•  

சீக்கிரம் 'கிளைமேக்ஸ்க்கு' போகாதீங்க!

Things you should never do while having sex
 
படுக்கை அறையில் உறவின் தொடக்கம் எப்படி மென்மையாக மெதுவாக ஆரம்பித்ததோ, அதேபோல கிளைமேக்ஸ் எனப்படும் உச்சக்கட்டமும் நிதானமாக இருக்கவேண்டுமாம். சீக்கிரமாக கிளைமேக்ஸ்க்கு போவதை யாருமே விரும்புவதில்லை என்கின்றனர் நிபுணர்கள். உறவின் போது தவிர்க்கவேண்டிய சில நடைமுறைகளை பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.முத்தம் வேண்டாமே!உறவின் தொடக்கத்தில் முத்தம் தான் திறவுகோல். முன்விளையாட்டுக்கு முத்தம் ஏற்றது. ஆனால் உறவின் போது ஈடுபாட்டுடன் இருக்கும் நேரத்தில் முத்தமிடுவதை பெரும்பாலோனோர் விரும்புவதில்லை. உறவின் லயத்தில் இணைந்து இருக்கும் போது முத்தமிடுவதை தவிருங்கள்.கடிச்சா வலிக்குமே!உறவின் போது மயக்கமான நிலையில் துணை இருக்கும் போது ஆர்வக்கோளாரில் கடித்து வைத்துவிடாதீர்கள். அது வலியை ஏற்படுத்துவதோடு சில சமயம் வடுவை உருவாக்கிவிடும். கடிப்பதனால் சிலருக்கு உற்சாகம் கூடும். ஆனால் துணை கடிப்பது சில சமயத்தில் எரிச்சலை ஏற்படுத்திவிடும். பதிலுக்கு எதிராளி கடிக்க அது சுகத்திற்குப் பதிலாக சோகத்தை ஏற்படுத்திவிடும். துணை விரும்பினால் மட்டும் காதுமடல், தோள்பட்டை,கழுத்து, கண்ணக் கதுப்பு என வசதியான இடங்களில் வலிக்காமல் கடியுங்கள்.சுகமான சுமையா?உறவின் போது சுமைகளை தாங்குவது சுகமானதுதான் அதற்காக முழு உடலையும் துணையின் மீது ஏற்றுவது சில சமயம் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே வேதனையில்லா உறவிற்கு ஏற்ற பொசிசன்களை தேர்ந்தெடுங்கள். இதமான உறவினை அனுபவிக்கலாம்.சீக்கிரம் கிளைமேக்ஸ் வேண்டாமேஉறவின் உச்சக்கட்டம் என்பது உடலளவிலும், மனதளவிலும் பலவித மாற்றத்தை ஏற்படுத்தும். ஆணோ, பெண்ணோ அனைவருமே இதை அனுபவப்பூர்வமாக உணர்கின்றனர். அவரவர் மனநிலையைப் பொருத்து உச்சக்கட்ட உணர்வை அனுபவிக்க முடியும். தொடக்கம் எவ்வாறு மென்மையாக மெதுவாக இருந்ததோ அதேபோல முடிவும் படிப்படியாக இருக்கவேண்டும். சிலருக்கு விரைவில் ஆர்கஸம் ஏற்பட்டுவிடும். சிலருக்கு மிகவும் லேட்டாகும். உறவில் இரண்டுமே கூடாது என்கின்றனர் நிபுணர்கள். உறவின் உச்சநிலையை இருவரும் ஒரே நேரத்தில் உணரவேண்டும் அதுவே உன்னதமான செக்ஸ் என்கின்றனர் நிபுணர்கள்.இது போர்னோ படமல்லசில தம்பதியர் போர்னோ படங்களை பார்ப்பவர்களா இருப்பார்கள். அதேம்மாதிரி நாமும் முயற்சி செய்வோமே என்றால் அது ஆபத்தில்தான் முடியும். சுவாரஸ்யத்திற்காகவும், நிறைய பேர் பார்க்கவேண்டுமே என்பதற்காகவும் இதுபோன்ற படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடப்படுகிறது. அவர்கள் தொழில் ரீதியாக செய்யும் செயல்களை நாம் நம்முடைய படுக்கை அறையில் முயற்சி செய்வது விபரீதத்தில் கொண்டு போய் விட்டுவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.இயந்திரமான இயங்காதீர்கள்உடல் உறவு என்பது இரு உடல்களின் சங்கமம் மட்டுமல்ல மனதளவில் சங்கமித்தால் மட்டுமே உறவில் உற்சாகம் கூடும். அந்த நேரத்தில் எதையாவது நினைத்துக்கொண்டு உறவில் ஈடுபடுவது இயந்திரத்தனமாக மாறிவிடும். இதனால் இருவருமே இன்பத்தை அனுபவிக்க முடியாது. எனவே உங்களின் அன்பை பரிபூரணமாக வழங்கி உங்கள் துணைக்கு இன்பத்தை அளிக்கவேண்டியது அவசியம். உற்சாகத்துடன் முழு மனதுடன் ஈடுபடுங்கள். இருவருமே உறவின் உன்னதத்தை உணரமுடியும்.உடனே வெளியேறாதீங்க!காரியம் முடிஞ்சிருச்சே இனி என்ன? என்கிற ரீதியில் உறவு முடிந்த உடன் எழுந்து உடனே போய்விடாதீர்கள். அப்புறம் இருக்கிறது ஆட்டமே. அன்பான அரவணைப்பில் கொஞ்சம் படுத்திருங்கள். தலையை கோதி உனக்கு பிடிச்சிருந்ததா? நன்றாக அனுபவித்தாயா? என்பது போன்ற கேள்விகளை கேட்பது துணைக்கு மகிழ்ச்சியைத் தருமாம். இது போன்ற செயல்பாடுகளால் தாங்களும் மதிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துமாம்.

English summary
When you're in bed with your lover, the last thing you want to do is turn them off. That said, here are a few common blunders that you should not commit.

Get Notifications from Tamil Indiansutras