•  

பக்கத்தில வந்தாலே வாசனை மயக்குதே!

Romance Tips
 
மணம் மயக்கும் வாசனை மனைவியிடம் இருந்து எழுந்தாலே கணவருக்கு மூடு கிளம்பிவிடும். இன்னைக்கு நான் ரெடி என்பதை அந்த வாசனையே உணர்த்திவிடுவதோடு ஆண்களுக்கும் கிளர்ச்சியை ஏற்படுத்திவிடுமாம். அதனால்தான் தலைக்கு குளித்து விட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருக்கும் மனைவியை பார்க்கும் கணவர்கள் அன்றைக்கு மந்திரித்து விட்ட கோழி மாதிரிதான் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.பாலுணர்வு தூண்டுதல் வாசனைகளால் எழுப்பப்படுகிறது. மூக்கில் நுகரும் வாசனை மூளையை சென்றடைந்து செக்ஸ் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது. சாதாரணமாகவே பெண்களின் உடல் வாசனை ஆண்களை ஈர்க்கும். அதுவும் உடலுறவுக்காக மனைவியை நெருங்கும் கணவனுக்கு மனைவியின் வாசம் - மணக்கும் பர்ஃபியூமாக இருந்தாலும் சரி, தலையில் சூடியிருக்கும் மல்லிகைப் பூவின் வாசமாக இருந்தாலும் சரி இவை எதுவும் இல்லாமல் இருந்தால் கூட பெண்ணின் இயற்கையான வியர்வை வாசமேகூட அந்த நேரத்தில் ஆண்களை கிறங்கச் செய்யுமாம்.மனைவியிடம் இருந்து கிளம்பும் இந்த ஒருவித விசேச வாசனை கணவரின் கிளர்ச்சியை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வேலை எல்லாம் முடித்துவிட்டு அயர்ச்சியோடு வந்து படுத்தாலும் கூட உறவுக்கு தான் தயார் என்று கணவருக்கு உணர்த்தும் வகையில் மனைவியின் உடலில் இருந்து ஸ்பெசல் வாசனை கிளம்புமாம்.சில பெண்களுக்கு ஜவ்வாது வாசனை இருக்கும், சிலருக்கு மரிக்கொழுந்து வாசனை இருக்கும், சில பெண்களுக்கு செண்பகப்பூ வாசனை இருக்கும். இந்த விசேச வாசனைதான் ஆண்மைக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். வாசனையே வராவிட்டால் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது மல்லிகைப் பூ அலுவலகம் விட்டு போகும்போதே கை நிறைய மல்லிகைப் பூவோடு போங்கள். உங்கள் மனைவி அதை தலையில் வைத்துக்கொண்டு இரவில் அருகில் வந்தால் மனம் மயக்கும் வாசனை ஆளை மயக்காதா என்ன?.அதுபோலதான் பெண்ணுக்கும் தனக்குப் பிடிதமான ஆணின் வாசம் ரொம்பவும் பிடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அந்த நேரத்தில் ஆணின் வியர்வை வாசனை ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்துமாம். உடலில் இருந்து கிளம்பும் வாசனையை வைத்து இன்றைக்கு உங்க துணை தயாராக இருக்கிறாரா என்று தெரிந்து கொண்டு முன்னேறலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
English summary
We would all agree that the most important sex organ is the brain. That's where our sex drive and reproductive behavior are programmed. But when it comes to sex and mating, most important sensory organ may be our sense of smell. Decades of research demonstrates that in our mating behavior, humans tend to follow their noses.
Story first published: Friday, August 3, 2012, 12:00 [IST]

Get Notifications from Tamil Indiansutras