•  

சிறுவர்கள் செக்ஸ் 'சீன்' பார்த்தால் சிக்கலாகும்: ஆய்வில் தகவல்

Kamasutra
 
சினிமாவில் ஒளிபரப்பாகும் காதல் சீன்களையும், நெருக்கமான சீன்களையும் அதிகமாக பார்க்கும் சிறுவர்கள் பருவ வயதிற்கு வந்த பின்னர் பல பெண்களுடன் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபடுவார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டார்ட்மவுத் பல்கலைகழக உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுவரை உடைய 1,228 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவதுள்ளது.



இதேபோல் சிறுவயதில் இருந்து இணையத்தில் ஆபாசப் படங்களை பார்ப்பவர்கள் பின்னாளில் பல பெண்களுடன் செக்ஸ் உறவில் ஈடுபடுவதாக 1200 சிறுவர்களிடம் மேட்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.



தற்போது இணையதளங்களை பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இன்றைக்கு இணையங்களில் வயது வந்தவர்களுக்கான அம்சங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் இணையத்தை பயன்படுத்தும் அநேகமான சிறுவர்கள் ஆபாச படங்களின் மீது ஈர்க்கப்பட்டு அவற்றை அதிகம் பார்க்கின்றனர். இதன் காரணமாக பலர் அந்த படங்களுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.



கடந்த 1998 - 2004 வரை வெளிவந்த படங்களை விட பின்னர் வந்த படங்களில் ஆபாச காட்சிகள் தாராளமாகவே காணப்படுகின்றன. இதுவும் சிறார்களின் பாலியல் தூண்டுதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.



இந்த ஆய்வினை மேற்கொண்ட NSPCC எனும் அமைப்பு மேலுமொரு தகவலையும் வெளிவிட்டுள்ளது, சிறுவயதில் இணையத்தில் பார்த்த ஆபாச காட்சிகளை பெரியவர்கள் ஆனபின்னர் தமது காதலிகளை வைத்து செய்து காட்டுமாறு கோருவதாக அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
While it has long been assumed that risqué movies can cause risky behavior, there is now scientific data to back it up.According to a new study conducted by psychological scientists at Dartmouth University, children who watch features films with sexual content have a tendency to start having sex at a younger age, have more casual sexual partners, and engage in unsafe sexual practices.

Get Notifications from Tamil Indiansutras