•  

டேய், நீ ரொம்ப அழகா இருக்கடா...!

Couple
 
ஆறும் ஆழமில்லை, அது சேரும் கடலும் ஆழமில்லை.. இந்த பொம்பள மனசுதாய்யா ரொம்பவே ஆழமானது. அதற்குள் என்ன இருக்கிறது, எந்த நேரத்தில் என்ன பேசுவார்கள், எதை மனதில் வைத்துக் கொண்டு பேசுகிறார்கள் என்பதை படைத்த பிரம்மனால் கூட கண்டுபிடிக்க முடியாது. அப்படி ஒரு 'டீப்'பான மனதைக் கொண்டவர்கள் நம்ம பெண்கள்.இந்தப் பெண்கள் ஆண்களை எப்படியெல்லாம் வாருவார்கள் தெரியுமா.. அதைச் சொன்னால் ரெண்டு புக்கே போடலாம், அம்பூட்டு நீளமானது அந்த லிஸ்ட்.ஒரு ஆண், பெண்ணைப் பாராட்ட வேண்டும் என்றால் புகழ்ந்து பேசித்தான் பாராட்டுவான். ஆனால் ஒரு பெண் ஆணைப் பாராட்ட வேண்டும் என்றால் திட்டுவது போலத்தான் பாராட்டுவார். அதாவது எருமை மாடே என்று கூறினால், உடம்பெல்லாம் நல்ல கட்டழகோடு இருக்கிறது என்று அர்த்தமாம். டேய், கருப்பா என்றால் அவளுக்கு அவனின் கருமை நிறம் பிடித்திருக்கிறது என்று அர்த்தமாம். திட்டுவது போல நம்மை பாராட்டிக் கொள்வார்கள் பெண்கள். பெண்களாச்சே, எதையமே மறைமுகத்தானே செய்ய முடியும்...அதை விடுங்க. ஒரு பெண் ஆணிடம் எப்படியெல்லாம் பொய் சொல்வார் என்று உங்களுக்குத் தெரியுமா... இது கூடத் தெரியாமல் நீங்கள் உலா வருபவராக இருந்தால் முதல்ல இதைப் படிச்சுப் பார்த்து உஷாராகிக்கோங்க...காதல் என்றாலே விளையாட்டுதான். எதைச் செய்தாலும் ஒரு ஜாலிதான், எல்லாமே ஸ்வீட் நத்திங்ஸ்தான். சீரியஸாக ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் அந்தக் காதலே கூட சில சமயம் விளையாட்டாக இருந்து விடுகிறது. எனவே காதல் என்று வந்து விட்டாலே படு க்யூட்டாக நிறைய பொய் சொல்பவர்கள்தான் சாஸ்தி இருக்கிறார்கள்.அதிலும் இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, நிறைய பொய் சொல்கிறார்களாம். ஆனால் இந்தப் பொய்களைக் கூட காதலர்கள் வரவேற்கத்தான் செய்கிறார்களாம்... 'புன்னகை மன்னன்களாச்சே'...!சரி, அந்த பொய் புளுகாச்சிகள் குறித்து ஒரு நோட்டம் விடுவோமா...எல்லாத்தையும் சூப்பரா செய்றேடா...இதுதாங்க அத்தனை பாய் பிரண்டுகளும், தங்களது கேர்ள் பிரண்டுகளின் வாயிலிருந்து வர வேண்டிய முக்கிய பாராட்டாக கருதுகிறார்களாம். அதாவது தாங்கள் செய்யும் எல்லாவற்றையும் காதலியர் சூப்பர் என்று பாராட்ட வேண்டுமாம்.சூப்பர் உடம்புடா உனக்கு...இது கிட்டத்தட்ட 100 சதவீத ஆண்களும், தங்களது காதலியரிடமிருந்து பெற விரும்பும் விருப்ப வார்த்தையாக இருக்கிறதாம். அப்படியே ரஜினி மாதிரி பிட்டா இருக்கேப்பா, சல்மான் மாதிரி செம பாடிடா உனக்கு, ஷாருக்கோட கம்பீரம் உனக்கு இருக்குடா.. இப்படி 'பிட்டுப் பிட்'டாக காதலியர் போட்டுச் சென்றால் சந்தோஷமாக வாங்கிக் கொள்ள தயாராக இருக்கிறார்களாம் காதலர்கள்...(அந்த ரூம்ல டியூப் லைட் எரியலை போல, என்னன்னு பாருங்கப்பா...)பெட்ரூம்ல 'கிங்'குடா கண்ணா...இதுவும் கூட ஆண்கள், பெண்களிடமிருந்து எதிர்பார்க்கும் முக்கியமான வார்த்தையாம். எப்படி நடந்து கொண்டாலும் அதை சகித்துக் கொண்டு 'சூப்பரப்பு' என்று பெண்கள் சொல்ல வேண்டும் என ஆண்கள் விரும்புகிறார்களாம்.உன்னோட நினைப்புதாண்டா செல்லம்..இதுவும் கூட ஆண்கள் பெண்களிடமிருந்து விரும்பும் வார்த்தையாம். எப்பப் பார்த்தாலும் உன்னோட ஞாபகமாவே இருக்குடா, உன்னையேதாண்டா நினைச்சிக்கிட்டே இருந்தேன் என்று காதலியர் சொல்லும்போது உருகிப் போய் விடுவார்களாம் ஆண்கள்..என்னைய விட உன்னைத்தான் பிடிக்கும் டார்லிங்...இதுவும் கூட ஆண்கள், பெண்களின் வாயிலிருந்து வர விரும்பும் 'பிரமாண்ட'ப் பொய்களில் ஒன்றாகும். அதாவது உன்னைத்தான் பிடி்ககும், உன்னை மட்டும்தான் பிடிக்கும், உன்னைத் தவிர வேறு ஒன்றையும் பிடிக்காது என்று பெண்கள் அடிக்கடி சொன்னால் ஆண்களின் மனசுக்குள் 'மணி' அடிக்குமாம்...இப்படி ஏகப்பட்ட 'லொலலாய்களை' ஆண்கள் அதிகம் ரசிக்கிறார்களாம். பிறகென்ன கேர்ள்ஸ், யோசிச்சு 'லிஸ்ட்' போட்டு 'டிஸ்டர்ப்' பண்ணுங்க உங்காளுகளை...!
English summary
It is said that there is no fair game in love. You have to do a lot many things to make your boyfriend happy. Sometimes you have to play naughty, and even have to lie. Well there is absolutely no harm in telling lies that are harmless. Here are a few lies that almost all boyfriends love to hear.
 
Story first published: Saturday, September 22, 2012, 10:50 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more