முருங்கைக்காய் சாம்பார்
மனைவிக்கு ஆசை அதிகரித்து அன்றைக்கு இரவு வேண்டும் என்றால் முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரச்சொல்வாள். சின்ன வெங்காயம் அதிகம் போட்டு மணக்க மணக்க முருங்கைக் காய் சாம்பார் வைத்திருக்கிறாள் என்றால் அன்றைக்கு இரவு ஸ்பெசல்தான் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி ஒருவர்.
மல்லிகைப் பூவும் அல்வாவும்
என் மனைவிக்கு அன்றைக்கு தேவை என்றால் சாதாரணமாக தலையில் வைத்துக்கொள்ளும் மல்லிகைப்பூவை விட இரண்டு மடங்கு அதிகமாக மல்லிகை இருக்கும் அதை வைத்து முடிவு செய்து கொள்ளலாம் என்கிறார் ஒருவர்.
குலோப் ஜாமுன் வேண்டும்
சில பெண்கள் அல்வாவோ, குலாப் ஜாமுனோ வாங்கி வரச்சொல்வார்களாம். அப்படி ஆசைப்பட்டு கேட்டால் அன்றைக்கு இரவு ஸ்பெசல் என்று புரிந்து கொள்ளலாம். அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போதே குலாப்ஜாமூன் வேண்டும் என்ற அடம் பிடிக்கும் மனைவிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அதை வைத்தே அன்றைய இரவில் படுக்கை அறை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்வேன் என்கிறார் அனுபவசாலி கணவர்.
வடை பாயசத்தோடு விருந்து
முதல்நாளன்று இரவில் சரியான சுகம் கிடைக்காவிட்டால் சோற்றில் உப்பு போடமாட்டாள் என்கிறார் இன்னொரு அனுபவசாலி கணவர். அதேசமயம் உறவில் திருப்தியும், வேண்டிய அளவு சுகமும் கிடைத்தால் போதும் மறுநாள் விருந்து சாப்பாடுதான். பாயாசம் கூட இடம் பெற்றிருக்கும். இதை அடையாளம் கண்டு கொண்டு வீட்டில் இருப்பவர்களே எங்களை கிண்டல் அடிக்கத் தொடங்கிவிட்டனர் இன்னொரு கணவர்.
உங்க வீட்டில் எப்படி இதே கதைதானா?