ஒரு மாத பிரிவு என்பது கொஞ்சம் உலுக்கித்தான் போட்டிருக்கும். தொலைபேசியில் பேசிய கொஞ்சல்கள். கிசு கிசு குரலியே கிக் ஏறி உறங்காமல் தவித்த ராத்திரிகள் என தடுமாறிப் போயிருந்த இளசுகளுக்கு மகிழ்ச்சிகரமான ராத்திரிகள் இனி வரலாம். அதற்காக ஒருமாத பிரிவினை ஒரே ராத்திரியில் ஈடு கட்டி விடலாம் என்று இளசுகள் அவசரப்படவேண்டாம் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
ஒரு மாத காலம் உப்பு சப்பில்லாத சாப்பாடாக இருந்திருக்கும். பிரிந்திருந்த ஏக்கத்தில் எதையும் சரியாக சாப்பிட்டிருக்க மாட்டார்கள். எனவே தெம்பாக சாப்பிடுங்கள். பாதாம், முந்திரி, பேரிச்சை கலந்த பால் உங்களின் பலத்தை அதிகரிக்கும். உங்களுக்குப் பிடித்த உணவை உங்களின் மனைவியிடம் சொல்லி செய்யச்சொல்லுங்கள். அது கூடுதல் ருசியாக இருப்பதோடு, உங்கள் மீதான ஏக்கத்தையும், காதலையும் அதிகரிக்கும். பிரிந்திருந்த நாட்களில் மனைவியை எண்ணி கிறுக்கிய கவிதைகளை சமையலறையில் மனைவியின் பார்வையில் படுமாறு வைத்து இரவு நேரத்திற்கான எதிர்பார்பினை அதிகரியுங்கள். இரவு நேர உணவு சம்திங் ஸ்பெசலாக இருக்கட்டும். முடிந்தால் இருவரும் இணைந்தே சமையுங்கள். இணைந்தே சாப்பிடுங்கள்.
மனைவியின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்ததைப் போல சின்னதாய் ரொமான்சை உணர்த்தும் பரிசு வாங்கி வைத்திருங்கள். படுக்கை அறையில் சர்ப்ரைசாக கொடுத்து அசத்தலாம்.
திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே 30 நாள் பிரிவு என்பது அதிகம்தான். அதற்காக படுக்கை அறையில் அவசரப்படவேண்டாம். அணுகுமுறையில் அவசரம் காட்டினால் மிரட்சி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே மெதுவாக தொடங்குங்கள். எத்தனை நாள் ஏக்கத்தோடு காத்திருக்கிறேன் என்று உங்களின் செய்கையிலே உணர்த்துங்கள். இதனால் மனைவி நெகிழ்ச்சியில் கொஞ்சம் இறங்கி வருவார்.
பொதுவாகவே பெண்களுக்கு கூச்சம் அதிகம் இருக்கும். தங்களின் உணர்வுகளை, தேவைகளை அதிகம் வெளிப்படுத்த தயங்குவார்கள். எனவே இத்தனை நாள் பிரிவில் நீங்கள் எப்படி தவித்தீர்கள் என்பதை படிப்படியாக உணர்த்துங்கள். நீ இல்லாம எப்படி தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா? ஒருமாசமா சரியா தூங்கவே இல்லை என்று உங்களின் தவிப்பை காதோரம் சென்று கிசுகிசுப்பாய் தெரிவியுங்கள். அந்த வார்த்தையில் சொக்கிப்போவார் உங்கள் புது மனைவி.
சின்ன சின்ன சில்மிஷங்களில் தொடங்கி விளையாட்டாய் தொடருங்கள். அப்புறம் உங்கள் மனைவி உங்கள் வழிக்கு வந்துதான் ஆகவேண்டும். சத்தமில்லாத முத்தம், இம்சிக்காத அணைப்பு என ஆரம்பித்த விளையாட்டு அதிரடியாய், ஆவேசமாய் மாறினாலும் அப்புறம் கேள்வி எழாது.
அமைதியான அலைகள் இல்லாத கடலினைப் பார்க்க சுவாரஸ்யம் இருக்காது. அதற்காக சுனாமியாக மாறினாலும் அச்சம்தான் ஏற்படும். எனவே உங்களின் காதலை, அடக்கிவைத்திருந்த உணர்வுகளை உயிர்வரை சென்று தாக்குமாறு உணர்த்துங்கள். பிரிவு என்பது இனி நமக்கில்லை என்பதை உங்கள் செய்கையிலேயே தெரிவிப்பதன் மூலம் உங்களின் தாம்பத்திய வாழ்க்கைக்கு சந்தோசமான அடித்தளம் அமையும.
புதுமணத் தம்பதிகளின் வீடுகள் தோறும் இன்று விழாக் கோலம்தான்...இருந்தாலும் சிக்கல் இல்லாமல் தொடங்குங்கள் புது வாழ்க்கையை...