தம் போக்குவதற்கு மசாஜ் சிறந்த மருந்தாகும். கணவருக்கு மனஅழுத்தம் என்றால் மனைவியும், மனைவிக்கு மனஅழுத்தம் என்றால் கணவரும் மசாஜ் செய்துவிட்டால் அழுத்தம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும். ஏனெனில் ஸ்பரிசம் என்பது அன்பை உணர்த்தும். விரலின் வழியே அன்பை உணர்த்துவதன் மூலம் மனதில் உள்ள பாரத்தைப் போக்கலாம். அதன்பின்னர் உறவில் உற்சாகமாக ஈடுபடலாம்.
மனஅழுத்தம் நீக்கும் டானிக்
மன அழுத்தமானது தாம்பத்திய உறவை பாதிக்கும் அதே சூழலில் தாம்பத்திய உறவானது மனஅழுத்தத்தினை குறைப்பதாக அநேக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரிசோனா மாகாண பல்கலைக்கழகம் நடுத்தர வயதைச்சேர்ந்த 58 பெண்களிடம் நடத்திய ஆய்வின்படி தனது துணையுடனான நெருக்கத்தினால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறையான எண்ணங்கள் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர். முதல்நாளன்று தாம்பத்திய உறவினால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்ந்து வரும் நாட்களில் மனஅழுத்தத்தை குறைப்பதாக தெரிவித்துள்ளனர்.
நல்ல மனநிலையுடன் இருப்பவர்கள் தனது துணையுடனான உறவில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதாக அதே ஆய்வில் தெரியவந்துள்ளது. நல்ல "மூட்" இருந்தால் தம்பதியர்களுக்கிடையே சிறந்த அளவிலான உறவு ஏற்பட்டு மன அழுத்தத்தை குறைப்பதாகவும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கவலை நீங்கும்
செக்ஸ் உறவானது மனஅழுத்தத்தினை குறைப்பதோடு மட்டுமல்லாமல் மனதை லேசாக்கி கவலைகளை மறக்கச்செய்வதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவின் போது நிகழும் ஆதரவான தொடுகை மனஅழுத்தத்தைப் போக்கி மனதையும், உடலையும் லேசாக்குகிறது. இது உற்சாகத்தை அதிகரிக்கச்செய்கிறது. இதனால் மனஅழுத்தத்தை ஏற்படும் ஹார்மோன் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.