ஒலிம்பிக் போட்டிகள் முடிந்துவிட்டன. ஆனால் ஒலிம்பிக் கிராமத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை விட வீரர்களுக்கு வழங்கப்பட்ட காண்டம் பற்றிதான் சுவாரஸ்யமான தகவல்கள் உலாவருகின்றன.
11000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பரிசுகளை மட்டும் பெற்றுக்கொண்டு வரவில்லை மாறாக செக்ஸ் விளையாட்டிலும் வெற்றிகரமாக பங்கேற்றுத் திரும்பியுள்ளனர்.
விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு போட்டியில் வெற்றி பெறவேண்டுமே என்ற மனஅழுத்தம் ஏற்படும். போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மது அருந்தவும், புகைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்ள தடை ஏதும் இல்லை. இதன் மூலம் அவர்கள் மன அழுத்தத்தினை போக்கிக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடலுறவின் உச்சக்கட்டத்தின் போது கார்டிசோல், ஆக்ஸிடோசின் போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வேகமாக ஓடுவதற்கும், நீளம்தாண்டுதல் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு அது உற்சாகத்தை அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
1988 ம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில்தான் வீரர்களுக்கு முதன் முதலில் காண்டம் சப்ளை செய்யப்பட்டது 1990ம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் காண்டம் சப்ளை செய்யும் மிஷினில் இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை காண்டம் நிரப்பப்பட்டது. 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் 70000 ஆயிரம் காண்டம்கள் சப்ளை செய்யப்பட்டன. சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற போட்டியில் ஒரு லட்சம் காண்டம்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.