
டென்னிஸ் கோர்ட்டுக்குப் போன அனுபவம் உள்ளவர்களுக்கு அங்கு ஆடும் வீரர்கள், வீராங்கனைகளை வேடிக்கை பார்ப்பதே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும். குறிப்பாக பெண்கள் டென்னிஸைப் பார்க்கப் போனால் கூடுதல் அனுபவம் கிடைக்கும். காரணம், வீராங்கனைகள் விளையாடும்போது வெளிப்படுத்தும் கூச்சல்.
டென்னிஸ் வீராங்கனைகளிலேயே அதிக சத்தம் போடுபவர் என்ற பெருமை ரஷ்யாவின் மரியா ஷரபோவாவுக்கு உண்டு. அதேபோல அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும் சவுண்டு பார்ட்டிதான்.
இவர்களில் மரியாவின் சத்தத்திற்குப் பக்கத்தில் கூட யாரும் வர முடியாது. சமயத்தில் 100 டெசிபல் அளவையும் தாண்டுமாம் அவர் போடும் சத்தம். செரீனாவும் இதே ரேஞ்சுக்கு சத்தம் போடுபவர்தான்.
ஆனால் இப்படி விளையாட்டின்போது மட்டும் பெண்கள் அதிகம் சத்தம் போடுவதில்லையாம். மாறாக செக்ஸ் உறவின்போதும் கூட ஆண்களை விட பெண்கள்தான் அதிக சத்தம் எழுப்புகிறார்களாம்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 566 பெண்களும், 605 ஆண்களும் கலந்து கொண்டனர். இவர்களில் 94 சதவீத பெண்கள், செக்ஸ் உறவின்போது தாங்கள் அதிகம் சத்தம் எழுப்புவதாக கூறியுள்ளனர். 70 சதவீத ஆண்கள் கூறுகையில், எங்களது மனைவிமார்கள், உறவின்போது ஓவராக சத்தம் எழுப்புவதாக ஒத்துக் கொண்டனர்.
இதுகுறித்து செக்ஸ் நிபுணர் டிரேசி காக்ஸ் கூறுகையில், பெண்கள் ஏன் செக்ஸ் உறவின்போது அதிக சத்தம் எழுப்புகிறார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணம் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட குணம் காரணமாக இருக்கலாம். சிலர் மெதுவாக சத்தம் எழுப்புவார்கள், சிலர் அதீதமாக சத்தமிடுவார்கள். அவர்கள் அனுபவிக்கும் செக்ஸைப் பொறுத்து இது அமைகிறது.
பெண்கள் உச்சத்தைத் தொடும்போது அது சற்று வேகமாக இருக்கும். இதனால் ஏற்படும் சந்தோஷ ஆவேசத்தால் பெண்கள் அதீத சத்தம் இடும் வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் பல பெண்கள், இதுபோல அதிக சத்தமிட்டால் தங்களது பார்ட்னர்கள் மேலும் தூண்டப்பட்டு வேகமாக இயங்கி தங்களை மேலும் சந்தோஷப்படுத்துவார்கள் என்று கணக்கிட்டு கத்துவதற்கும் வாய்ப்புள்ளது என்றார்.
நீங்க எப்படி...?



Click it and Unblock the Notifications



