•  

மனஅழுத்தம் இருந்தால் மணவாழ்க்கை பாதிக்கும்!

Sex
 
மனஅழுத்தம் என்பது மனரீதியான சிக்கல்களை மட்டும் ஏற்படுத்துவதில்லை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது. பணிச்சூழல் காரணமாக ஏற்படும் மனஅழுத்தம் மணவாழ்க்கையில் புயல்வீச காரணமாகிவிடுகிறது. படுக்கை அறைக்குள் நுழைந்தாலே சிலர் எரிச்சலும்,கோபமும் கொண்டு வாழ்க்கைத்துணையின் மீது அதனை திருப்பிவிடுவார்கள். எதன் மீதோ உள்ள கோபத்தை துணையின் மீது காட்டினால் பிரச்சினைகள் அதிகமாகும். எனவே மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை பாதிக்கும் காரணிகளையும், அவற்றை நீக்கும் வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.மனிதர்களுக்கு பாலியல் உணர்வுகள் இருந்தால்தான் அவர்களால் படுக்கை அறையில் ஆர்வத்துடன் செயல்பட முடியும். ஒருவருக்கு மட்டுமே ஆர்வம் இருந்து மற்றவர்களுக்கு அதில் ஆர்வம் குறைவாக இருந்தால் சரியான ஈடுபாடு இல்லாமல் அன்றைய உறவு உப்புச்சப்பின்றி முடிந்து போகும். எனவே உணர்வுகளை அதிகரிக்கும் வழிமுறைகளை ஆராயவேண்டும்.மனஅழுத்தம்மனஅழுத்தம் உணர்வுகளை பாதிக்கும் மிகப்பெரிய காரணியாகும். மனரீதியான சிக்கல்கள் ஏற்பட பணிச்சூழலும் காரணமாக அமைகிறது. எனவே மனஅழுத்தம் ஏற்படுத்தும் செயல்களை கண்டறிந்து அதனை நீக்க முயற்றி செய்யவேண்டும். படுக்கை அறைக்குள் நுழையும் பொழுது அலுவலகம் பற்றிய எண்ணங்களையும், வேலைப்பளு பற்றிய சிந்தனைகளையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு செல்லுங்கள். குடும்ப சூழ்நிலைகளால் பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படும். இது படுக்கை அறை வரை எதிரொலிக்கும். எதனால் இந்த நிலை என்பதை புரிந்து கொண்டு பெண்ணின் சிக்கல்களை தீர்க்க முயலவேண்டும்.உடல் சோர்வுவேளைப்பளுவினாலும், அதிக அலைச்சல் காரணமாகவும் ஆர்வக்குறைபாடு ஏற்படுவது இயல்புதான். ஆணுக்கு அலுவலகப்பணி எனில் பெண்ணிற்கு வீட்டு வேலை, குழந்தை பராமரிப்பு என வேலைகள் சரியாக இருக்கும். இருவருக்குமே உடல்சோர்வு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உறவில் ஈடுபடுவதில் ஆர்வம் குறைவாகவே இருக்கும். எனவே சோர்வை விரட்டும் பேச்சு, செயல்களில் ஈடுபடுவதன் மூலம் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யலாம்.தகவல் தொடர்பில் இடைவெளிஎந்த ஒரு தகவலையும் சரியான நேரத்தில் தெரிவிக்காவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். பிஸியான சூழலினால் இன்றைக்கு தம்பதியர் இடையே பேச்சுவார்த்தைகள் கூட குறைந்து வருகிறது. இது உடல்ரீதியான தொடர்புகளில் இடைவெளி ஏற்பட காரணமாகிறது. அவ்வப்போது சில ஐ லவ் யூ, சில சில்மிஷங்கள், சின்னச் சின்ன முத்தங்கள் என உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் உற்சாகத்தை ஏற்படுத்துவதின் மூலம் தாம்பத்திய உறவை உயிர்ப்பிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன் இருவரும் கலந்து ஆலோசியுங்கள். என்னைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டார். எங்களுக்கு இடையே எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது என்ற நம்பிக்கையே தம்பதியர் இடையே தாம்பத்யம் தழைக்க வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.உணர்ச்சிகள் கூடினால்தான் உறவில் சுவாரஸ்யம் அதிகரிக்கும். உணர்ச்சிகளை மழுங்கச்செய்யும் காரணிகளை கண்டறிந்து நீக்க முயற்சி செய்யுங்களேன் இல்லறத்தின் இனிமை கூடும்.English summary
Loss of libido or loss of sexual desire is a very common sex related problem faced by a lot of couples. This problem is characterized by lack of interest in sexual intercourse or other sex related activities by either of the partners in a relationship. The underlying cause of this can be due to a myriad of reasons but in most cases it is easily treatable by a combination of therapy and medication.
Story first published: Thursday, August 23, 2012, 10:50 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more