•  

வாசனையை வைத்து இணையலாம்! ஆய்வில் தகவல்!!

Kamasutra
 
பெண்களுக்கு கருமுட்டை உருவாகும் பருவத்தில் ஒருவித வாசனை எழும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாசனையை உணர்ந்து அந்த நேரத்தில் இணைவதால் எளிதில் கருதரிக்கலாம் என்பதற்காகவே இயற்கையான ஒரு வாசனை பெண்ணின் உடலில் எழுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர்.ஆய்விற்காக அவர்கள் 52 இளம் தம்பதியினரைத் தேர்ந்தெடுத்தார்கள். மனைவியருக்கு கருமுட்டை உற்பத்தியாகும் காலத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நைட்டியை அணியச் செய்தார்கள். பெண்கள் உடலில் வாசனை திரவியங்கள் பூசுவது, வேறுவித நறுமண உணவுகள் உண்பது, கருத்தடை சாதனங்கள், உடலுறவு அனைத்தும் தடைசெய்யப்பட்டன.மனைவியரின் உடைகளில் வரும் வாசத்தை கண்காணிக்குமாறு கணவன்களுக்குச் சொல்லப்பட்டது. மற்ற காலங்களை விட கருமுட்டை உருவாகும் காலத்தில் பெண்களின் உடைகளில் விரும்பத்தகுந்த வாசனை வருவதாக கணவன்கள் தெரிவித்தார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட காலத்தில் பெண்களின் உடலில் இயற்கையாக வாசனை வருவதை கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பெண்களின் கருமுட்டை முதிரும் காலத்தில் இந்த வாசனை வருவது தெரியவந்தது. உடனே அந்தப் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அந்த நாட்களில் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.பெண்களின் உடை வாசனையை வைத்து எந்த நேரத்தில் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் கருத்தரிக்கலாம் என்பதை கணவன்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாசனையை வைத்து பெண்ணுடன் இணையாமல் கருத்தடை சாதனமாக பயன்படுத்தக்கூடாது என்றும் ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
English summary
The Swiss researchers found that women taking oral contraceptives (which block conception by tricking the body into thinking it's pregnant) reported reversed preferences, liking more the smells that reminded them of home and kin. Since the Pill reverses natural preferences, a woman may feel attracted to men she wouldn't normally notice if she were not on birth control
Story first published: Sunday, August 26, 2012, 9:42 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more