•  

பொண்டாட்டிக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கோங்க!

Sex
 
ஆய கலை, ஆயா கலை... இதையெல்லாம் மறந்துடுவோம். புருஷனுக்கு பிடிச்ச மாதிரி மனைவியும், மனைவிக்குப் பிடிச்சா மாதிரி புருஷனும் நடந்து கொண்டால் மட்டுமே காமக் கலை கை கூடும், களிப்பூட்டும்.எந்த பொசிஷனை தேர்வு செய்தால் மனைவியை அசரடிக்கலாம், எப்படி கிஸ் தரலாம், எப்படிக் கட்டிப்பிடிக்கலாம் என பல கணவன்மார்கள் 'கால்குலேட்டிவாக' யோசித்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் எப்படியெல்லாம் 'ஆளுமையைக்' காட்டலாம் என்று புஜபல பராக்கிரமம் குறித்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த திட்டமிடலே தேவையில்லை. மனைவியின் மனசறிஞ்சு, அவரின் மூடு தெரிந்து, பரிவுடனும், காதலுடனும் அணுகினால் மட்டுமே உறவு உண்மையான உற்சாகத்தைத் தரும் என்பதே அனுபவசாலிகளின் கூற்றாக உள்ளது.மனைவிக்குப் பிடித்தாற் போல நடந்து கொள்ளும் கணவர்களுக்குத்தான் செக்ஸ் உறவு சிறப்பாக இருக்கிறது என்பதும் அனுபவசாலிகளின் கருத்தாகும்.முதலில் ஆண்கள் சுத்தபத்தமாக இருக்க வேண்டும். படுக்கை அறைக்குள் போவதற்கு முன்பு சுத்தமான குளியலைப் போடும் ஆண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ராத்திரி வந்தாச்சா, லைட்டா அணைச்சாச்சா, விளையாட்டா ஆரம்பிக்கலாமா என்ற ரீதியில்தான் பல ஆண்கள் உறவுகளை அணுகுகிறார்கள். இதை மனைவிமார்கள் கடுமையாக வெறுக்கிறார்களாம்.மாலையிலேயே தயாராக ஆரம்பிக்க வேண்டும். முகத்தில் தாடி கரடுமுரடாக வளர்ந்திருந்தால், முன்கூட்டியே ஷேவ் செய்து (சில பெண்களுக்கு லேசான தாடி இருந்தால் பிடிக்கும், அப்படியாப்பட்டவர்கள் தாடியைத் தொட வேண்டாம்), அழகாக ஒரு குளியல் போட்டு, மனைவிக்குப் பிடிக்கும் என்றால், லைட்டாக பர்யூமை அடித்துக் கொண்டு, ஜில்லென்று மனைவியை வரவேற்கத் தயாராக வேண்டும்.குளிக்கும்போது நன்கு உடம்பை சுத்தமாக் சோப்பு போட்டுத் தேய்த்து குளிங்க. காக்கா குளியல் போடும் வேலையே கூடாது. குறிப்பாக அக்குள் உள்ளிட்ட இடங்களை நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும். நிறையப் பேருக்கு அக்குளை சுத்தமாக பராமரிப்பதில் அதிக அக்கறை இருக்காது.அவர் உங்கள் மனைவி. எனவே அந்த மரியாதையுடன் அவரைப் பார்க்க வேண்டும். இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருக்கும் குடும்பத்தில் இருவருமே மாலையில் ஆய்ந்து ஓய்ந்து போய் வருவார்கள். எனவே அப்படிப்பட்ட நேரத்தில் மாலையில் முன்கூட்டியே வீட்டுக்கு வந்து மனைவிக்கு டீ, காபி போட்டு கொடுத்து அவரை முதலில் ஆசுவாசப்படுத்த வேண்டும். பிறகு இரவு சாப்பாட்டில் மனைவியுடன் சேர்ந்து நீங்களும் உதவி செய்யலாம். அதன் பிறகு படுக்கைக்குகப் போகும்போது மனைவிக்கு கை, கால்களை அமுக்கி விடலாம். இப்படிச் செய்தால்தான் மனைவிக்கு உங்கள் மீது பாசம் பொங்கும், காதல் வெளிக் கிளம்பும். உறவும் சுகப்படும்.அதேபோல, உறவுக்கு முன்பே பாத்ரூம் போய் அதை இதை முடித்துக் கொண்டு கை, கால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு வந்து விடுங்கள். கடைசி நேரத்தில் உள்ளே போனால் மனைவிக்குள் இருக்கும் மூடு வெளியே போய் விடும். அதேபோல சிறுநீர் கழிப்பதாக இருந்தால், சோப்பு போட்டு அந்த இடத்தை சுத்தமாக கழுவி விட்டு வாருங்கள். இல்லாவிட்டால் தேவையில்லாமல் உங்கள் மனைவிக்கு நோய்த் தொறறு ஏற்படலாம்.சில ஆண்களுக்கு தம்மு, தண்ணி என சில 'நல்ல 'பழக்கங்கள் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் உறவுக்கு முன்பாக சில மணி நேரங்களுக்கு முன்பே அவற்றுக்குக் குட்பை சொல்லி விடுவது நல்லது. சிகரெட் பிடித்த வாயோடு மனைவியின் வாய்க்குப் பக்கத்தில் போனால் அவருக்குள் காதல் வராது, மாறாக வாந்திதான் வரும். அதேபோல மது அருந்துவதையும் அன்றைக்கு மட்டுமாவது தள்ளிப் போடுங்கள். நன்கு வாயைக் கழுவி விட்டு, மவுத் பிரஷ்னர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கமகமக்க போங்க, அப்பத்தான் உறவும் மணமணக்கும்.இப்படி ஆண்களும் சில நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால்தான் பெண்களுக்கு அவர்களை மேலும் பிடிக்கும், ஆசையும் பிறக்கும், உறவும் வலுப்படும்.
English summary
Some men are not really showing any interest on healthy sex with their wives. Women hate those kind of men, who are not following neatness. So do concentrate on cleanliness and neatness before indulging in sex.
Story first published: Thursday, August 2, 2012, 17:15 [IST]

Get Notifications from Tamil Indiansutras

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Indiansutras sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Indiansutras website. However, you can change your cookie settings at any time. Learn more