இன்னைக்கு சூப்பரா இருந்துச்சு. தினமும் இதே மாதிரி கிடைக்குமா? என்று மனைவி கேட்டால் கணவருக்கு பெருமை பிடிபடாது. அதே சமயம், என்ன பிரச்சினை இன்னைக்கு சரியா அமையலையே என்று சொல்லிவிட்டால் போதும் அன்றைக்கு தூக்கம் அவுட். நம்மால் துணையை திருப்தி படுத்த முடியலையே என்ற கவலையே கணவரை அரிக்க ஆரம்பித்துவிடும். திருப்தியான செக்ஸ் வாழ்க்கை அமைய இருவரும் ஒருவருக்கொருவர் பேசி ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை களைய முற்படவேண்டும்.
ஆண்களுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால் அவர்களுக்கு சுரக்கும் செக்ஸ் ஹார்மோனின் அளவு குறைந்துவிடுமாம். இதனால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கூறும் நிபுணர்கள் குறைந்த பட்சம் 6 மணிநேர உறக்கம் அவசியம் என்கின்றனர். கணவன் - மனைவிக்கு இடையே ஈகோ பிரச்சினை எழுந்தாலும் அது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
கணவரை விட மனைவி அதிகம் சம்பாதித்தாலே, கணவரை விட உயரம் கூடுதலாக இருந்தாலோ, கூடுதல் நிறமாக இருந்தாலோ கணவருக்கு ஒருவித தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டு மனைவியை சரியாக திருப்தி படுத்த முடியாத நிலை ஏற்படுமாம். இதுதொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 47 தம்பதியர் பங்கேற்றனர். அவர்களிடம் செக்ஸ் வாழ்க்கை சரியாக இல்லை என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. மனைவி தன்னைவிட உயர்வானவள் என்று கணவர் கருதுவதால் மனைவியிடம் ஆர்வத்துடன் இருக்க முடிவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தாழ்வுமனப்பான்மையோடு செயல்படாமல் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ்வதனால் மட்டுமே தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தியை அடையமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.