மனிதர்களுக்கு பாலியல் உணர்வுகள் இருப்பது அவசியம்தான். இந்த எண்ணமும் செயலும்தான் மனிதர்களை மனஅழுத்தம் இன்றி வாழ வைக்கின்றது என்கின்றனர் நிபுணர்கள். பாலியல் ரீதியான பிரச்சினைகளும், தாம்பத்ய உறவில் ஏற்படும் இயலாமையும் மனிதர்களை மெல்லக் கொன்று நோய்களில் தள்ளிவிடுகிறது. எனவே செக்ஸ் உணர்வுகள் ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதான் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவில் அச்சம் அகற்றப்படவேண்டும் ஏனெனில் அச்சம்தான் முதல் எதிரி என்கின்றனர் நிபுணர்கள். படுக்கை அறைக்குள் வந்து விட்டு என்ன செய்வது என்று செய்வதறியாமல் தவிக்கும் துணையை யாருக்குத்தான் பிடிக்கும். எனவே தட்டுத் தடுமாறியாவது முன்னேறும் ஆணைத்தான் பெண்ணுக்குப் பிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோலத்தான் பெண்ணுக்கு வெட்கம் அவசியம்தான் அதற்காக எதற்கெடுத்தாலும் வெட்கப்பட்டு இழுத்து போர்த்திக்கொள்ளும் பெண்ணை ஆணுக்குப் பிடிக்காது என்கின்றனர் நிபுணர்கள். அச்சமோ, வெட்கமோ எதுவுவே அளவாக இருப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் செக்ஸ் பற்றிய புரிதல் இருக்கவேண்டும். ஏனெனில் ஆணும், பெண்ணும் இணைவது இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல, மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் ஒருவித ரிலாக்ஸ் கிடைக்கிறது என்பதற்காகத்தான் இன்றைக்கு பெரும்பாலானோர் உறவில் ஈடுபடுகின்றனர். எந்த வித புரிதலும் இல்லாமல் கடனே என்று உறவில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே ஆணோ, பெண்ணோ ஆசையுடன் அணுகவேண்டும். அன்பாக ஒத்துழைப்பு தரவேண்டும் அப்பொழுதுதான் உறவில் திருப்தி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கலவியின் போது கஷ்டங்களை தரக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். ஒருசில ஆண்கள் பெண்களை சிரமப்படுத்தி அவர்களின் கஷ்டத்தை அணு அணுவாக ரசித்து உறவில் ஈடுபடுவார்களாம். அது மனரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனவே சூடு வைப்பதோ, கடித்து காயப்படுத்துவதோ, சாட்டையால் அடிப்பதோ உறவிற்கு ஏற்றதல்ல. மென்மையான கையாளுவது அவசியம் என்கின்றனர்.
தம்பதியர்களுக்கிடையே சின்ன சின்ன ஊடல்கள் ஏற்படுவதைப் போல சின்ன சின்ன ரொமான்ஸ் இருக்கவேண்டும் இதன்மூலம் தாம்பத்ய உறவில் மகிழ்ச்சிகரமான அனுபவத்தை பெறமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
செக்ஸ் பற்றிய சிந்தனை, அதைப்பற்றிய உணர்வுகள் அவ்வப்போது கிளம்ப வேண்டும். புதிதாய் திருமணமானபோது எந்த அளவிற்கு உற்சாகமாக உறவில் ஈடுபட்டீர்களோ அதே உற்சாகத்தோடு ஒவ்வொரு முறையும் மனைவியை அணுகவேண்டும். ஏனெனில் தாம்பத்ய உறவினையும், தம்பதியர்களையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே பாலியல் சிந்தனைகள்தான் என்கின்றனர் நிபுணர்கள்.