ஒரே ஒரு விந்தனு போதுமாம், பெண்களை ஒட்டுமொத்தமாக ஸ்தம்பிக்க வைக்க. பெண்களின் புத்திர பாக்கியம், உடல் ரீதியான செய்கைகள், சாப்பிடும் தன்மை, தூக்கம் உள்ளிட்டவற்றை கடுமையாக பாதிக்க இந்த விந்தனுக்களில் உள்ள ஒரு புரோட்டின் காரணமாக அமைகிறதாம்.
செக்ஸ் உறவானது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி இன்பத்தை வாரிக் கொடுக்கும் வள்ளல் என்பதுதான் நமக்கெல்லாம் தெரிந்த விஷயமாக உள்ளது. ஆனால் அந்த செக்ஸானது பெண்களுக்குப் பல பாதிப்புகளையும் கொண்டு வருகிறதாம் கூடவே.
ஒரு ஆணின் விந்தனுவில் உள்ள குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் தூக்க முறையை குழப்பியடித்து விடுமாம். அவர்களின் சாப்பிடும் தன்மையை காலி செய்து விடுகிறதாம். மலட்டுத்தன்மைக்கும் கூட இது வித்திடுகிறதாம்.
இதுகுறித்து பழங்களில் அமருமே ஈ.. அதை வைத்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். அதில் கிடைத்த முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்கிறார்கள் அவர்கள்.
உடலுறவின்போது பெண்ணின் உடலுக்குள் செல்லும் ஆணின் விந்தனுவில் உள்ள புரதமானது என்னவெல்லாம் செய்கிறது, எப்படியெல்லாம் செயல்படுகிறது என்பதுதான் இந்த ஆய்வின் மையக் கருத்தாகும். இந்த ஆய்வை கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அப்போது ஆணின் விந்தனுவில் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதமானது, பெண்களின் உடலில் பல்வேறு சைட் எபக்ட்களை உருவாக்குவதாக கண்டறிந்துள்ளனர். மேலும் பெண்களின் உடலில் பல்வேறு வகையான பிரச்சினைகளையும் இது ஏற்படுத்துகிறதாம்.
கருத்தரிப்பதில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு இந்த விந்தனு புரதம்தான் காரணமாம். மேலும் சரியாக தூக்கம் வராமல் தவிப்பது, சாப்பிடுவதில் பிரச்சினைகள், நோய் எதிர்ப்புத் தன்மை குறைபாடு, உடலில் நீர்ச்சத்து குறைபாடு, செக்ஸ் ரீதியான சில குழப்பங்களுக்கும் இந்த புரதம்தான் காரணமாம்.
இப்படி பல குழப்பங்களை ஏற்படுத்தும் அந்த புரதத்திற்கு செக்ஸ் பெப்டைட் என்று பெயர். பெண்களின் ஜீன் வரிசையில் இந்தப் புரதங்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதே இதற்குக் காரணமாம்.
செக்ஸின்போது இன்பத்தை மட்டுமே ஆண்கள் பெண்களுக்குத் தருவதில்லை. மாறாக துன்பத்தையும் போனஸாக தருகிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான்.