•  

உங்களுக்கு முட்டைக் கண்ணா... அப்படீன்னா ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்!

Women with larger eyes attract men
 
அழகிய, பெரிய, ரவுண்டான கண்களுடன் கூடிய பெண்களைத்தான் ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்கிறதாம். இப்படிப்பட்ட பெரிய கண்களுடன் கூடிய பெண்களால், ஆண்களை ஈசியாக கவர் செய்து விட முடியுமாம்.ஈர்ப்புக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு ஆயுதம் இருக்கும். குறிப்பாக பெண்களிடம் ஏகப்பட்ட ஈர்ப்பு விஷயங்கள் இருக்கும். அதில் முக்கியமானது இந்த கண்கள். வெறும் கண்ணை வைத்தே ஒரு ஆணை ஈசியாக வீழ்த்தி விட முடியுமாம். கண்களில் அத்தனை சமாச்சாரங்கள் இருக்கிறதாம்.குறிப்பாக நன்கு பெரிதான, உருண்டையான, கண்களைக் கொண்ட பெண்களுக்கு ஒரு ஆணை வீழ்த்துவது என்பது ரொம்ப ஈசியானதாம். இவர்கள் தங்களது உடல் கவர்ச்சியை விட கண்களை வைத்தே யாரையும் காலி செய்து விட முடியுமாம்.அவ்வளவு ஈர்ப்பு சக்தி இருக்கிறதாம் இந்த முட்டைக் கண் பெண்களுக்கு.இப்படிப்பட்ட கண்களைக் கொண்ட பெண்கள் மன தைரியம் மிக்கவர்களாக, ஆளுமைத் திறன் படைத்தவர்களாக, எதையும் தைரியமாக நேருக்கு நேர் சந்திக்கக் கூடியவர்களாக இருப்பார்களாம். இவர்களை நேருக்கு நேர் கண்ணைப் பார்த்துப் பேசவே மற்றவர்களுக்கு தயக்கமாக இருக்குமாம். அப்படி ஒரு பார்வையாம் இவர்களுக்கு.அதேபோல பெரிய, உருண்டையான கண்களைக் கொண்டுள்ள பெண்களுக்கு மாத விலக்கு நெருங்க நெருங்க செக்ஸ் உணர்வுகள் அதிகம் பொங்கிப் பெருகுமாம். இதை கண்கள் மூலம் அதிகம் வெளிப்படுத்துகிறார்களாம். மேலும் இப்படி உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களுக்கு காம உணர்வும் கூட மற்ற பெண்களை விட அதிகமாக இருக்குமாம்.இதனால்தான் உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புகிறார்களாம். காரணம், இத்தகைய பெண்களிடம் எக்கச்சக்க இன்பம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே. அதேசமயம், உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களை திருப்தி செய்வது என்பதும் சற்று சிக்கலான காரியம்தானாம். அவர்களுக்கேற்ற ஆண்கள் கிடைப்பதும் முக்கியமானது என்பதை மனதில் கொள்க.உருண்டையான கண்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் நல்ல உடல்வாகு இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். குறிப்பாக நல்ல உயரமும், சற்று குண்டான உடலுடனும் கூடியவர்களாக இவர்கள் இருப்பார்களாம். சுருங்கச் சொன்னால் ஓங்கு தாங்காக இருப்பார்களாம்.குழந்தைப் பிறப்பிலும் கூட உருண்டையான கண்களைக் கொண்ட பெண்கள் மற்றவர்களை விட சற்று முன்னணியில் இருப்பார்களாம். அதாவது இவர்களிடம் மலட்டுத்தன பிரச்சினை என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.சரி உங்க கண்ணு எப்படி, நீங்க எப்படி...!
English summary
Most of the men are attracted to the women with large eyes. Scientists say, women with large eyes can easily attract men than others. Men generally find larger eyes on women more attractive. This has lead to a growing trend (especially in Asia) for many women to use cosmetics and contact lenses with larger limbal rings to give the illusion of larger eyes. Some have even done this permanently through cosmetic surgery.
Story first published: Monday, August 6, 2012, 14:26 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more