•  

பெட்ரூமில் சாக்குப் போக்கு சொல்லாதீங்க!

Top 5 excuses for not having sex
 
படுக்கை அறையில் தினம் தினம் யாராவது ஒரு சாக்குப் போக்கு சொல்லி சந்தோசத்தை ஒத்திப் போடுகின்றனராம். இன்னைக்கு எனக்கு மூடு இல்லை, எனக்கு உடம்பு சரியில்லை, எனக்கு வேலை இருக்கு போன்ற பல காரணங்களை சொல்லி துணையின் நினைப்பில் தண்ணீரை ஊற்றி அணைத்து விடுகின்றனராம்.தம்பதியரில் ஆண்கள் மட்டும் சாக்குப் போக்கு சொல்வதில்லை பெண்களும் கூட வயிறு வலி, பீரியட்ஸ் போன்ற காரணங்களை சொல்லி தட்டிக்கழிக்கின்றனராம். படுக்கை அறையில் மகிழ்ச்சியோடு துணையை நெருங்கும் போது மற்றொருவர் கூறும் சாக்குப்போக்கு காரணமாக என்ன நிகழ்க்கிறது. துணையின் பிரச்சினையை எப்படி போக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.எனக்கு டயர்டா இருக்குவீட்டில் வேலை எல்லாம் முடித்துவிட்டு படுக்கை அறைக்கு வரும் பெண்கள் சிறிதுநேரம் சந்தோசமாக இருக்கலாம் கணவரின் அருகில் நெருங்கினாலே புஸ் என்று ஆகிவிடும். அவர் குறட்டை சத்தத்தோடு தூங்கிப்போயிருப்பார். இருந்தாலும் லேசாக தொட்டு ஆசையை வெளிப்படுத்தினால், ப்ளீஸ் மா இன்னைக்கு எனக்கு ரொம்ப வேலை அதனால் ரொம்ப டயர்டா இருக்கு என்று சாக்குப் போக்கு கூறிவிட்டு படுத்துவிடுவார். இதனால் மனம் தளரவேண்டாம் உங்களவரை உற்சாகப்படுத்துங்கள். சின்னதாய் மசாஜ் செய்து அவரின் சோர்வினை போக்குங்கள் உங்களின் டச் தெரபியில் ஆட்டோமேடிக் ஆக அவரின் சோர்வு இருந்த இடம் தெரியாமல் பறந்து போய்விடும். அப்புறம் என்ன உங்கள் வழிக்கு வந்துதானே ஆகவேண்டும்.பீரியட்ஸ் வரப்போகுதுபடுக்கை அறையில் பெரும்பாலான பெண்கள் கூறும் சாக்குப் போக்கு இதுதான். இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு பீரியட்ஸ் வரப்போகுது அதனால் எனக்கு கை, கால் வலிக்குது என்னால இன்னைக்கு முடியாது என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார்கள். இது ஆண்களின் ஆசை தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். இருந்தாலும் சமாளித்துக் கொண்டு எங்க வலிக்குது நான் பிடிச்சு விடட்டா என்று நைசாக பேசி கை, கால் அமுக்கிவிடுவதைப் போல செய்து காரியத்தை சாதித்து விடலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர் நிபுணர்கள்.நான் கோபமா இருக்கேன்பெரும்பாலான வீடுகளில் தம்பதியரிடையே ஏற்படும் சின்ன சண்டைகள் பூதாகரமாக மாறுவது படுக்கை அறையில்தான். சமாதானம் என்ற பெயரில் கூடலுக்காக நெருங்குகையில் நான் கோபமா இருக்கேன். என்னை தொந்தரவு செய்யாதே என்ற ரீதியில் முதுகை காட்டிக்கொண்டு படுத்து விடுவார்கள். அப்படியே விட்டுவிட்டால் சிக்கல் பெரிதாகிவிடும் எனவே ஈகோ பார்க்காமல் தம்பதியரில் யாரோ ஒருவர் சரண்டராகத்தான் வேண்டும். ஊடலுடன் தொடங்கி பின்னர் கூடலில் முடியும் அந்த உறவின் சுகமே அலாதியானதுதான். செல்லக் கோபம், சிணுங்கள் என ஆரம்பித்து இனிமே அப்படி நடக்காமல் பார்த்துக்கிறேன் என்று மன்னிப்பு கேட்பது வரை நீடிக்கும்.தலை வலிக்குது இன்னைக்கு வேண்டாமே!சில நேரங்களில் தம்பதியர் இருவருமே கூறும் வார்த்தை தலைவலி. தேவையற்ற பிரச்சினைகளை மனதில் போட்டு அழுத்திக்கொண்டு அதை படுக்கை அறைவரைக்கும் கொண்டு போவதினாலேயே மகிழ்ச்சியான அந்த தருணம் கூட மண்ணாகிப் போய்விடும். மனைவிக்கு ஆசை இருந்து கணவருக்கு தலைவலியினால் மூடு இல்லாமல் போனால் அவ்வளவுதான். அதற்காக இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட வேண்டாம். தலையை அழுத்தி பிடித்துவிட்டு தலையில் மசாஜ் செய்யலாம். மேலும் எந்த இடத்தில் வலி அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் விரல்களால் அழுத்தி பிடித்துக்கொண்டிருந்தால் சில நிமிடங்களில் வலி காணமல் போய்விடும். பணிச் சுமையினால், தலைவலி அதிகமானால் காற்றாட இருவரும் பேசிக்கொண்டிருந்து விட்டு பின்னர் படுக்கை அறைக்குள் நுழையலாம்.எனக்கு நேரமே இல்லைஎப்பொழுது பார்த்தாலும் வேலை பற்றிய நினைப்புதான். அலுவலக வேலையைக் கூட வீட்டில் கொண்டு வந்து செய்துவிட்டு பின்னர் குடும்பத்தை கவனிக்க நேரம் இல்லை என்று புலம்புபவர்கள் இருக்கின்றனர். மனைவி ஆசையாக நெருங்கினாலே போதும் எனக்கு நேரமே இல்லை ப்ளீஸ் புரிஞ்சிக்கோயேன் என்று கெஞ்சுவார்கள். உண்மையில் புரிந்து கொள்ளவேண்டியது நீங்கள்தான். நேரமில்லை என்று கூறுவதை விட மனைவி, குழந்தைகளுக்கு சில மணிநேரங்களை ஒதுக்குங்கள். இல்லையெனில் ஒதுக்கப்பட்டுவிடுவீர்கள் என்று எச்சரிக்கின்றனர்.
English summary
In a study of 4000 British adults, one in five admitted to regularly making excuses for not having sex. In a world that’s becoming increasingly chaotic, it’s unsurprising to hear that the most exciting thing that happens between the sheets nowadays is simply sleeping. Here are the top five excuses we use for not having sex:
Story first published: Wednesday, August 8, 2012, 11:07 [IST]

Get Notifications from Tamil Indiansutras