ஆரோக்கிய முத்தம்
முத்தம் கொடுக்க நெருங்கும் போது சுவாசம் புத்துணர்ச்சியோடு இருக்கவேண்டும். ஆனால் ஒரு சிலருக்கு வாய் துர்நாற்றம் வீசும் இது உங்கள் துணையின் மூடினை அப்செட் ஆக்கிவிடும். இருமுறை பல் துலக்குவது பலரிடம் இல்லாத ஒன்று. அதனையும் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் குடிக்கிற தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.
சிகரெட் புகைப்பவர்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதோடு ஈறுகளும் பல்லின் எனாமலும்கூட கெட்டுப்போய்விடும். தம்பதி இருவருமே படுக்கைக்குப் போகும் முன் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மூச்சுக் குழாய் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை நோய், மலச் சிக்கல், சைனஸ் தொற்று, மூக்கில் கட்டி, சொத்தைப் பல் போன்ற காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். இதுதவிர பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக உண்பவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும். எனவே வாய் சுத்தம் பேணாதவர்களுக்கு முத்தம் கிடைப்பது கானல் நீராகிவிடும்.
உள்ளாடைகளில் கவனம்
பல பேர் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவதே இல்லை. 'உள்ளே போட்டுக்கொள்வதுதானே வெளியிலா தெரியப்போகிறது' என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம். ஆனால் அதுதான் சந்தோசமான உறவுக்கு ஆப்பு வைக்கும் செயல் என்பது தெரியாமலே இருக்கின்றனர். அழகான, சுத்தமான, கச்சிதமான உள்ளாடை அணிந்த கணவனை பார்க்கும் மனைவிக்கு ஆசை தீ கொழுந்து விட்டு எரியுமாம். அதேபோலத்தான் மனைவியின் கச்சிதமான சுத்தமான உள்ளாடைகள் கணவனின் உணர்ச்சியை தூண்டிவிடுமாம். எனவே தினமும் சுத்தமான, பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகளை அணிவதே நல்லது.
வியர்வை குளியல்
பொதுவாக வியர்வையில் எந்தவிதக் கெட்ட வாடையும் அடிப்பது இல்லை. ஆனால், வியர்வையுடன் பாக்டீரியா கிருமி சேர்ந்தாலோ அல்லது வேலையின் தன்மை, தட்பவெப்பம், மனக்கவலை, உடல் பருமன், தைராய்டு பிரச்னை, சிலவகை மருந்துகள் போன்ற காரணங்களைச் சார்ந்து வியர்வை நாற்றம் அடிக்கலாம். இரண்டு வேளை குளித்தால் வியர்வை நாற்றம் குறையும். படுக்கை அறைக்கு செல்லும்முன் உடலை சுத்தம் செய்து ஈரத்தை நன்கு உறிஞ்சும் பருத்தித் துணியினைப் பயன்படுத்த வேண்டும். வியர்வை அதிகம் சுரக்கும் இடங்களில் நறுமணப் பவுடரைப் பயன்படுத்தலாம். மேலும், இறுக்கமான உடைகளைத் தவிர்த்து தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
உறுப்புகள் சுத்தம்
உடல் சுத்தம் என்பது வெளிப்படையான உறுப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பது மட்டும் அல்ல; பிறப்பு உறுப்புகளையும் சேர்த்துதான். பெண்ணின் பிறப்பு உறுப்பில் சில திரவங்கள் இயல்பாக சுரந்துகொண்டே இருக்கும். இவற்றில் இருந்து துர்வாடை வருவதுடன் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு. பெண்கள் குளிக்கும்போது ஜனன உறுப்புகளைச் சுத்தப்படுத்துவதையும் சிறுநீர் கழித்த உடனே பிறப்பு உறுப்பைத் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி ஜனன உறுப்பைச் சுத்தப்படுத்த அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பும் சாதாரண தண்ணீருமே போதுமானது. ஏனெனில் வாய் வழி புணர்ச்சி கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் சுத்தத்தை எதிர்பார்ப்பார்கள்.
அதேபோல் ஆண் உறுப்பின் முன் தோலில் மெழுகு போன்ற திரவம் திரளும். இதனை சுத்தப்படுத்தாவிட்டால் துர்வாடை அடிக்கும். அங்கே கிருமித் தொற்று வளரவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வோர் ஆணும் குளிக்கும்போது ஆண் உறுப்பின் முன்தோலையும் தலைப் பகுதியையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும். அனைத்திற்கும் மேலாக உடல் உறவுக்குப்பின் பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது என்கின்றனர் நிபுணர்கள்.